யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள்==
போத்துக்கீசர் முதன்முதலாக [[இலங்கை]]க்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் [[காலி]]ப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது. இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் [[தென்னிந்தியா]]விலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.
 
யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கப்]] பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார்.
 
இதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் [[சங்கிலி]], மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்.
 
இதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1961 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர்.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]