அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Abszess.jpg|thumb|250px|right|அழற்சியின் பண்புகளான வீக்கம் மற்றும் சிவத்தலைக் காட்டும் விதமாக தோலில் ஏற்பட்ட ஓர் சீழ்பிடித்த [[கட்டி]]. நடுவில் [[சீழ்]] பிடித்துள்ளப் பகுதியைச் சுற்றி கரும்வளையங்களாக [[இறந்த திசு]]க்கள்]]
 
'''அழற்சி/''' அல்லது '''வீக்கம்'''/ (Inflammation, [[இலத்தீன்]], ''inflammare'') [[நோய்க்காரணி]]கள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அழிபட்ட அல்லது பாதிப்புக்குள்ளான [[உயிரணு]]க்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு [[தமனி]] (அல்லது நாடி), [[சிரை]] (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.<ref name="pmid17223962">{{cite journal |author=Ferrero-Miliani L, Nielsen OH, Andersen PS, Girardin SE |title=Chronic inflammation: importance of NOD2 and NALP3 in interleukin-1beta generation |journal=Clin. Exp. Immunol. |volume=147 |issue=2 |pages=227–35 |year=2007 |month=February |pmid=17223962 |pmc=1810472 |doi=10.1111/j.1365-2249.2006.03261.x |url=}}</ref> இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் [[நோய்த்தொற்று]]ம் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க [[நுண்ணுயிர்|நுண்ணுயிரினால்]] ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை.
 
அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் [[தொற்றுநோய்]]களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல் சுரம், தமனித் தடிப்பு, [[முடக்குவாதம்]] (Rheumatic arthritis) போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது