"இலங்கை தொடருந்து போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,498 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி ({{mergeto|இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து}})
 
==பின்னணி==
[[கண்டி]] இராச்சியம் 1815ல் வீழ்ச்சியுற்ற பின்பு [[இலங்கை]]யில் முதலீடு செய்வதற்கு ஆங்கிலேயப் பயிர்ச்செய்கையாளர்கள் இலங்கை வந்தனர். இலங்கையின் மத்திய மலைநாட்டுப்பகுதியில் மிதமான காலநிலையும் வளமான மண்ணும் அவர்களைக் கவர்ந்தது. ஏற்றுமதிக்கு உகந்த வர்த்தகப் பெறுமானமுள்ள பயிராக அவர்கள் ஆரம்பத்தில் கோப்பியையே தெரிவுசெய்தனர். காலப்போக்கில் தாம் உற்பத்தி செய்யும் கோப்பியை மலைநாட்டிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவருவதற்கான தரமானதும், துரிதமானதுமான போக்குவரத்து முறையொன்றின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்திலாயினர்.
 
1845ம் ஆண்டாகும்போது கோப்பி மோகம் உச்சநிலையை அடைந்தது. அரச காணிகளை 50 சதத்திற்கு ஒரு ஏக்கர் என்ற வகையில் மலிவாகப் பெற்று ஆங்கிலேய ஆளுனரும் அவரது அதிகாரிகள், இராணுவத்தினர், நீதிபதிகள், மதகுருமார் போன்றோரும் கோப்பிச் செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 
==இலங்கை புகையிரதக் கம்பனி==
எனவே இவர்களது உற்பத்தியைக் கொழும்புக்குக் கொண்டுவருவதற்காக ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டது. இதற்கென 1845ல் இலங்கை புகையிரதக் கம்பனி Ceylon Railway Company (CRC) என்ற பெயரில் கம்பனியொன்று இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பிளிப் என்ஸ்ரொடலர் Philip Anstruther என்பவர் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/681126" இருந்து மீள்விக்கப்பட்டது