ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
மேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தென்னாசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்பப் பல மாற்றங்களைப் பெற்றன. தென்னாசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் இரண்டு கைகளையும் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தென்னாசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புக்கள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.
 
==அமைப்பு==
 
ஆர்மோனியத்தில், பல் உறுப்புக்கள் உள்ளன. அவற்றின் மீது காற்று உரசிச் செல்லும்போது ஒலி எழுப்பும் உலோக நாக்குகள், காற்றைச் செலுத்தும் அமைப்பு, சுருதிக் கட்டைகள், விசைப்பலகை என்பன இவற்றுள் முக்கியமானவை. ஆர்மோனியத்தில் துருத்தியை இயக்கும்போது காற்று நேரடியாக உலோக நாக்குகளின்மீது செலுத்தப்படுவதில்லை. வெளித் துருத்தி உள்ளே இருக்கும் உட் துருத்திக்குக் காற்றைச் செலுத்த அங்கிருந்து காற்று உலோக நாக்குகள் மீது ஒரே சீராகச் செலுத்தப்படுவதனால் தொடர்சியான ஒலி உண்டாகின்றது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில வகை ஆர்மோனியங்களில் வெளித்துருத்தியில் இருந்து நேரடியாகவே நாக்குகள் மீது காற்றைச் செலுத்துவதற்கான வசதிகளும் இருந்தன. இதனால், அனுபவம் மிக்க கலைஞர்கள் காற்றின் ஓட்டத்தைத் தாமே கட்டுப்படுத்தி வேண்டிய விதத்தில் இசையை உருவாக்கக் கூடியதாக இருந்தது.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது