இலங்கை தொடருந்து போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
எனினும், உத்தேசிக்கப்பட்ட செலவில் வேலையை முடிக்க முடியாது என்பது விரைவில் நிரூபணமாகியது. களனி நதியின் மீதாகப் பாலம் அமைப்பதும் ரம்புக்கனை முதல் கடுகன்னாவை வரையுள்ள ஏற்றத்தில் தண்டவாளங்களைப் பொருத்துவதும் பெரும் சவால்களாக அமைந்திருந்தன. எனவே மேலதிக நிதி தேவை என டோனி விண்ணப்பித்தார்.
 
==ஒப்பந்தம் ரத்து==
இதன் விளைவாக 1861ல் கம்பனியுடனான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது. கம்பனி இட்ட மூலதனத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இலங்கை அரசு தொடர்வண்டி பாதையமைக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டது. இதற்காக இலங்கை அரசாங்க புகையிரதம், (Ceylon Government Railway - CGR) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் ரயில் பாதை அமைக்கும் வேலைக்காக விலை மனுக்கள் கோரப்பட்டன. இறுதியில் ஆகக் குறைந்த விலையைச் சமர்ப்பித்த W.F.G. Favuell என்ற ஒப்பந்தக்காரருக்கு ரயில் பாதையமைக்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தொடருந்து_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது