கடுந்தொடைக் காவினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
இவர் தன் பாடலால் பெயர் பெற்ற புலவர். காட்டில் கடுந்தொடையால் அம்பு எய்பவரை இவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
==பாடல் தரும் செய்தி==
பாலைத் திணைப் பாடலாகிய இதில் பொருள் தேடத் தலைவன் சென்ற நாட்டில் இருக்கும் கொடுமைகள் அடுக்கிக் காட்டப்படுகின்றன.
* தன் 'நலம் நல்கு ஒருத்தி' தன் மலர்க் கண்களைக் காட்டுவாளாம். அவள் யாழ் போல இனிக்க இனிக்கப் பேசுவாளாம்.
* கொம்பால் உழும் களிறுகள் அங்கு இருக்குமாம்.
* மூங்கில் சோலை வெளிகளில் வெளில்(அணில்) விளையாடுமாம். அணிலை எய்ய விடும் அம்பு ஆள் மேல் பாயுமாம்.
* இப்படிப் பாய்ந்த அம்பால் வீழ்ந்தவர்களை அவர்கள் மேட்டுப் பதுக்கையில் போட்டுவிடுவார்களாம். இப்படிப் போட்ட பதுக்கைகள் எண்ணிலாதவை அங்கு இருக்குமாம்.
* வழி பிரியும் சந்திப்புக் கவலைகளில் இச் செய்தி அறிந்தோர் சொல்லக் கேட்டு யாரும் அந்த வழியில் செல்லமாட்டார்களாம்.
* கையில் பொருள் இல்லையாயினும் அவ் வழியில் செல்வோரைக் கொல்லவேண்டும் என்பது அந் நாட்டு அறன் இல்லா வேந்தன் ஆணையாம்.
 
இப்படிப்பட்ட வழியில் அவர் பொருள் தேடச் சென்றிருக்கிறாரே!
"https://ta.wikipedia.org/wiki/கடுந்தொடைக்_காவினார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது