உ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''உ''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன...
 
No edit summary
வரிசை 13:
* இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது '''உ''', '''ஊ''' வுக்கு இன எழுத்தாக அமையும்.
* பொருள் அடிப்படையிலும், வடிவ அடிப்படையிலும்கூட '''ஊ''', '''உ''' வுக்கு இன எழுத்தாக அமையும்.<ref>இளவரசு, சோம., 2009. பக். 44</ref>.
 
==சொல்லில் உகரம் வரும் இடங்கள்==
தனி '''உ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''உ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து ஙு, ஞு, டு, ணு, ரு, லு, வு, ழு, ளு று, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டு, ரு, லு போன்ற எழுத்துக்களும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். ''டுவிட்டர்'', ''ருக்குமணி'', ''லுக்மன்'' போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
 
=="உ" வும் மெய்யெழுத்துக்களும்==
'''உ''' உடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து உகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>. உகர உயிர்மெய்களைக் குறிப்பிடுவதற்கு அகரமேறிய மெய்கல் மூன்று வகையாகத் திரிபு அடைகின்றன. சில எழுத்துக்களுக்குக் கீழ் நிலைக்குத்தான சிறு கோடு ஒன்று இடப்படுகிறது. ''பு'', ''சு'', ''பு'', ''யு'', ''வு'' என்னும் எழுத்துக்கள் இவ்வகையின. எழுத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி வளைவாகக் கோடு வரைவது இன்னொரு வகை. ''கு'', ''டு'', ''மு'', ''ரு'', ''ழு'', ''ளு'' என்பன இவ்விரண்டாம் வகையைச் சேர்ந்தவை. ''ஞு'', ''ணு'', ''து'', ''நு'', ''லு'', ''று'', ''னு'' ஆகியவை மூன்றாவது வகையைச் சேர்ந்த எழுத்துக்கள்.
 
 
18 மெய்யெழுத்துக்களோடும் உகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
 
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
!colspan='2'|மெய்யெழுத்துக்கள்!!rowspan="2"|சேர்க்கை!!colspan='2'|உயிர்மெய்கள்
|-
!வரிவடிவம்!!பெயர்!!வரிவடிவம்!!பெயர்
|-
|க்||இக்கன்னா||க் + உ||கு||கூனா
|-
|ங்||இங்ஙன்னா||ங் + உ||ஙு||ஙூனா
|-
|ச்||இச்சன்னா||ச் + உ||சு||சூனா
|-
|ஞ்||இஞ்ஞன்னா||ஞ் + உ||ஞு||ஞூனா
|-
|ட்||இட்டன்னா||ட் + உ||டு||டூனா
|-
|ண்||இண்ணன்னா||ண் + உ||ணு||ணூனா
|-
|த்||இத்தன்னா||த் + உ||து||தூனா
|-
|ந்||இந்தன்னா||ந் + உ||நு||நூனா
|-
|ப்||இப்பன்னா||ப் + உ||பு||பூனா
|-
|ம்||இம்மன்னா||ம் + உ||மு||மூனா
|-
|ய்||இய்யன்னா||ய் + உ||யு||யூனா
|-
|ர்||இர்ரன்னா||ர் + உ||ரு||ரூனா
|-
|ல்||இல்லன்னா||ல் + உ||லு||லூனா
|-
|வ்||இவ்வன்னா||வ் + உ||வு||வூனா
|-
|ழ்||இழ்ழன்னா||ழ் + உ||ழு||ழூனா
|-
|ள்||இள்ளன்னா||ள் + உ||ளு||ளூனா
|-
|ற்||இற்றன்னா||ற் + உ||று||றூனா
|-
|ன்||இன்னன்னா||ன் + உ||னு||னூனா
|}
 
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உ" இலிருந்து மீள்விக்கப்பட்டது