பொ. பூலோகசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''பொ. பூலோகசிங்கம்''' தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.
 
இலங்கையின் வாடா புலத்தில் வவுனியாவில் பிறந்த இவர், இலங்கைப் பல்கலைக்கழக [[பேராதனை]] வளாகத்தில் பயின்று பட்டம் பெற்றவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப் பரிசில் பெற்று [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய அரசிலுள்ள]] ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் [[மொழியியல்]] ஆய்வில் [[கலாநிதி]] பட்டம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்பு]], [[களனி]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகங்களில்]] [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தவர். [[1993]] ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலாகீர்த்தி'ப் பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.
 
[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பொ._பூலோகசிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது