Chinkamukan
வாருங்கள், Chinkamukan! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
- தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.
__________________________________________________________________________________________________________________
- புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
வருக
தொகுஉயிரியல் குறித்தான பல அருமையான கட்டுரைகளை மிக வேகமாக உருவாக்கி வருகிறீர்கள். விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகள் மேன்மேலும் தொடர என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். விக்கிக்குள் இருக்கும் பிற கட்டுரைகளுக்கு இணைப்புகள் தரும் போது (உள்ளிணைப்புகள்), பின்வரும் முறையை பயன்படுத்துங்கள்
[[தீநுண்மம்]] என்று சேர்த்தால் தீநுண்மம் என்பதற்கு உள்ளிணைப்பு கிடைக்கும். விகுதி சேர்க்க வேண்டும் எனில் [[தீநுண்மம்|தீநுண்மத்தினால்]] என்று இட்டால் தீநுண்மத்தினால் என்று கிடைக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 05:00, 27 பெப்ரவரி 2011 (UTC)
உதவி: பாக்டீரியா என்னும் நுண்ணுயிர் பேரினத்திற்கு நுண்ணுழையாள் என பெயர் மாற்றம் கொடுத்துள்ளேன். இப்பெயர்க்காரணம் விளக்கம் குறித்து பாக்டீரியா விக்கிசனரியில் காண்க. இப்பெயர் பொருத்தமாயின் அப்பெயரைப் பின் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைத்தலைப்பை மாற்றவும். உதவியை மறவாமல் செய்தருளுங்கள். நன்றியுடன். --சிங்கமுகன் 10:31, 1 மார்ச் 2011 (UTC)
- சிஙகமுகன், புதிய கலைச்சொல்லாக்கத்தைப் பற்றி இங்கு - பேச்சு:பாக்டீரியா - ஒரு உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரி என்ற கலைச்சொல் பரவலாகப் பயனபடுத்தப்படுவதால், புதிய கலைச்சொல் அவசியமா என்று ஒரு பயனர் ஐயமெழுப்பியுள்ளார். தங்கள் கருத்துகளை அங்கு இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:11, 1 மார்ச் 2011 (UTC)
விவாதத்திற்கு நன்றிகள். நான் விக்சனரியில் அதற்கான விளக்கங்களை கொடுத்துள்ளேன். நுண்ணுயிரி என்பது நான் உருவாக்கிய பக்கம் தான்.அதைப் படித்தீர்கள் எனறால் நுண்ணுயிர் எத்தனை மாற்றங்கள் வேண்டும் என்பது தெளிவாகும். மொழி வளர்ச்சிக்கு சொல்வளமும் தேவை. நுண்ணுயிரி என்பது பொதுவான பெயர். நீங்கள் நுண்ணுயிரி எடுத்தீர்கள் என்றால் அது ஒரு தனியுலகம். நுண்ணுழையாள் அதில் ஒரு அங்கமே. நாம் பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் முதுமையடையும் போது பலர் கேள்வி எழுப்பநேரிடும். பாக்டீரியா - நுண்ணுயிரி என்பது கலைச்சொல் என்றால் தலைப்பிட்டவர் நுண்ணுயிரி என எழுத வேண்டியதுதானே ஏன் பாக்டீரியா என எழுத வேண்டியதுதானே ஏனென்றால் அவர் உணர்ந்திருக்கிறார் அது வேறு என்று. நுண்ணுழையாள் ஒரு நுண்ணுயிரி ஆனால் நுண்ணுயிகளெல்லாம் நுண்ணுழையாள் அல்ல. நுண்ணுயிரி என்பது பன்மையை குறிக்கும் சொல்; உதாரணம் - நுண்ணுயிர் என்பது நுண்ணுழையாள், நுண்புஞ்சை, மூத்தவிலங்கி, நுண்பாசி, தீநுண்மம், ஆர்கிபாக்டீரியாக்கள் (தமிழில்பெயர் துலாவி கொண்டிருக்கிறேன்). பன்மையையும் ஒருமையையும் இணைப்பது எவ்வாறு சாத்தியமாகும். இது காரணம் கருதியிடப்பட்டப் பெயர் பெயர்க்காரணத்தை ஆழ அறிந்து பின் மாற்றம் கொடுத்துள்ளேன். ஏன் நீங்கள் நுண்ணுயிரி என அழைக்க முற்பட்டது போல் இதைக்கண்டறிந்த அறிஞர் ஆண்டன் வான் லீவனாக் முதலில் இதை அனிமல்க்யூல் என விவரித்தார். பின்னர் காலப்போக்கில் அறிவியலாளர்கள் இது பொருத்தமானதன்று எனக்கண்டு மாற்றம் கொடுத்தனர்.
குதிரை என்பது ஒரு விலங்கு. ஆரம்பத்தில் இதற்கு விலங்கு எனும் பொதுவான பெயரை இட்டிருக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் வரிக்குதிரை, கழுதை, ஏனைய விலங்குகளான மான், கரடி இவைகளையும் அறிந்தனர். ஆனால் இன்னும் விலங்கு என அழைத்தால் பொருளில் பிழை ஏற்படாதா. மற்றவிலங்குகளை குறிக்கும் போது விலங்கு என குறிப்பிட்டால் அவை குதிரையை குறிக்கும் அல்லவா. காலமும் வளர்ச்சியும் கருதி மாற்றம் தேவை என்பதால் தான். வேறு சில பெயர்கள் தகுந்த காரணங்களோடு விளக்கினால் அதைய்ம் காரணம் கருதி ஏற்றுக்கொள்கிறேன். நுண்ணுழையாள் என்னும் கலைச்சொல் மிகவும் பொருந்தும். ஆராய்க.
இன்னும் ஐயமிருப்பின் பெயர்க்காரணத்தை விவரிக்கிறேன். நுண் - நுண்மை, உழையாள் - உழைப்பாளி/உழைக்கும் ஒருவன். இவைகள் பூமியில் உணவு கிடைத்தால் அதற்கான வேலையை இடையிராது நிறைவேற்றும் ஏனைய உயிர்களும் இதைச்செய்கின்றன ஆனால் இது கலையாக்கத்திற்கான் மாற்றம். நான் பெயரை இட்டதற்கு ஆங்கிலத்தைப்போல் வேறு மொழிகளிலிருந்து திருடவில்லை. நமது மொழியில் அழகான ’ழ’ கரத்துடன் எப்போதும் சுவைக்கும் படியாக விவரித்துள்ளேன். தலைப்பை நன்தமிழ் பெயராக மாற்ற உதவிடுங்கள் பாக்டீரியா என்னும் கட்டுரையை முழுமையாக மறுபதிப்பு செய்கிறேன். இது தழுவி எழுதப்பட்ட கட்டுரை. நமது மக்களுக்கு ஏற்ற வகையில் உருமாற்றம் செய்யவிழைகிறேன்.
மேலும் எல்லா பெயர்களும் உயிர் - உயிர் என்று வருகிறது. இப்படியே தொடர்ந்துகொண்டு போனால் சொல்வளம் குன்றிவிடும். தவறிருப்பின் பொருத்தமான பெயரைப் பரிந்துரை செய்க. ’’’பெயர்க்காரணம் ஆழ உழப்படும் - பலனடையும் வரை’’’ பிறகு மாற்றியமைக்கப்படும். மேலும் ஐயமிருப்பின் விவாதிக்க தவறிருப்பின் மன்னிக்க.
’’’உதவி’’’ - உயிர் என்னும் சொல்லுக்கு இணைசொற்கள் தேவை. தமிழில் பயனற்று பல எழுத்துக்கள் உள்ளன குறிப்பாக “கௌ முதல் னௌ வரை” அது போல் பல உள. இவைகளைக்கொண்டு கலையாக்கம் செய்தால் காலம் கடப்பினும் 247ம் நிலைக்கும். உதவுங்கள். இணைந்து வளர்ப்போம் நம் அன்னைக்கு அணி சேர்ப்போம். நன்றிகளுடன் --சிங்கமுகன் 22:39, 1 மார்ச் 2011 (UTC)
படங்கள்
தொகுராப்பியணிப்பாசி கட்டுரையில் http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3029697/figure/fig04/ என்ற படிமத்தை இணைக்க உதவி கோரியிருந்தீர்கள். விக்கிப்பீடியாவில் பதிபுரிமை பெற்ற படங்களையும்/கோப்புகளையும் பதிவேற்றவியலாது. உரிம விலக்கு அளிக்கப்பட்ட படங்களை மட்டுமே பதிவேற்றி பயன்படுத்தலாம். நீங்கள் சுட்டியிருந்த பக்கத்தில் ஒரு பதிப்புரிம குறிப்புள்ளது. எனவே பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளோம். --சோடாபாட்டில்உரையாடுக 06:04, 2 மார்ச் 2011 (UTC)
குழப்பமில்லை அவ்வினைப்பை அப்படியேவிடுங்கள் தகவல் தொடர்புதான் வேண்டும். எல்லோரையும் சென்றடையும். நன்றிகள். --சிங்கமுகன் 06:18, 2 மார்ச் 2011 (UTC)
- வெளி இணைப்பாக இணைத்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:43, 2 மார்ச் 2011 (UTC)
நன்றுகள் மேலும் நுண்ணுழையாள்/நுண்ணுழையான் பேர் அவசியம் அதன் காரணத்தை எனது உரையாடல் பக்கத்தில் இணைத்துள்ளேன். வாசித்துவிட்டு விடைகொடுங்கள். --சிங்கமுகன் 06:47, 2 மார்ச் 2011 (UTC)
- இவ்விளக்கங்களை பேச்சு:பாக்டீரியா பக்கத்தில் தந்தால் உயிரியல் /கலைச்சொல்லாக்கம் துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் உரையாடலில் கலந்து கொள்ளுவார்கள் (உங்கள் ஒரு பகுதியை மட்டும் அங்கு நகர்த்தியுள்ளேன்). ஒரு கட்டுரை குறித்த உரையாடலை அதன் உரையாடல் பக்கத்தில் நிகழ்த்துவத் வழக்கம் - அக்கட்டுரையை கவனிப்போரும் அதில் பங்கு கொள்ள வசதியாக. எனவே உங்கள் விளக்கங்கள் முழுவதையும் அங்கு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 06:56, 2 மார்ச் 2011 (UTC)
- வணக்கம் சிங்கமுகன்! நீங்கள் உயிரியல் தொடர்பாக பல அருமையான கட்டுரைகளை தொகுத்து வருகின்றீர்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும்.
- நீங்களும் விக்கித் திட்டம் உயிரியலில் சேர்ந்து கொள்ளலாமே. நீங்கள் ஆக்கும் உயிரியல் கட்டுரைகளை இத்திட்டத்தில் இணைப்பதற்கு, குறிப்பிட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் அதற்குரிய வார்ப்புருவையும் இடலாம்.
- Eukaryote என்பதை நாம் மெய்க்கருவுயிரி என்று அழைத்து வந்தோம். மென்சவ்வால் சூழப்பட்ட நிலையான கருவைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயரை வழங்கி வந்தோம். நீங்கள் பல இடங்களில் மெய்க்கருவிலி என்ற சொல்லைப் பாவித்திருக்கின்றீர்கள். காரணம் அறியலாமா? கருவிலி என்னும்போது, அது நிலையான கருவற்ற என்பது போன்ற கருத்தைத் தரக் கூடும் என்பதாலேயே கேட்கின்றேன். நன்றி--கலை 11:46, 3 மார்ச் 2011 (UTC)
- வணக்கம் சிங்கமுகன்! நீங்கள் உயிரியல் தொடர்பாக பல அருமையான கட்டுரைகளை தொகுத்து வருகின்றீர்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும்.
மதிப்பிற்குரிய கலையவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் மூன்றாவது விளக்கக் கட்டுரை. நன்றிகள். ஆனால் ஒரே வருத்தம் நான் கட்டுரையைத் தொகுக்க வேண்டிய நேரமுழுதும் இக்கட்டுரையிலேயே செலவழிக்கிறேன். எல்லாம் ஒரு புரிதலுக்காதத்தான். நன்றிகள். இங்கு நடந்தது என்னுடையத்தவறே. நான் பொருள் உணராது மாற்றிவிட்டேன். மன்னிக்கவும். நான் தமிழில் புலமைக்கொஞ்சம் குறைவு. சீக்கிரத்தில் அது நிறைவாகும்.
மேலும் prokaryote மற்றும் eukaryote என்பது புதுமையும் ஒற்றுமைக்குமான வார்த்தை. இங்கே கேர்யான் என்னும் வார்த்தை கரு என்னும் அர்த்ததைக்குறிக்கும் சொல். இங்கே நான் சொல்ல வருவது இவைகளுக்குள்ள ஒற்றுமையே என்னை அவ்வாறு செய்யத்தூண்டியது. அதே ஒற்றுமையைத் தமிழில் எதிர்ப்பார்க்கிறேன். ஆகையால் நிலைக்கருவிலி மற்றும் மெய்க்கருவிலி என உருவம் கொடுத்தேன். ஆனால் இங்கே தமிழிலும் மொழிமாற்றத்திலும் ஒரு பிழையுள்ளது. நிலை என்பது மெய் என்றப் பொருளைக்குறிக்கும். இது எவ்வாறு சாத்தியமாகும். இயற்கையின் படைப்பில் மெய்யெது. நாம் காணக்கூடிய அனைத்து படைப்புகளுமே மெய்.
- கவனிக்க:- நுண்ணுழையாட்கள் மற்றும் ஆர்கி வகை இரண்டும் தான் நிலைக்கருவிலிக்குள் வரும். இங்கே இவ்வுயிர்களுக்கு இக்கரு மெய். நாம் எவ்வாறு நிலைக்கருவிலி என்றுரைக்கலாம். அதேப்போல் நீங்களே மேலே கூறியிருக்கிறீர்கள்:- கருச்சவ்வு பெற்றிருப்பதால் மெய்க்கருவிலி என அழைக்கிறோமென்று. கரு என்பது nucleus எனப் பொருளாகும். இங்கு எங்கே கருச்சவ்வு சொல்லப்பட்டிருக்கிறது. நிலைக்கருவிலி என்றால் நிலையான கருவில்லை என்று பொருள் படும். அப்போது அவை மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறதே என்று பொருள் கொள்ளவேண்டும் (pleomorphic nucleus) என்ற புதிய சொல்லின் பொருளாக்கம் இவை. இங்கே சவ்வை முன்வைப்பது தான் தலையாயப் பிறிவிற்கே காரணம். அதை உணர்த்தாமல் நாம் கருவை இருக்கு இல்லை என்பது போன்று கூறினால் எவ்வாறு சாத்தியமாகும்.
- 1. நிலைக்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி (prokaryote:eukaryote)
- 2. நிலைக்கருசவ்விலி:நிலைக்கருசவ்வுயிரி
- 3. மெய்க்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி
ஆகிய பெயர்கள் சரியாக வருமென்று பரிந்துரைக்கிறேன்.
இவ்விக்கிப்பீடியாவின் பல அம்சம்கள் எனக்குத் தெறியாது. அதான் என் தகவல் தொடர்புகளில் கொலருபடிகள். எனது கட்டுரையில் மேலும் இத்தவறு நடவாமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலும் நீங்கள் சொன்ன குழுவில் இன்றே இணைவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்கிறேன். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 13:53, 3 மார்ச் 2011 (UTC)
- உங்களை இங்கே அதிகமாக எழுத வைத்ததற்கு வருந்துகின்றேன். ஆனாலும் நீங்கள் கூறியவாறு ஒரு புரிதலுக்காக சிலவற்றை எழுத வேண்டியுள்ளது. எனது புரிதல் எவ்வாறு உள்ளது என்பதையும் கூறிவிடுகின்றேன்.
- முதலில் கலங்களில் காணப்படும் கரு என்பதன் வரைவிலக்கணத்தைப் பார்த்தோமானால், மென்சவ்வினால் வரையறைப்படுத்தப்பட்ட, பாரம்பரிய மூலக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு அணு உள்ளமைப்பு. In cell biology, the nucleus (pl. nuclei; from Latin nucleus or nuculeus, meaning kernel) is a membrane-enclosed organelle found in eukaryotic cells. The prokaryotes (pronounced /proʊˈkæri.oʊts/ or /proʊˈkæriəts/) are a group of organisms that lack a cell nucleus (= karyon), or any other membrane-bound organelles. எனவேதான் Prokaryote க்களில் 'கரு' என்ற அமைப்பு எதுவும் வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதால், கருவற்றவை எனக் கருதி நிலைக்கருவிலி எனக் கூறுகின்றோம். Eukaryote க்கள் கருவைக் கொண்டிருப்பதனால் மெய்க்கருவுயிரி என அழைக்கின்றோம்.--கலை 14:36, 3 மார்ச் 2011 (UTC)
- கரு என்பது மையம் அவை நிலைக்கருவிலிகளுக்குள்ளும் இருக்கிறது - மெய்க்கருவுயிரிகளுக்கும் இருக்கிறது. பகுத்தலின் முக்கிய நோக்கம் - கருச்சவ்வு என்பதாகும். ஆராய்க.
மேலும், ஆங்கிலத்தில் ஒரு வகையில் பிழை இன்னொரு வகையில் நியாயம்.
- Prokaryote - first formed nucleus - என்பதே பொருள்
- Eukaryote - true nucleus - என்பதே பொருள்:- உணர்க.
pro - first; before என்கிற பொருள்; eu - true என்ற பொருள். விளக்கம் ஆங்கில் விக்கிப்பீடியாவிலேயே உள்ளது. இவர்கள் கரு இல்லை என்ற வாதத்தையே முன்வைக்கவில்லை. ஆகையால், அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். நாம் முன்தோன்றிகள். எதிலும் ஒரு முன்னுதாரணம். ஆகையால், சவ்வு என்பதை உள்ளடக்கி உருவாக்குவதே சரி. மேலும் ஐயங்களுக்கு தயங்காமல் கேள்வி எழுப்புங்கள். என் மொழியைக் கற்றவர்கள் அறியாதவர்களாகவே இருக்கக்கூடாது. மேலே நான் குறிப்பிட்டுள்ளதில் 2 மற்றும் 3 வது பொருள் வார்த்தை ஒற்றுமை பொறுள் வேற்றுமையை உணர்த்தும். ஆகையால், அது இரண்டில் ஏதாவது ஒன்றை உறுதிப்படுத்தி அனைவரையும் கலந்து ஆலோசித்து தீர்மாணம் இயற்றுவோம். இனி மாறுதலுக்கே வழியில்லை. நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:15, 3 மார்ச் 2011 (UTC)
- //The prokaryotes (pronounced /proʊˈkæri.oʊts/ or /proʊˈkæriəts/) are a group of organisms that 'lack' a cell nucleus (= karyon), or any other membrane-bound organelles.// இது ஆங்கில விக்கிப்பீடியாவில்தான் இருந்தது. அத்துடன் கருவிற்குரிய வரைவிலக்கணமாக //In cell biology, the nucleus (pl. nuclei; from Latin nucleus or nuculeus, meaning kernel) is a membrane-enclosed organelle found in eukaryotic cells// என்பதும் ஆங்கில விக்கிப்பீடியாவில்தான் இருந்தது. அதைத்தான் நானும் குறிப்பிட்டேன். இருப்பினும் ஏனையோரும் சேர்ந்து எடுக்கும் முடிவை ஏற்பதில் மறுப்பில்லை. நன்றி.
மேலும் எந்தவொரு கட்டுரையையும் நீக்குவதற்கு முன்னர், அல்லது வேறொரு கட்டுரையுடன் இணைப்பதற்கு முன்னர், அங்கிருக்கும் உள்ளடக்கங்களில் அவசியமானவற்றை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்டுரையில் சேர்த்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள். வேறொருவர் இணைத்த தகவலை, அவை தவறாக இருந்தாலன்றி விக்கியிலிருந்து நீக்காமல் இருத்தல் நல்லது. நன்றி. --கலை 23:14, 3 மார்ச் 2011 (UTC)
- நீங்கள் நான் நீக்கிய கட்டுரை உயிர்ச்சத்து பி மற்றும் ப்ரோட்டோசோவா வைப்பற்றி கூறுகிறீர்கள். நான் உங்களுக்கு சொன்ன அத்தனை விளக்கங்களும் மேற்கோள் இடப்பட்டுத் தெறிவிக்கப்பட்டது. நான் ஆராயாமல் எந்த தகவலையும் கொடுப்பதுமில்லை திணிப்பதுமில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் ஏன் அதை நீக்கினீர்கள் என்றால் அதற்கு விளக்கம் கொடுக்க மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். நீ செய்யும் காரியத்தில் எனக்கு ஐயம் உள்ளதுப்போல் கேட்டது நெருடலாக உள்ளது. குழப்பமில்லை கூடிய விரைவில் உணர்வீர்கள்.
- உயிர்ச்சத்து பி : அங்கே கீழே ஃபோலிக் அமிலம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் தவறானத் தகவலுடன். ஃபோலிக் அமிலம் - உயிர்ச்சத்து பி6 என்றும் பி12 என்றும். இது சரியா மூலக்கூற்று உயிரியல் படித்தவறே. பி9 என்பதே சரி. அது மட்டுமில்லை பாதிக்கு மேல் உடன் படா கருத்துக்கள். நீங்கள் மாற்றங்களில் எடுத்துப்பாருங்கள். அதற்குப்பிறகு என்னை சாடுங்கள். பி6 - பைரிடாக்ச்சைம்; பி12 - கருநீலத்தனிம அமைன்கள் குழப்பமாய் இருக்கிறாதா - ஆம் சயனோக்கோபாலமைனின் தமிழாக்கம். இது எடிமாலசி வைத்து நான் உருவாக்கினேன். இன்னும் நான் வெளியில் இடவில்லை. உணருங்கள். மேலும் அங்கே அத்தலைப்பிற்கு சரியானக் கட்டுரை சீக்கிரத்தில் இடப்படும் என்று இட்டுச் சென்றேன்.
- ப்ரோட்டோசோவா - உண்மையில் நான் அங்கு இருந்து ஒருக்கருத்தையும் மூத்தவிலங்கிக்கு அனுப்பவில்லை. அக்கருத்துக்கள் (மூத்தவிலங்கி) அங்கேயே விளக்கப்பட்டுள்ளன. மேலும் எனக்குத்தெறியாதத் தகவல் ஒன்றை மட்டுமே அவர் விட்டுச்சென்றார். அது டினோப்ரியன். இது என்னவென்று இன்னும் விளங்கவில்லை. இது என்னவென்று அறிந்தவுடன் விரைவில் இத்தலைப்பில் கட்டுரை எழுதப்படும். உங்களுக்கு இதற்கு ஆங்கிலத்தில் தெறிந்தால் எனக்கு அனுப்புங்கள் அன்னைக்கு இன்னொரு அணித்தயாராகிவிடும். அவர் அங்கே பாசியைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மூத்தவிலங்கிக்கும் பாசிக்கும் என்ன சம்பந்தமிருக்கு. ஆனால் இருக்கு அதுத் தனித்தலைப்பு - கூட்டுயிர்கள். மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார் இட்டினோப்ரியம் பாசி வாழ்க்கையும் மூத்தவிலங்கி வாழ்க்கையும் ஒருசேரப் பெற்றிருக்கிறது என்று. அது மெய்யாயின் அத்தலைப்பில் புதுக்கட்டுரை ஒன்றுத் தயாராகும்.
எ தவறிருப்பின் மன்னிக்க தவறான அறிவு உருவாகக்கூடாதென்பதே நோக்கம். - வாழ்க நீவிர் வாழ்க உன்செயல். நன்றிகளைப் பரிசாக்குகிறேன் கலை அவர்களுக்கு - --சிங்கமுகன் :09:17 4 மார்ச் 2011 (UTC)
சிங்கமுகன்,
எதையும் தனிப்பட்ட தாக்குதல்களாக எடுத்துத் கொள்ளாதீர்கள். இங்கு சாடல்/மோதல் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. கலந்துரையாடல்கள் மட்டுமே உள்ளன. விக்கி என்பது கூட்டு முயற்சி. பிற தளங்களைப் போல் அல்லாமல் இங்கு பல விஷயங்களைப் பல முறை விளக்கி விவாதித்து செய்ய வேண்டி வரும் (இது விக்கியின் குறைபாடுகளுள் ஒன்று என்ற கருத்தும் உள்ளது) ஆரம்பத்தில் விக்கியின் மெதுவான “பேசித் தீர்க்கும்” வழமைகள் பழகும் வரை இங்கு பங்களிப்பது உங்களைப் போன்ற ஆய்வாளர்/துறை வல்லுனர்களுக்கு சற்றே சிரமமளிக்கும் எனினும் பொருத்தருள வேண்டுகிறேன். (தாங்கள் மற்றுமல்ல பிற துறைகளிலும் பிற மொழி விக்கிகளிலும் ஆய்வாளர்கள் இது போலவே உணர்ந்துள்ளனர்)
சில விக்கி வழமைகள்:
- ஒரு கட்டுரையில் ஒரு தகவல் பிழை இருப்பின், அதனை நீக்கும் போது தெளிவாக “சுருக்கத்தில்” தகவல் தவறு அதனால் நீக்குகிறேன் என்று எழுதுதல்
- ஒரு தலைப்பைப் பற்றி கட்டுரையை எழுதும் முன்னர் அது குறித்தான கட்டுரை ஏற்கனவே உள்ளதா என்று தேடி அதில் மாற்றங்கள் செய்வது வழக்கம். இரு கட்டுரைகள் வந்துவிட்டால் அவற்றை (உள்ளடக்கத்தையும் பங்களிப்பாளர் வரலாறையும்) இணைத்துவிடுவோம் இப்போது புரோட்டோசோவா/மூத்தவிலங்கி இரு கட்டுரைகள் உள்ளதால் அவற்றை இணைக்கப் போகிறோம்.
- உங்கள் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் விக்கியில் எதற்கும் சற்றே பொறுமையுடன் செயல்படுவது நன்று. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்ற பழமொழி இங்கு பொருந்தும். தற்சமயம் உயிரியல் திட்டத்தில் ஆர்வமாகப் பணியாற்றும் நான்கைந்து விக்கியர்களுள் (கலை, செல்வா, சுந்தர், த.உழவன், டாகடர் செந்தி, டாக்டர் கார்த்தி போன்றவர்கள் தற்சயம் விக்கியில் உயிரியல் கட்டுரைகளை ஆக்குபவர்கள்) அனைவரும் ஒரே நாளில் விக்கிக்கு வந்து தொகுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. புதிய கட்டுரையை உருவாக்கி விட்டு, அதன் பேச்சுப் பக்கத்தில் கலைச்சொல்லாக்க விளக்கங்களை குறிப்பிட்டுவிடுங்கள். விக்கித் திட்டத்திலும் பின்னொரு நாளில் அவை விவாதிக்கப்பட்டு/உரையாடப்பட்டு வழமையாக மாறும். இது ஒரு efficient முறை இல்லை என்றாலும், விக்கியின் தன்னார்வ பங்களிப்பு வடிவத்தால் உருவாகியுள்ள நிலை.
- கலைச்சொல்லாக்கத்துக்கு அழகியல் காரணங்கள் வேண்டா (அரிய தமிழெழுத்துகளைப் பாதுகாத்தல் போன்றவை). அர்த்தமும், புழங்கும் எளிமையும் மட்டும் போதும்.
--சோடாபாட்டில்உரையாடுக 08:56, 4 மார்ச் 2011 (UTC)
நன்றி திரு. உவரக்காரக் குப்பி அவர்களே, நான் யாருடைய வேலையையும் தவறாக நாடவில்லை. உங்கள் கருத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன். எழுதுவர் அனைவருக்கும் தெறியும் எழுதுவதின் சிரமத்தை. நான் அவர்களின் உழைப்பை மதிப்பளிக்கிறேன். இது அழகு மட்டுமில்லை நண்பரே, அச்சொல் காலத்திற்கும் பொருந்தும். உதாரணமாக ஆங்கிலத்தில் λ phage வருகிறதென்று வையுங்கள், அதைத்தமிழில் ‘லௌ’ பாவுண்ணி அதேப்போல் μ phage வருகிறதென்றால் ’மௌ’ பாவுண்ணி எனக்குறிப்பிடுவோம். நம் தமிழ் மொழியில் இதுப்போல் பல இருக்க நாம் ஏன் கிரேக்கத்திலிருந்து எடுக்கவேண்டும்.
இது மாதிரி ஒவ்வொரு கிரேக்க எழுத்திற்கும் ஒரு தமிழ் (வழக்கமில்லா) எழுத்தை சொன்னோம் என்றால் அவ்வெழுத்து வரும்போது இக்கலையாக்கச்சொல்லை குழந்தைகளுக்கு கற்பித்தோமென்றால் அவை நிலைக்கும். ஒரு நிரந்தரத்தன்மையை உருவாக்க முடியும். உதாரணத்திற்கு: λ - லௌ; ω - வௌ; α - ஙௌ; β - பௌ; ζ - யௌ; τ - டௌ; δ - ஞௌ; μ - மௌ என நிரந்தரமாய் உருவாக்கிவிட்டால் காலம் பதில் சொல்லும் நம் பணி எவ்வாறென்று. இது என் யோசனை - இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்பதெனக்குத் தெறியாது. இது உங்களுக்கு உடன்பாடிருந்தால் இவ்வுரையாடலை விவாதம் பக்கத்திற்கு எடுத்துச்செல்லுங்கள். இல்லையேல் குழப்பமில்லை. விட்டுவிடுங்கள். இது என் கருத்துமட்டுமே. என் கருத்திற்கு மதிப்பளித்தமைக்கு நன்றி. --சிங்கமுகன் 09:20, 4 மார்ச் 2011 (UTC)
- தயவுசெய்து நான் உங்கள்மேல் ஐயம் கொண்டதாகவோ, உங்களைச் சாடுவதாகவோ, தனிப்பட்ட தாக்குதலாகவோ எடுக்க வேண்டாம் என்பதைக் கூறவே விளைகின்றேன்.
- நீங்கள் உயிர்ச்சத்து பி கட்டுரையை நீக்கியதை உண்மையிலேயே நான் கவனிக்கவில்லை. ஆனால் ப்ரோட்டோசோவா கட்டுரையை கண்டேன். அங்கே ஏற்கனவே இருந்த தகவல்கள் சரியானவையா, தவறானவையா என்பது எனக்கும் தெரியாது. சரியாக தெரியாமல் நீக்க வேண்டாமே என்றும், பின்னர் அதுபற்றி தேடிப் பார்க்கலாம் என்றும் விட்டிருந்தேன்.
- இதற்குரிய தீர்வாக நாம் காண்பது>
- 1. குறிப்பிட்ட தகவல்களுக்கு சரியான மேற்கோள்கள் தரப்படாதவிடத்து, அவற்றை நாமே தேடிப்பார்த்து சரியான தகவலா என உறுதிப்படுத்தி சரியெனின் மேற்கோள்களை இணைக்கலாம்.
- 2. அப்படி முடிவெடுக்க முடியாதவிடத்து அத் தகவலை அளித்தவரிடம் அவரது பேச்சுப் பக்கத்திலோ, அல்லது குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ கேட்கலாம். (உ.ம். உயிர்ச்சத்து பி கட்டுரையில் தகவல் பிழைகள் உள்ளதாக நினைத்தால், நீங்கள் அங்கேயே பேச்சுப் பக்கத்தில் அதுபற்றி முதலில் குறிப்பிட்டுவிட்டு, பின்னர் தவறான தகவல்களை நீக்கலாம்.
- 3. சில சமயம் குறிப்பிட்ட ஒரு கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் வேறொரு கட்டுரைக்கு பொருத்தமானதாக இருப்பின், அவற்றை அங்கே இடமாற்றம் செய்யலாம்.
- 4. குறிப்பிட்ட தகவல் பிழையானதுதான் என்பது தீர்மானமாகத் தெரிந்தால் அவற்றைக் குறிப்பிட்டு தகவல்களை அழிக்கலாம்.
- 5. ஒரே தலைப்பில் இரு வேறு கட்டுரைகள் காணப்பட்டால், ஒரு கட்டுரையை அகற்றுவதற்குப் பதிலாக, அவ்விரு கட்டுரைகளையும் இணைக்கலாம். அப்படி இணைக்கும்போது, குறிப்பிட்ட கட்டுரைகளில் பங்களித்தவர்கள் அனைவரின் பங்களிப்பும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு இருக்கும் வண்ணம், வரலாற்றுடன் சேர்த்து இணைக்கலாம்.
- 6. குறிப்பிட்ட ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கும்போது, வேறொரு புதிய கட்டுரையை உருவாக்காமல், அந்த கட்டுரையையே திருத்தி மேம்படுத்தலாம். மிக அதிகளவில் தகவல் பிழைகள் இருந்தால் அகற்றிவிட்டு புதிய கட்டுரையை உருவாக்குதல் இலகுதான் என்பதையும் ஒப்புக் கொள்கின்றேன். முதலில் அதுபற்றி உரையாடல் பக்கத்தில் பேசிவிட்டு செய்தல் நல்லது.
- இவற்றைத்தான் நான் மேலே கூற வந்தேன். அதனை சரியாக விளக்காமையினால், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, உங்கள் மனதில் நெருடலை ஏற்படுத்தியமைக்கு வருந்துகின்றேன். நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதனால், விளக்கமாகவே இங்கே எழுதியிருக்கின்றேன்.
- உங்கள் பணி தொடரட்டும்.
- உங்கள் பணி தொடரட்டும்.
--கலை 11:48, 4 மார்ச் 2011 (UTC)
தங்கள் கலைச்சொல்லாகப் பணியைப் பாராட்டுகின்றேன், தங்களின் உரையாடலையும் எனது பதிலையும் இங்கே பேச்சு:நிலைக்கருவிலி பதிந்துள்ளேன்; உங்கள் மேலதிகக் கருத்துக் காண ஆவல். --சி. செந்தி 17:56, 4 மார்ச் 2011 (UTC)
விக்கி நடை
தொகுசிங்கமுகன்,
விக்கி நடை குறித்து இரு குறிப்புகள் -
1) தன்மை, முன்னிலை நடைகளைத் தவிருங்கள். (எ. கா. ”இதை நாம் ஆங்கிலத்தில் லீசன்சு என அழைக்கிறோம்” என்பதற்கு பதிலாக, ”இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது”)
2) அறிவுரை/பத்தி எழுத்து நடை/ஊக எழுத்து நடை வேண்டாம் எ. கா. “தமிழகத்திலும் அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் போன்ற அமைப்புகளும், தன்னார்வலர்களும் இது குறித்து ஆய்வுகள் செய்திருக்கக்கூடும். ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுறையில் இருக்கிறதென்று தெரியவில்லை. சாதாரண மக்களுக்கு இச்செடிகள் தினமும் வழியில் பார்த்துச் செல்லும் மற்றொரு காட்சியே.”
இவ்வரிகளில் தகவல்கள் ஊக அடிப்படையில் உள்ளன - “கூடும்” என்று. if in doubt, leave it out என்பதே விக்கியின் வழமை.
மேலும் “இவைகளை, களையகற்றும் இயந்திரங்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்வந்து மாந்த முயற்சியால் களையவேண்டியது கட்டாயமாகும்.” போன்ற அறிவுறைகள் இட வேண்டாம் (அவை நன்மையாக இருந்தாலும் கூட, விக்கியைப் படிப்பவர்களுக்கு dos and don'ts செல்லப்படுவதில்லை.)--சோடாபாட்டில்உரையாடுக 14:42, 13 மார்ச் 2011 (UTC)
திரு. உவரக்கார குப்பி அவர்களுக்கு, 1) உள்ளதை நான் மாற்றிவிட்டேன். மேலும், 2) உள்ளதை நீங்கள் திருத்தியமைக்கு நன்றி. தவற்றை திருத்திக்கொள்கிறேன். ஆனால் அது அறிவுரை மட்டுமல்ல அது தேவையானதும் கூட. ஆனால், அதை முறைமை மாறாமல் வேறுவடிவில் கொடுக்கமுடியுமா என கூறுங்கள். இதன் முக்கியத்துவம் நீங்களும் அறிவீர்கள். உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 18:04, 13 மார்ச் 2011 (UTC)
- வேறுவடிவில் கொடுக்கமுடியுமா என கூறுங்கள். இதன் முக்கியத்துவம் நீங்களும் அறிவீர்கள்.
- ஒரு கலைக்களஞ்சியம் என்பது தரவுகளை ஆவணப்படுத்தும் இடம் மட்டும் என்பதால் இங்கு அதைச் சேய்ய இயலாது. (we dont do advocacy, only documentation). ஆனால் நமது சகோதரத் திட்டங்களில் ஒன்றான விக்கி நூல்களில் இது போன்றவற்றை செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:16, 13 மார்ச் 2011 (UTC)
அத்தளம் எனக்கு போதுமான அளவுக்கு பரிட்சையமில்லை. நான் அதை சீக்கிரத்தில் கற்றுக்கொள்ள முற்படுகிறேன். தகவலுக்கு மிக்க நன்றிகள். --சிங்கமுகன் 18:20, 13 மார்ச் 2011 (UTC)
திரு. உவரக்காரக்குப்பி அவர்களுக்கு எனக்கு ஒரு உதவித்தேவைப்படுகிறது. நாம் விக்கியில் தேடும் போது பல சிக்கல்கள் அறியப்படுகின்றன. திரு. கார்த்திகேயன் என்பவர் நெய்வேலி காட்டாமணக்கு என்னும் தலைப்பில் உரையாடலில் இதை வேலிக்காத்தான் என்று அழைப்பார்களா என்று கேட்டுள்ளார். ஆனால், இது சீமைக் கருவேலமரத்தைக் குறிக்கும். ஆனால் நாம் பொதுத் தேடலில் அல்லது விக்கித்தேடலில் வேலிக்காத்தானைத் துலாவும் போது இக்கட்டுரை தென்படுவதில்லை. இச்சிக்கலைப் போக்க வழியுள்ளதா. மேலும் ஆங்கிலத்தில் ஆய்வுக்கட்டுரைகளில் சில துருப்புவார்த்தை (கீவோர்டு) கட்டுரையில் கொடுப்பார்கள். இவ்வாறான வார்த்தை தேடுபொறிகளில் தேடும் போது அக்கட்டுரை நமக்கு எளிதில் கிட்டும். இதுப் போல் சாத்தியக்கூறுகள் இங்கு உண்டா என்பதை கூறுக. இல்லையேல் உருவாக்கினால் கால விரயம் விக்கியின் நோக்கத்தை நிறைவேற்றலாமல்லவா.நன்றிகளுடன்.--சிங்கமுகன் 18:37, 13 மார்ச் 2011 (UTC)
- தனியாக துருப்புச் சொற்கள் என்ற வழி இல்லை. ஆனால் “வேலி காத்தான்” என்று தேடினால், “சீமைக் கருவேலமரம்” கட்டுரை வரவேண்டுமெனில் செய்ய வேண்டியவை இரண்டு - 1) கட்டுரை உரையுள் “வேலிகாத்தான்” என்ற சொல்லை இடுதல். எ. கா (இது சில இடங்களில் வேலிகாத்தான் என்றும் அழைக்கப்படுகிறது 2) வேலிகாத்தான் என்ற சொல்லுக்கு ஒரு வழிமாற்று/redirect உருவாக்குவது. இதைச் செய்தால், வேலிகாத்தான் என்று அடித்துத் தேடினால் சீமைக் கருவேலமரம் பக்கம் வந்து நிற்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:55, 13 மார்ச் 2011 (UTC)
அக்கட்டுரையில் வேலிக்காத்தான் என்ற வார்த்தை உரையில் இடப்பட்டுள்ளது. ஆயினும் என் தேடுபொறியில் சிக்கவில்லை. நான் ஆங்கில வார்த்தையைப் பிடித்து அதன் மூலமாகத்தான கட்டுரையை பிடித்தேன். அவ்வழிமாற்று எவ்வாறு செய்வது என்பதை விளக்க முடியுமா. மேலும், மேலே குறிப்பிட்ட தலைப்புக்கு ஒரு வழிமாற்று உருவாக்கித் தருக. நன்றிகளுடன். --சிங்கமுகன் 19:57, 13 மார்ச் 2011 (UTC)
- ”வேலிகாத்தான் மரம்” என்று தேடினால் கூகுளில் ஆறாவது முடிவாக அக்கட்டுரை வருகிறதே?. (க்கன்னா இல்லாமல் தேடினால்). விக்கி தேடு பெட்டியிலும் அடித்தால் இது வருகிறது. வேலிகாத்தான் மரம் மற்றும் வேலிகாத்தான் ஆகிய இரண்டு வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கியுள்ளேன். இரண்டும் இப்போது சீமை கருவேலமரம் என்ற பக்கத்தை சுட்டுகின்றன. இதற்கான நிரல் பின்வருமாறு:
- #redirect[[சீமை கருவேலமரம்]]--சோடாபாட்டில்உரையாடுக 20:06, 13 மார்ச் 2011 (UTC)
நான் இலக்கணத்தில் சிறிது பின்னுக்கு உள்ளேன். மேலும் வேலிகாத்தானில் ‘க்’ இடம்பெறாதா. ஏன் என்பதை ஓய்வுக்காலமிறுப்பின் விலக்குக. மேலும், வழிமாற்று உருவாக்கியமைக்கு நன்றி. முடிந்தால் வேலிக்காத்தானிற்கும் வழிமாற்று ஏற்படுத்தினால் என்ன. பிழை என்பது வழக்கம் தானே. நன்றிகளுடன். --சிங்கமுகன் 03:47, 14 மார்ச் 2011 (UTC)
- இவ்விடத்தில் ஒற்று மிகாது :-) ஒற்று விதி எனக்கும் பெரும் சிக்கல் தான், இக்கட்டுரையைக் கொண்டே நான் கண்டு பிடிக்கிறேன். வேலிக்காத்தான் என்ற--சோடாபாட்டில்உரையாடுக 04:09, 14 மார்ச் 2011 (UTC) வழிமாற்றை நீங்களே உருவாக்கிப் பாருங்கள். இச்சிவப்பிணைப்பை சொடுக்கி, மேலுள்ள நிரல் துண்டை ஒட்டி சேமித்தால், வழிமாற்று உருவாகி விடும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:09, 14 மார்ச் 2011 (UTC)
நன்றிகள் நான் உருவாக்கிவிட்டேன். அதுதான் துருப்பு என்பது தெறியாமல் விட்டிருந்தேன். உதவியமைக்கு நன்றி. --சிங்கமுகன் 04:54, 14 மார்ச் 2011 (UTC)
உதவி
தொகுதாங்கள் மிதவைவாழிகள் (Plankton) கட்டுரை உருவாக்கி இருந்தீர்கள், மிக்க அருமை; இப்பெயரின்படி "phytoplankton" ஐ எவ்வாறு அழைக்கலாம் எனக் கருதுகின்றீர்கள்? "தாவர மிதவைவாழிகள்" என்று அழைக்கலாமா? அல்லது அலைதாவரம் என்று அழைப்பதா? --செந்தி//உரையாடுக// 12:27, 16 மே 2011 (UTC)
அலைதாவரம் என்பது சாலப் பொருந்தும். மேலும் அதன் பெயர் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளது. இது என் தனிப்பட்டக் கருத்தல்ல. நன்றிகளுடன்.--சிங்கமுகன் 00:01, 17 மே 2011 (UTC)
- நன்றி சிங்கமுகன்.--செந்தி//உரையாடுக// 13:57, 17 மே 2011 (UTC)
சிங்கமுகன், அண்மைய கட்டுரையான பசைக்கலப்படலம் என்பதை புழையுடலிகள் எனும் பகுப்பில் சேர்த்திருந்ததைக் கண்டேன். புழையுடலி என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கம் தந்தால் பரவாயில்லை. --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 07:57, 19 மே 2011 (UTC)
புழையுடலி என்பது புழைகள் நிறைந்துக் காணப்படும் உயிரிணங்களாகும். இது அறிவியல் வகைப்பாட்டில் ஒருத் தனித்தொகுதியாகும். புழையுடலிகள் (பெரும்பாலானவை/ஏன் எல்லாம் என வைத்துக் கொள்ளுங்கள்) பஞ்சுடலிகளாகத் திகழவதால் புழையுடலிகளுக்கு மாற்றாக பஞ்சுடலிகள் எனக் குறிக்கப்படுவதும் உள்ளது. இப்பஞ்சுடலிகளின் உட்கட்டமைப்பில் காணப்படுக்கூடிய திரவநிலை திசுக்கலவையையே நாம் பசைக்கலப்படலம் என்கிறோம். ஆகையால் தான் புழையுடலிகள் என்னும் தொகுதியுடன் இணைத்தேன். இதன் பகுப்புக் காணப்படவில்லை பின்பு உருவாக்கிக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 08:27, 19 மே 2011 (UTC)
புழை என்பதன் பொருள் என்னவோ? //புழையுடலிகள் (பெரும்பாலானவை/ஏன் எல்லாம் என வைத்துக் கொள்ளுங்கள்) பஞ்சுடலிகளாகத் திகழவதால் புழையுடலிகளுக்கு மாற்றாக பஞ்சுடலிகள் எனக் குறிக்கப்படுவதும் உள்ளது// எனவே, பொதுவான பெயரான பஞ்சுடலிகள் என்ற பெயரிலேயே பகுப்பை உருவாக்கலாமே! --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:33, 19 மே 2011 (UTC)
மன்னிக்கவும் தாங்கள் பஞ்சுடலி/பஞ்சுயிரி என்னும் கட்டுரையைப் படித்துவிட்டு வந்தீர்கள் என்று நினைத்து விளக்கத் தவறிவிட்டேன். புழை - உடலில் துளைகள் காணப்படுவதாகும். பஞ்சுடலிகளுக்கும் பகுப்பை உருவாக்குங்கள். நன்றிகளுடன். - --சிங்கமுகன் 09:09, 19 மே 2011 (UTC)
அலையகலுருக்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தினைப் பார்க்கவும் சிங்கமுகன்... விளக்கம் தேவை. http://tawp.in/r/2bpy --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:57, 19 மே 2011 (UTC)
விண்மீன் உயிரி கட்டுரை எழுத்துப்பிழை திருத்தம்
தொகுகட்டுரையில் வழுக்களை அறிந்து திருத்தியமைக்கு முதற்கண் எனது நன்றிகள், எனினும் தாங்கள் பிழை எனத் திருத்தியமைத்த (விண்மீன் உயிரி) கட்டுரையில், திருத்தம் செய்தவை எனத் தாங்கள் எண்ணிய சில சொற்றொடர்களில் வழு உண்டு எனக் கருதுகின்றேன், பின்வருவனவற்றை மீள்பார்வை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். [தங்கள் திருத்தம்]
- நான் எழுதியது: "அழைத்தலே சரியானது" ; தாங்கள் மாற்றியது: "அழைத்தலேச் சரியானது"
- உதவிபுரிகின்றன ; உதவிப்புரிகின்றன
- பெருங்கடல் பகுதிகளில்: பெருங்கடற் பகுதிகளில்
- நான் எழுதியது: வலயங்களில் (கருத்து:zone) ; தாங்கள் மாற்றியமைத்தது: வளையங்களில்
- வசிக்கின்றன என்பதற்கும் வாழ்கின்றன என்பதற்கும் வேறுபாடு அறியேன்..wikt:வசி
- calcium என்பதை முறையாகத் தமிழில் உச்சரிக்கவேண்டும் எனின் கல்சியம் என்றுதான் கூறல்வேண்டும், கால்சியம் அல்ல!!
- புயங்கள் என்பது தமிழ்ச்சொல் இல்லையா? அதற்குரிய சொல் "கை" என்பதா? அது எவ்வாறிருப்பினும், ஐந்துக் கைகள் என்பது சரியல்லவே!
- குறிப்பு: என்றோ படித்த ஞாபகத்தில் இவற்றைக் குறிப்பிட்டுள்ளேன், தாங்கள் கூறியவை மெய்யென மெய்ப்பிக்கும் பட்சத்தில் நானும் இவ்வாறு எழுதக் கடமைப்பட்டுள்ளேன்.
- இலக்கணம் சொல்வது எளியது ஆனால் மேற்கோளுடன் விளக்குவதுதான் கடினம். முடிந்தவரைச் செய்கிறேன். தவறிருப்பின் சுட்டுக திருத்திக்கொள்கிறேன்.
- பெருங்கடல் பகுதிகளில்: பெருங்கடற் பகுதிகளில்
மேற்கோள் - http://www.freewebs.com/nallur/navalarinilakkanam.htm
- லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.
உ-ம். பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய் கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை
பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.
இங்குக் கொடுக்கப்பட்டது மேலே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட புணர்ச்சி விதி.
- உதவிபுரிகின்றன ; உதவிப்புரிகின்றன
இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும். உதாரணம். தேடிக்கொண்டான் போய்க்கொண்டான் உண்ணாச்சென்றான் உண்ணுhச் சென்றான் உண்டெனப்பசஜ தீர்ந்தது உண்ணப் போனான் மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான் உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான் அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செண்வான்
- "அழைத்தலே சரியானது" - "அழைத்தலேச் சரியானது"
இதன் நிலை எனக்குச் சரிவரத் தெறியவில்லை. இதில் தவறிருப்பின் சுட்டுங்கள். மாற்றம் கொடுத்துவிடுகிறேன்.
- வலயங்களில் (கருத்து:zone) வளையங்களில்
- வசி - வாழ் - மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டும் ஒரேப் பொருளைத்தான் உணர்த்துகின்றன.
- புயம் என்பது புஜம் என்னும் வடமொழியின் திரிபாகும். இதற்குப் பொருள் கை என்பதே. இதற்கு சுவைக் குன்றுதலின் பொருட்டு அதை ஈடுச்செய்ய நாம் வேறு இணைப்பதங்களை அனுகலாம் என்று நினைக்கிறேன். காம்பு, கிரணம் என்ற பதத்தை சிந்தித்துப்பாருங்கள். கிரணம் என்பதற்கு ஒளி, கதிர், கற்றை என்கிறப் பொருளை உணர்த்துகின்றன. இது இவ்விடத்தில் பொருந்தும் என நினைக்கிறேன். இதுப்போல் வேறு இணைச்சொற்களை அனுகலாம் என்பது என் கருத்து. எனக்கும் கை என இடுவதில் உடன்பாடு இல்லை.
மேலும், விண்மீன் உயிரி என்ற கட்டுரையை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்று. வாழ்த்துக்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 18:48, 23 சூன் 2011 (UTC)
- தங்கள் பெருவிளக்கத்துக்கு நன்றி. பெருங்கடல் பகுதிகளில் என்று தாங்கள் எழுதி இருந்தீர்கள், நான் பெருங்கடற் பகுதிகளில் என்றல்லாவா வரும் என்று
குறிப்பிட்டேன், அதற்குரிய புணர்ச்சி விதியைத் தந்தமைக்கு நன்றி.
உதவிபுரிகின்றன ; உதவிப்புரிகின்றன
தொகுஉதவிபுரிகின்றன என்பதை கூகிளில் தேடிப்பாருங்கள்; உதவிப்புரிகின்றன என்பதையும் தேடிப்பாருங்கள். உதவிபுரிகின்றன என்பதையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். ‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது. [1] என்னும் விதி இதற்குக் காரணமாக இருக்கலாம்.
""அழைத்தலே சரியானது"" / "அழைத்தலேச் சரியானது"
தொகுஏகார இடைச்சொல்லுக்கு முன் வரும் வல்லினம் இயல்பாகும். சான்று: அவனே கண்டான். [2]
மாற்றியது ஏனோ?
தொகு- வலயங்களில் (கருத்து:zone) வளையங்களில்
- //வசி - வாழ் - மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டும் ஒரேப் பொருளைத்தான் உணர்த்துகின்றன.//
புயம்
தொகுவடமொழியின் திரிபு என்பதை உணர்ந்தேன், மாற்றியதற்கு நன்றிகள். தற்போதைக்கு "கை" என்றே பயன்படுத்துகிறேன்.
இவ்வுரையாடலுக்குச் செலவழித்த நேரத்தை ஒரு கட்டுரையில் பயன்படுத்தி இருக்கமுடியும். :)
- (வேறு பயனர்களின் பார்வைக்குப் பின்னர், இச்சொற்கள் சரியென்றால்) மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுமாறு நான் கோருபவை:
- கல்சியம்
- வலயங்களில்
- அழைத்தலே சரியானது
- ஐந்து கைகள்
- இந்தியப் பெருங்கடற் பகுதிகளில்
- உதவிபுரிகின்றன
ஐயம் கொண்டவை:
- தொழில் = செயற்பாடு
ஆதாரங்கள்:
தொகுInvite to WikiConference India 2011
தொகுHi Chinkamukan,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
முதற்பக்க அறிமுகம்
தொகுசிங்கமுகன், உங்களைப் பற்றிய அறிமுகத்தை விக்கியின் முதற்பக்கத்தில் இட விரும்புகிறோம். தங்களைப் பற்றிய சிறு குறிப்பினை பின்வரும் இணைப்பில் தரும்படி வேண்டிக்கொள்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 04:57, 11 அக்டோபர் 2011 (UTC)
லியோ ஆண்டனி என்ற இயற்பெயர் கொண்ட சிங்கமுகன், மத்திய கடல்மீன் ஆராய்ச்சிக் கழகம், கேரளாவில் முதுஆய்வு மாணவராக உள்ளார். பெப்ரவரி 2011 முதல் தமிழ் விக்கித்திட்டங்களில் பங்களித்து வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் நுண்ணுயிரியல், உயிரியல், தாவரங்கள் போன்ற துறைகளில் கட்டுரையாக்கம், உயிரியல் கலைச்சொல்லாக்கம் போன்ற பங்களிப்புகளை செய்து வருகிறார். நீலப்பச்சைப்பாசி, மிதவைவாழி, உயிர்வழிப்பெருக்கம், வங்கவராசி, பயறு, நுண்ணுயிர்த் தின்னி ஆகியவை இவர் தொடங்கிய கட்டுரைகளில் சில.
நன்றி சிங்கமுகன். அறிமுகக் குறிப்பில் உங்கள் விக்கி பங்களிப்புகள் பற்றியும் குறிப்பிட வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள பிற அறிமுகங்களை மாதிரிகளாகக் கொள்ளலாம்--சோடாபாட்டில்உரையாடுக 13:20, 12 அக்டோபர் 2011 (UTC)
- சில மாற்றங்களைச் செய்துள்ளேன். உங்களுக்கு மறுப்பில்லையெனிலும் வரும் நாட்களில் முதற்பக்கத்தில் காட்சி படுத்தி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:17, 16 அக்டோபர் 2011 (UTC)
நன்றிகள். --சிங்கமுகன் 09:43, 16 அக்டோபர் 2011 (UTC)
வாழ்த்துகள்
தொகுசிங்கமுகன், தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!--P.M.Puniyameen 17:58, 20 அக்டோபர் 2011 (UTC)
நன்றிகள் ஐயா. அன்புடன். --சிங்கமுகன் 18:20, 21 அக்டோபர் 2011 (UTC)
- தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்களும்.--கலை 22:19, 21 அக்டோபர் 2011 (UTC)
- சிங்கமுகன்.தங்கள் முதல் பக்க அறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 23:32, 21 அக்டோபர் 2011 (UTC)
- சிங்கமுகன், தங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 23:51, 21 அக்டோபர் 2011 (UTC)
- சிங்கமுகன்.தங்கள் முதல் பக்க அறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 23:32, 21 அக்டோபர் 2011 (UTC)
அனைவருக்கும் நன்றிகள். அன்புடன். --சிங்கமுகன் 01:13, 22 அக்டோபர் 2011 (UTC)
- முதல் பக்க அறிமுகத்தில் தாங்கள் இடம் பெற்றுள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் விக்கிப் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul 01:24, 22 அக்டோபர் 2011 (UTC)
முதற்பக்கக் கட்டுரைத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சொறிமுட்டை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 27, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த தேவநேயப் பாவாணர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஜூலை 7, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த இறோம் சானு சர்மிளா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 11, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வாகை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டெம்பர் 04, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த இருபாலுயிரி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 15, 2015 அன்று வெளியானது. |
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:56, 24 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
விக்கித் திட்டம் 100 அழைப்பு
தொகுவணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி--இரவி (பேச்சு) 15:36, 11 சனவரி 2015 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள சிங்கமுகன்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.