ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
==அமைப்பு==
ஆர்மோனியத்தில், பல் உறுப்புக்கள் உள்ளன. அவற்றின் மீது காற்று உரசிச் செல்லும்போது ஒலி எழுப்பும் உலோக நாக்குகள், காற்றைச் செலுத்தும் அமைப்பு, சுருதிக் கட்டைகள், விசைப்பலகை என்பன இவற்றுள் முக்கியமானவை. ஆர்மோனியத்தில் துருத்தியை இயக்கும்போது காற்று நேரடியாக உலோக நாக்குகளின்மீது செலுத்தப்படுவதில்லை. வெளித் துருத்தி உள்ளே இருக்கும் உட் துருத்திக்குக் காற்றைச் செலுத்த அங்கிருந்து காற்று உலோக நாக்குகள் மீது ஒரே சீராகச் செலுத்தப்படுவதனால் தொடர்சியான ஒலி உண்டாகின்றது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில வகை ஆர்மோனியங்களில் வெளித்துருத்தியில் இருந்து நேரடியாகவே நாக்குகள் மீது காற்றைச் செலுத்துவதற்கான வசதிகளும் இருந்தன. இதனால், அனுபவம் மிக்க கலைஞர்கள் காற்றின் ஓட்டத்தைத் தாமே கட்டுப்படுத்தி வேண்டிய விதத்தில் இசையை உருவாக்கக் கூடியதாக இருந்தது.
 
==இந்தியாவில் ஆர்மோனியம்==
19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கிக் காற்றுச் செலுத்தக்கூடிய ஆர்மோனியங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர். இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதாகவும், நம்பத் தகுந்ததாகவும், கற்றுக்கொள்வதற்கு இலகுவாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு இசைக்கருவி ஆனது. இந்தியாவின் பல விதமான இசைகள் தொடர்பில், இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது.
 
19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசை, பார்சி, மராட்டி இசைகள் போன்ற பல்வேறு இந்திய இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, இந்துத்தானி இசைகளுக்கு இன்றியமையாத [[கமகம்|கமகங்களை]] ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ளன. கன ராகங்கள் எனப்படும் சங்கராபரணம், பைரவி, கல்யாணி போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.
 
இவ்வாறான பல காரணங்களால், அகில இந்திய வானொலி தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சிறந்த கவிஞராகவும், கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் விளங்கிய [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்.
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது