2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
'''ஐந்தாவது போட்டி''' பெப்ரவரி 28, 2003ல் மேற்கிந்திய அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 228 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணியால் குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களையே பெற்றமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை 6 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
 
'''ஆறாவது போட்டி''' மார்ச் 3, 2003ல் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 45 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டி டக்வேர்ட் லூயிஸ் முறையின் கீழ் சமநிலையில் முடிந்தது.
 
முதல் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடிய இலங்கை 4 போட்டிகளில் வெற்றியீட்டியது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஒரு போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது. முதலாம் சுற்றில் 18 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி சுப்பர் 6 அணிக்கு தெரிவானது.
 
'''சுப்பர் 6 அணியில் 3 போட்டிகளில்''' இலங்கை பங்கேற்றது.
'''முதலாவது போட்டி''' அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறித்த 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 319 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 47.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களையே பெற்றது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா 96 ஓட்டங்களினால் இலங்கையை வெற்றிகொண்டது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/2003_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது