ஊ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''ஊ''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன...
 
No edit summary
வரிசை 10:
* இடம், முயற்சி என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கும்போது '''ஊ''', '''உ''' க்கு இன எழுத்தாக அமையும்.
* உங்கு, ஊங்கு போன்ற சொற்களில் உகரத்துக்குப் பதிலாக ஊகாரம் இடம்பெற்றாலும் பொருள் மாற்றம் இல்லாதிருப்பதைக் காணலாம். இதனால் '''ஊ''', '''உ''' க்குப் பொருள் அடிப்படையில் இன எழுத்து ஆகிறது.
 
==சொல்லில் ஊகாரம் வரும் இடங்கள்==
தனி '''ஊ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''ஊ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. எனினும் யகர மெய்யும் ஊகாரத்துடன் சேர்ந்து சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல். இதிலிருந்து ஙூ, ஞூ, டூ, ணூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ றூ, ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வருவது மரபல்ல என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களையோ பெயர்களையோ தமிழில் எழுதுவோர் சிலர் டூ, ரூ, லூ போன்ற எழுத்துக்களும், சில வேளைகளில் றூ வும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். ''டூர்'', ''ரூபா'', ''லூட்டி'', ''றூபன்'' போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஊகாரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
"https://ta.wikipedia.org/wiki/ஊ" இலிருந்து மீள்விக்கப்பட்டது