"பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

No edit summary
[[File:Synapse Illustration2 tweaked.svg|thumb|right|250px|ஒரு நரம்பின் வேரிழை மற்றும் மற்றொன்றின் சிறு நரம்பிழை ஆகியவற்றிற்கு இடையிலான இணைவளைவின் ஒரு வரைபடம்.இணைவளைவுகள் நரம்பிழைகளின் சிறப்பு இடைவெளிகளாகும்.வேரிழை முனைமையத்தை அடையும் மின் தூண்டுதல்கள், வேதிச் செய்தித் தொகுப்புக்களை (நரம்புக்கடத்திகள்) விடுவிக்கின்றன. இவை அடுத்துள்ள சிறு நரம்பிழையின் மீதுள்ள ஏற்பிகளின் இணைவளைவுகளின் பிளவுகளில் பரவி, இரண்டாவதாக உள்ள வேரிழையில் ஒரு மின் தூண்டுதல் உந்தப்படுவதை தற்காலிகமாகப் பாதிக்கின்றன. நரம்புக் கடத்திகளை விடுவித்ததும் அவை விரைவாக வளர்சிதை மாற்றம் அடைகின்றன அல்லது நரம்பு வேரிழையில் மீண்டும் உந்தப்படுகின்றன. மனத் தளர்ச்சி-எதிர் மருந்துகள் இந்தச் செயல்முறைகளின் ஒட்டு மொத்த சமநிலையின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.]]
செரட்டோனின் பிற நரம்புக்கடத்தி அமைப்புகளை ஒழுங்கமைப்பதில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது. குறைவான செரட்டோனின், இந்த அமைப்புகள் அசாதாரணமான மற்றும் ஒழுங்கற்ற முறைகளில் வேலை செய்ய அனுமதிக்கலாம்.<ref name="IntegrativeSerotonin">{{Harvnb|Barlow|2005| p=226}}</ref> "இசைவுடமை கருதுகோள்" (permissive hypothesis), குறைவான செரட்டோனின் அளவுகள் மற்றொரு ஒற்றை அமீன் நரம்பணுக் கடத்தியான நோர்பைன்ஃபெரின் அளவுகள் குறைவதை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது.<ref>{{vcite web |author=Shah N, Eisner T, Farrell M, Raeder C|year=1999 |month=July/August |url=http://www.pswi.org/professional/pharmaco/depression.pdf |title=An overview of SSRIs for the treatment of depression |work=Journal of the Pharmacy Society of Wisconsin |accessdate=2008-11-10| format=PDF}}</ref> சில மனத் தளர்ச்சி - எதிர் மருந்துகள் நோர்பைன்ஃபெரின் அளவுகளை நேரடியாகவே அதிகரிக்கின்றன. மற்றவை மூன்றாவது ஒற்றை அமீன் நரம்பணுக்கடத்தியான டோபமைனின் அளவை அதிகரிக்கின்றன. இவ்வாறான ஆய்வுக் கண்டறிதல்களின் காரணமாக, மனத் தளர்ச்சியின் ஒற்றை அமீன் கருதுகோள் உருவானது.
தற்காலத்தியக் கருத்துரு, சில நரம்புக்கடத்திகளின் குறைபாடுகள் மனத் தளர்ச்சியில் அவற்றின் ஒத்த கூறுகளுக்குப் பொறுப்பானவை எனக் கூறுகிறது. "விழிப்பாக இருத்தல், ஆற்றல் ஆகியவற்றிற்கு நோர்பைன்ஃபெரின் தொடர்புடையதாக இருக்கலாம்; அதே நேரம் கவனம் செலுத்துதல், வாழ்வில் ஆர்வம் ஆகியவற்றுடனும் அது தொடர்பு கொண்டுள்ளது. செரட்டோனின் குறைவு, கவலை, மிகை விருப்பு, விரும்பா இணக்கம் ஆகியவற்றுடன் தொடர்புறுகிறது. கவனம் செலுத்துதல், ஊக்குவிக்கப்படுதல், இன்பம் அனுபவித்தல், வெகுமதி மற்றும் வாழ்வில் ஆர்வமுடமை ஆகியவற்றுடன் டோபமைன் தொடர்புற்றுள்ளது.<ref name="pmid18494537">{{vcite journal |author=Nutt DJ |title=Relationship of neurotransmitters to the symptoms of major depressive disorder |journal=Journal of Clinical Psychiatry |volume=69 Suppl E1 |pages=4–7 |year=2008 |pmid=18494537}}</ref> இந்தக் கருத்துருவை முன்வைப்பவர்கள் மிகவும் முதன்மையாக உள்ள அறிகுறிகளைப் பாதிப்பதான, இயக்கவியல் கொண்ட மனத் தளர்ச்சி - எதிர் மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கின்றனர். கவலை மற்றும் எரிச்சல் உணர்வு அதிகம் கொண்ட நோயாளிகளுக்கு எஸ்எஸ்ஆர்ஐ அல்லது நோர்பைன்ஃபெரின் ரெபுடேக் தணிப்பி கொண்டு சிகிச்சை அளித்தல் வேண்டும்; ஆற்றல் மற்றும் வாழ்வில் ஆர்வம் இழந்தவர்களுக்கு நோர்பைன்ஃபெரின் மற்றும் டோபமைன் ஆகியவற்றை அதிகரிக்கும் மருத்துவத்தை அளிக்க வேண்டும்.<ref name="pmid18494537"></ref>
 
ஆற்றல் வாய்ந்த மனத் தளர்ச்சி எதிர் மருத்துவங்கள், ஒற்றை அமீன் அளவுகளை அதிகரிப்பதில் வகிக்கும் பங்கு பற்றிய மருந்தகக் கணிப்புகள் மட்டும் அல்லாது, உளவியல் மரபணு தொடர்பான அண்மைய ஆய்வுகள், முதன்மையான ஒற்றை அமீன் பணியில் தோற்ற மாறுபாடுகள் (phenotypic variation) ஓரளவேனும் மனத் தளர்ச்சியுடன் தொடர் கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றன. இவ்வாறான கண்டுபிடிப்புகள் ஒரு புறம் இருப்பினும், மனத் தளர்ச்சிக்குக் காரணம் ஒற்றை அமீன் குறைபாடு மட்டுமே அல்ல.<ref name="nature08"></ref> கடந்த இருபது ஆண்டுகளில், இவ்வாறான ஒற்றை அமீன் கருதுகோளின் வரம்புகளை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இக்கருதுகோள் மனத் தளர்ச்சிக் காரணியை போதுமான அளவு விளக்கவில்லை என உளவியலாளர் சமூகம் அழுந்தக் கூறியுள்ளது.<ref name="pmid10775017">{{vcite journal |author=Hirschfeld RM |title=History and evolution of the monoamine hypothesis of depression |journal=Journal of Clinical Psychiatry|volume=61 Suppl 6|pages=4–6 |year=2000 |pmid=10775017}}</ref> இதற்கு எதிர் வாதமாக எம்ஏஓ தணிப்பிகள் மற்றும் எஸ்எஸ்ஆர்ஐ ஆகியவற்றின் மூலம் மன நிலை ஊக்க விளைவு உருவாவதற்குப் பல வாரங்கள் ஆகும் என்றும், ஆனால் ஒற்றை அமீன் வழியான ஊக்கம் சில மணி நேரங்களிலேயே கிடைக்கப் பெறுமென்றும் கூறப்படுகிறது. இது குறித்த மற்றொரு எதிர் வாதம், ஒற்றை அமீன் இழப்பை உருவாக்கும் மருந்தியல் செயலிகளின் மீதான சோதனைகளின் அடிப்படையில் உள்ளது. மையமாகக் கிடைக்கப் பெறும் ஒற்றை அமீனின் அளவை ஆய்ந்து குறைக்கும் செயலால், மருத்துவம் பெறாத மனத் தளர்ச்சி நோயாளிகளின் மன நிலை சற்றே தாழ் நிலை அடையலாம் என இது உரைக்கிறது. இவ்வாறான குறைவு ஆரோக்கியமான மக்களின் மன நிலையைத் தாழ்நிலைக்கு உள்ளாக்காது.<ref name="nature08">{{cite journal |author=Krishnan V, Nestler EJ |title=The molecular neurobiology of depression |journal=Nature |volume=455 |issue=7215 |pages=894–902 |year=2008 |month=October |pmid=18923511 |pmc=2721780 |doi=10.1038/nature07455}}</ref> ஆற்றலுள்ள சிகிச்சையாக இருப்பதற்கு, இவ்வாறான மனத் தளர்ச்சி எதிர் மருந்துகளுக்கு முழுமையான{{clarify|date=October 2010}} ஒரு ஒற்றை அமீன் அமைப்பு<ref name="pmid10775018">{{vcite journal |author=Delgado PL |title=Depression: The case for a monoamine deficiency |journal=Journal of Clinical Psychiatry |volume=61 Suppl 6|pages=7–11 |year=2000 |pmid=10775018}}</ref> தேவை. டியாப்டைன் மருந்து ஒரு செரட்டோனின் ரெபுடேக் அதிகரிப்பியாகும் மற்றும் ஓபிபிரமால் மருந்து ஒற்றை அமீன் அமைப்பின் மீது எந்தவொரு பாதிப்பும் கொண்டிருப்பதில்லை. இருப்பினும், இவற்றைப் போன்ற சில மருந்துகள் மனத் தளர்ச்சி எதிர் மருத்துவத்தின் பண்புக் கூறுகளைக் கொண்டுள்ளன.{{fact|date=October 2010}} ஒற்றை அமீன் கருதுகோள் ஏற்கனவே வரம்புகளுக்கு உடபட்டதாக உள்ளது. அதனைப் பலருக்கும் பொருந்துவதான ஒரு கருத்துருவாக சந்தைப்படுத்துகையில், அது, "சமநிலை இழந்த வேதிப் பொருட்கள்" என்பதாக, மிகவும் எளிமைப்படுத்திய ஒரு கருத்துருவாக அமைந்து விடுகிறது.<ref name="PLoS">{{vcite journal |author=Lacasse J, Leo J |title=Serotonin and depression: A disconnect between the advertisements and the scientific literature |journal=[[PLoS Medicine|PLoS Med]] |volume=2 |issue=12 |pages=e392 |year=2005 |pmid=16268734 |doi=10.1371/journal.pmed.0020392.g001|url=http://medicine.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371/journal.pmed.0020392|accessdate=2008-10-30 |pmc=1277931 | laysummary=http://www.medscape.com/viewarticle/516262 | laysource=[[Medscape]] | laydate=Nov. 8, 2005}}</ref>
 
வாழ்வில் இறுக்கமான சூழல் அனைவரிலும் அல்லாது சில நபர்களில் மட்டும் ஏன் மனத் தளர்ச்சி நிகழ்வுகளுடன் தொடர்புற்றுள்ளது என்பதை, 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த மரபணு - சூழல் ஊடாடுதல் (gene-environment interaction (GxE)) என்பதன் மீதான ஆய்வு விளக்க முற்பட்டது. செரட்டோனின் கடத்தியுடன் தொடர்புடைய பகுதியின் (5-ஹெச்டீடீஎல்பிஆர்) எதிரெதிர் பண்புக்கூறு மாறுபாடுகளை சார்ந்திருப்பதாக இது கூறியது.<ref>{{vcite journal |author=Caspi A, Sugden K, Moffitt TE, ''et al.'' |title=Influence of life stress on depression: moderation by a polymorphism in the 5-HTT gene |journal=Science |volume=301 |issue=5631 |pages=386–9 |year=2003 |month=July |pmid=12869766 |doi=10.1126/science.1083968}}</ref> 2009ஆம் ஆண்டிலான ஒரு பெரும் ஆய்வு வாழ்வின் இறுக்கமான நிகழ்வுகளுடன் மனத் தளர்ச்சி தொடர்புற்றுள்ளது; ஆயினும், 5-ஹெச்டீடீஎல்பிஆர் உடன் உள்ள தொடர்புக்கான ஆதாரம் இல்லை என கண்டறிந்தது.<ref>{{vcite journal |author=Risch N, Herrell R, Lehner T, ''et al.'' |title=Interaction between the serotonin transporter gene (5-HTTLPR), stressful life events, and risk of depression: a meta-analysis |journal=JAMA |volume=301 |issue=23 |pages=2462–71 |year=2009 |month=June |pmid=19531786 |pmc=2938776 |doi=10.1001/jama.2009.878}}</ref> 2009ஆம் ஆண்டின் மற்றொரு பெரும் ஆய்வு, இக்கருத்துடன் உடன்பட்டது.<ref>{{vcite journal |author=Munafò MR, Durrant C, Lewis G, Flint J |title=Gene X environment interactions at the serotonin transporter locus |journal=Biol. Psychiatry |volume=65 |issue=3 |pages=211–9 |year=2009 |month=February |pmid=18691701 |doi=10.1016/j.biopsych.2008.06.009}}</ref> இதன் மீதான ஆய்வுகளின் ஒரு மறு ஆய்வு 2010ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இது, சூழல் காரணமான பாதகங்களை மதிப்பிடும் முறைமைகள் மற்றும் இவ்வாறான ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவற்றின் இடையில் சீரான ஒரு தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தது. 2009ஆம் ஆண்டைச் சார்ந்த இரண்டு பெரும் பகுப்பாய்வுகளும் எதிர் - மறைச் சார்புடைய ஆய்வுகளே எனவும் இவை பாதகங்கள் பற்றி சுயமாக அளிக்கப்பட்ட அறிக்கைகளையே சார்ந்திருந்தன என்றும் இது கண்டறிந்தது.<ref>{{vcite journal |author=Uher R, McGuffin P |title=The moderation by the serotonin transporter gene of environmental adversity in the etiology of depression: 2009 update |journal=Mol. Psychiatry |volume=15 |issue=1 |pages=18–22 |year=2010 |month=January |pmid=20029411 |doi=10.1038/mp.2009.123}}</ref>
 
====பிற கோட்பாடுகள்====
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/635813" இருந்து மீள்விக்கப்பட்டது