யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
* '''வறை''': சேர்மானங்களை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து, சிறிதளவு எண்ணையுடன் சேர்த்து வறுப்பதன் மூலம் கிடைப்பது வறை ஆகும். இலை வகைகள், [[புடோல்]] போன்ற சில காய் வகைகள் போன்றவை [[வறை]] செய்வதற்குப் பயன்படுகின்றன. ''[[சுறா]]'' போன்ற அசைவ உணவுகளிலும் வறை செய்யப்படுவதுண்டு.
* '''துவையல்''': பருப்புப் போன்றவற்றைத் தேங்காய்ப்பூவுடனும், வேறு சேர்மானங்களுடனும் சேர்த்துத் துவைத்து ஆக்குவது துவையல்.
* '''சம்பல்''': தேங்காய்ப்பூ, புளி, உப்பு, வெங்காயம் என்பவற்றுடன், மிளகாய் அல்லது வேறேதாவது சேர்த்து அம்மியில் அரைப்பதன் மூலம் அல்லது உரலில் இட்டு இடிப்பதன் மூலம் ''சம்பல்'' செய்யப்படுகின்றது. [[மிளகாய்]] சேர்த்துச் செய்வது மிளாகய்ச் சம்பல். இஞ்சி சேர்க்கும்போது இஞ்சிச் சம்பல் எனப் பலவகைச் சம்பல்கள் பெறப்படுகின்றன. சம்பல் என்ற சொல்லுக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் முன்னர் பச்சடி என்றே குறிப்பிட்டு வந்தார்கள். இன்று சம்பல் என்னும் சொல்லே பரவலாக வழங்கப்படுகின்றது. [[சிங்களம்|சிங்கள]] மொழியில் இதனைச் ''சம்போல'' என்பார்கள்.
* '''பொரியல்''':வாழைக்காய், மரவள்ளிக்கிழங்கு[[மரவள்ளிக் கிழங்கு]], உருளைக்கிழங்கு[[உருளைக் கிழங்கு]] போன்றவற்றைச் சீவல்களாக்கி எண்ணெயில் நன்றாகப் பொர்ப்பதன் மூலம் பொரியல்கள் பெறப்படுகின்றன. அசைவ உணவுகளான, மீன், இறைச்சி என்பவற்றிலும் பொரியல்கள் செய்யப்படுகின்றன.
* '''சொதி''': நீரினால் ஐதாக்கப்பட்ட தேங்காய்ப்பால், உப்பு, [[வெங்காயம்]] என்பவற்றைக் கொதிக்கவைத்து, அத்துடன் பழப்புளி அல்லது எலுமிச்சம் சாறு சேர்ப்பதன் மூலம் சொதி ஆக்கப்படுகின்றது.
 
ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு. எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு.
 
கறிகள் ஆக்குவதில், யாழ்ப்பாணத்தவர் தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். அநேகமாக எல்லாக் கறிகளிலும், தேங்காய்ப்பூவோ, தேங்காய்ப் பாலோ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடும், தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம். தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் ''[[சாம்பார்]]'' யாழ்ப்பாணத்துச் சமையலில் இடம்பெறுவதில்லை. கோவில்களில் [[அன்னதானம்]] செய்பவர்கள் சில சமயங்களில், பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்காக எல்லாக் காய்களையும் சேர்த்துச் சாம்பார் செய்வது உண்டு.
 
===துணை உணவு வகைகள்===
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது