பேச்சு:பாக்டீரியா
பிறமொழி விக்கி பக்கங்களில் 'பாக்டீரியா' கட்டுரைக்கான இணைப்பு
தொகுஇக்கட்டுரையின் இணைப்பு ஆங்கிலப் பக்கத்தில் Bacteria கட்டுரைக்குப் போகின்றது. ஆனால் ஆங்கிலப் பக்கத்தில் இருக்கும் தமிழுக்கான இணைப்பு ta:கோலுரு நுண்ணுயிர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழில் ‘கோலுரு நுண்ணுயிர்' கட்டுரைக்கே போகின்றது. அதை இந்த பாக்டீரியா கட்டுரைக்கு மாற்ற வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு எனக்கு அங்கே அனுமதியில்லை. யாராவது மாற்றி விடுங்கள். மேலும் பிற மொழிகளில் பாக்டீரியாவுக்கான கட்டுரைகள் எல்லாவற்றிலும், தமிழுக்கான இணைப்பு தவறாக ‘கோலுரு நுண்ணுயிர்' என்ற கட்டுரைக்கே போகுமென நினைக்கிறேன். அவை எல்லாவற்றிலும் தனித்தனியாக போய் மாற்ற வேண்டுமா? அல்லது பொதுவான வழி ஏதாவது உண்டா? நான் இரு நோர்வேஜிய மொழிகளிலும் மாற்றியுள்ளேன். மற்றவற்றை பார்க்கவில்லை--கலை 22:38, 14 அக்டோபர் 2009 (UTC)
- பொதுவாக ஆங்கிலவிக்கியில் மட்டும் மாற்றினால் போதுமானது. ஏனைய விக்கிகளுக்கு அங்கு இயங்கிக் கொண்டிருக்கும் தானியங்கிகள் தானாகவே மாற்றிவிடும். ஆங்கில விக்கியில் நீங்களே மாற்றலாம். அதற்கு அனுமதி தேவையில்லை. மாற்றும் போது என்ன மாற்றுகிறீர்கள் என ஒரு சிறு குறிப்புத் தந்தால் போதும் (உ+ம்: ta: link corrected). புகுபதிகை செய்து மாற்றங்கள் செய்வது நல்லது. பாக்டீரியா பக்கத்துக்கு நானே மாற்றி விடுகிறேன்.--Kanags \பேச்சு 02:18, 15 அக்டோபர் 2009 (UTC)
- ஆங்கிலப்பக்கத்தில் புகுபதிகை செய்ய முடியும் என்றாலும், குறிப்பிட்ட அந்த Bacteria பக்கமானது, பகுதியாக தடை செய்யப்பட்டு (semi-protected and can be edited only by established registered users) உள்ளதாலேயே என்னால் அங்கு மாற்றங்களைச் செய்ய முடியவில்லை. நன்றி.--கலை 08:29, 15 அக்டோபர் 2009 (UTC)
இதற்கான தமிழ் தலைப்பு??
தொகுஇதை நுண்ணுயிரி எனும் பக்கத்திற்கு நகர்த்தலாமே. தமிழில் பெயர் இருந்தால் நன்றாக இருக்குமே! -- Vatsan34 06:58, 5 ஜூன் 2010 (UTC)
நுண்ணுழையாள் பெயர்க்காரணம்
தொகுநுண்ணுழையாள் என்ற பதம் நன்றாக உள்ளது. ஆனால், பெயர்க் காரணம் தரப்படின் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். எண்ணிப்பார்க்கவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 10:48, 1 மார்ச் 2011 (UTC)
- விக்சனரியில் பயனர்:singamugan கொடுத்திருக்கிறார். அவரது வேண்டுகோளின் படி நகர்த்தினேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:59, 1 மார்ச் 2011 (UTC)
- நுண்ணுயிரி என்ற சொல் பரவலாகிக்கொண்டிருக்கும் வேளையில் இப்புதிய கலைச்சொல்லாக்கம் குழப்பத்தை உண்டுபண்ணும். இத்தகைய தொடர்ந்த மாற்றங்களினாலேயே நான் அறிவியல் உள்ளுரைகள் இடுவதில்லை. கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒவ்வொரு கலைச்சொல் தொகுப்பிருந்தால் எவ்வாறு குவியப்படுவது? என்போன்று பலருக்கும் இவை தடங்கல்களை ஏற்படுத்தி தமிழ் விக்கியில் பங்களிக்க தயக்கம் ஏற்படுத்துகிறது எனக் கருதுகிறேன்.--மணியன் 13:04, 1 மார்ச் 2011 (UTC)
- உரையாடல் ஒன்றை தொடங்காமல் அவரசப்பட்டு நகர்த்திவிட்டேன் மணியன். மன்னிக்கவும். இப்போது மீண்டும் பாக்டீரியா என்ற தலைப்பிற்கே மாற்றியுள்ளேன். உரையாடலின் முடிவில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதன்படியே செய்து விடுவோம். --சோடாபாட்டில்உரையாடுக 13:09, 1 மார்ச் 2011 (UTC)
(பயனர் சிங்கமுகனின் பேச்சுப்பக்கத்திலிருந்து இங்கு நகர்த்துகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 17:18, 1 மார்ச் 2011 (UTC) விவாதத்திற்கு நன்றிகள். நான் விக்சனரியில் அதற்கான விளக்கங்களை கொடுத்துள்ளேன். நுண்ணுயிரி என்பது நான் உருவாக்கிய பக்கம் தான். மொழி வளர்ச்சிக்கு சொல்வளமும் தேவை. நுண்ணுயிரி என்பது பொதுவான பெயர். நீங்கள் நுண்ணுயிரி எடுத்தீர்கள் என்றால் அது ஒரு தனியுலகம். நுண்ணுழையாள் அதில் ஒரு அங்கமே. நாம் பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் முதுமையடையும் போது பலர் கேள்வி எழுப்பநேரிடும். பாக்டீரியா - நுண்ணுயிரி என்பது கலைச்சொல் என்றால் தலைப்பிட்டவர் நுண்ணுயிரி என எழுத வேண்டியதுதானே. நுண்ணுயிரி என்பது பன்மையை குறிக்கும் சொல்; உதாரணம் - நுண்ணுயிர் என்பது நுண்ணுழையாள், நுண்புஞ்சை, மூத்தவிலங்கி, நுண்பாசி, தீநுண்மம், ஆர்கிபாக்டீரியாக்கள் (தமிழில்பெயர் துலாவி கொண்டிருக்கிறேன்). பன்மையையும் ஒருமையையும் இணைப்பது எவ்வாறு சாத்தியமாகும். இது காரணம் கருதியிடப்பட்டப் பெயர். நீங்கள் ஐயமிருப்பின் பெயர்க்காரணத்தை விவரிக்கிறேன். நுண் - நுண்மை, உழையாள் - உழைப்பாளி/உழைக்கும் ஒருவன். இவைகள் பூமியில் உணவு கிடைத்தால் அதற்கான வேலையை இடையிராது நிறைவேற்றும். நான் பெயரை இட்டதற்கு ஆங்கிலத்தைப்போல் வேறு மொழிகளிலிருந்து திருடவில்லை. நமது மொழியில் அழகான் ழ கரத்துடன் எப்போதும் சுவைக்கும் படியாக விவரித்துள்ளேன். வேண்டுமென்றால் ஆங்கிலம் கலந்துள்ள பாக்டீரியா கட்டுரையை முழுமையாக மறுபதிப்பு செய்கிறேன். தலைப்பை நன்தமிழ் பெயராக மாற்றினால். மேலும் எல்லா பெயர்களும் உயிர் - உயிர் என்று வருகிறது. இப்படியே தொடர்ந்துகொண்டு போனால் சொல்வளம் குன்றிவிடும். தவறிருப்பின் பொருத்தமான பெயரைப் பரிந்துரை செய்க. ’’’பெயர்க்காரணம் ஆழ உழப்படும் பலனடையும் வரை’’’ பிறகு மாற்றியமைக்கப்படும். மெலும் ஐயமிருப்பின் விவாதிக்க.
’’’உதவி’’’ - உயிர் என்னும் சொல்லுக்கு இணைசொற்கள் தேவை. உதவுங்கள். இணைந்து வளர்ப்போம் நம் அன்னைக்கு அணி சேர்ப்போம். நன்றிகளுடன் --சிங்கமுகன் 22:39, 1 மார்ச் 2011 (UTC)
- சோடாபாட்டில்,சிங்கமுகன் - எனது குறிப்புகள் பொதுவானவை. அறிவியலில் தொடர்ச்சியாக கலைச்சொல்லை மாற்றிக்கொண்டே இருப்பது நமது இலக்கியச் சார்பைக் காட்டுவதுடன் புதியவர்களுக்கு ஒவ்வொரு முறையும் மூல ஆங்கிலச்சொல்லை நாடும் தேவையை ஏற்படுத்துகிறது. பொதுவாக அறிவியலிலும் சட்டத்திலும் ஓர் சொல்லின் பொருளை வரையறை செய்துவிட்டு அதனை மேலே ஆள்வதே முன்னேற்றத்திற்கான பாதை. ஆங்கிலத்திலும் பல சுட்டுப்பெயர்கள் தவறான முறையில் இடப்பட்டுள்ளன. இருப்பினும் அதனையே அனைவரும் பயன்படுத்தி சீர்மை படுத்தி விடுகிறார்கள். புதிய சொல்லாக்கங்கள் வேண்டாமென்றுச் சொல்லவில்லை. பயன்படுத்தத் துவங்கிய சொற்களைப் பேணுவது தொடர்ச்சியான புரிதலுக்கு வழிகோலும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறேன். தவிர,பள்ளிப் பாடநூல்களிலும் கல்லூரிகளிலும் ஆளப்படும் சொற்களைப் பேணுவதும் மாணாக்கர்களுக்கு எளிதாக இருக்கும்.
- குறிப்பாக இப்பக்கத்தின் தலைப்பிற்கும் சிங்கமுகனின் உதவிக்கும் செல்வா, பயனர்:கலை, சுந்தர் போன்றவர்கள் கருத்துரை வழங்குமாறு வேண்டுகிறேன். --மணியன் 17:38, 1 மார்ச் 2011 (UTC)
உதவிய நன்பர் சோடாபாட்டில் அவர்களுக்கு நன்றி. முதலில் என்னைப்பற்றி நான் கூறிவிடுகிறேன். நான் நுண்ணுயிரியல் ஆய்வாளன். எனக்கும் இந்நுண்ணுயிருக்கும் ஆறு ஆண்டுகள் தொடர்பு முடிந்து ஏழாம் ஆண்டு தொடங்கிவிட்டது. மேலும் நான் தனித்தமிழிலும் பாவாணர், மறைமலையடிகள் மீதும் ஆர்வமுள்ளவன். எனது மொழியில் சிதைவு என்பது என்னால் நடக்காது. என்னால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய இயலும் என்ற தோற்றமே விக்கிவலைகளில் நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் தொடர்பான என் கட்டுரைகள். எனது கட்டுரைகள் தேவையான அனைத்து உள்ளடக்கங்களையும் பெற்றிருக்க வேண்டுமென்பதே என் நோக்கம். விவாதத்திற்கு வருவோம். உதவி: பாக்டீரியா என்னும் நுண்ணுயிர் பேரினத்திற்கு நுண்ணுழையாள் என பெயர் மாற்றம் கொடுத்துள்ளேன். இப்பெயர்க்காரணம் விளக்கம் குறித்து பாக்டீரியா விக்கிசனரியில் காண்க. இப்பெயர் பொருத்தமாயின் அப்பெயரைப் பின் தொடர்ந்து விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைத்தலைப்பை மாற்றவும். உதவியை மறவாமல் செய்தருளுங்கள். நன்றியுடன். --சிங்கமுகன் 10:31, 1 மார்ச் 2011 (UTC) சிஙகமுகன், புதிய கலைச்சொல்லாக்கத்தைப் பற்றி இங்கு - பேச்சு:பாக்டீரியா - ஒரு உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரி என்ற கலைச்சொல் பரவலாகப் பயனபடுத்தப்படுவதால், புதிய கலைச்சொல் அவசியமா என்று ஒரு பயனர் ஐயமெழுப்பியுள்ளார். தங்கள் கருத்துகளை அங்கு இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:11, 1 மார்ச் 2011 (UTC) விவாதத்திற்கு நன்றிகள். நான் விக்சனரியில் அதற்கான விளக்கங்களை கொடுத்துள்ளேன். நுண்ணுயிரி என்பது நான் உருவாக்கிய பக்கம் தான்.அதைப் படித்தீர்கள் எனறால் நுண்ணுயிர் என்பதற்குள் எத்தனை மாற்றங்கள் வேண்டும் என்பது தெளிவாகும். மொழி வளர்ச்சிக்கு சொல்வளமும் தேவை. நுண்ணுயிரி என்பது பொதுவான பெயர். நீங்கள் நுண்ணுயிரி எடுத்தீர்கள் என்றால் அது ஒரு தனியுலகம். நுண்ணுழையாள் அதில் ஒரு அங்கமே. நாம் பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சியில் முதுமையடையும் போது பலர் கேள்வி எழுப்பநேரிடும். பாக்டீரியா - நுண்ணுயிரி என்பது கலைச்சொல் என்றால் தலைப்பிட்டவர் நுண்ணுயிரி என எழுத வேண்டியதுதானே ஏன் பாக்டீரியா என எழுத வேண்டியதுதானே ஏனென்றால் அவர் உணர்ந்திருக்கிறார் அது வேறு என்று. நுண்ணுழையாள் ஒரு நுண்ணுயிரி ஆனால் நுண்ணுயிர்களெல்லாம் நுண்ணுழையாள் அல்ல. நுண்ணுயிரி என்பது பன்மையை குறிக்கும் சொல்; உதாரணம் - நுண்ணுயிர் என்பது நுண்ணுழையாள், நுண்புஞ்சை, மூத்தவிலங்கி, நுண்பாசி, தீநுண்மம், ஆர்கிபாக்டீரியாக்கள் (தமிழில்பெயர் துலாவி கொண்டிருக்கிறேன்) போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். பன்மையையும் ஒருமையையும் இணைப்பது எவ்வாறு சாத்தியமாகும். இது காரணம் கருதியிடப்பட்டப் பெயர். பெயர்க்காரணத்தை ஆழ அறிந்து பொருள் மாறுபாடின்றி பின் மாற்றம் கொடுத்துள்ளேன். ஏன் நீங்கள் நுண்ணுயிரி என அழைக்க முற்பட்டது போல் இதைக்கண்டறிந்த அறிஞர் ஆண்டன் வான் லீவனாக்கும் முதலில் இதை அனிமல்க்யூல் என விவரித்தார். பின்னர் காலப்போக்கில் அறிவியலாளர்கள் இது பொருத்தமானதன்று எனக்கண்டு பாக்டீரியா என மாற்றம் கொடுத்தனர். குதிரை என்பது ஒரு விலங்கு. ஆரம்பத்தில் இதற்கு விலங்கு எனும் பொதுவான பெயரை இட்டிருக்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் வரிக்குதிரை, கழுதை, ஏனைய விலங்குகளான மான், கரடி இவைகளையும் அறிந்தனர். ஆனால் இன்னும் விலங்கு என அழைத்தால் பொருளில் பிழை ஏற்படாதா. மற்றவிலங்குகளை குறிக்கும் போது விலங்கு என குறிப்பிட்டால் அவை குதிரையை குறிக்கும் அல்லவா. காலமும் வளர்ச்சியும் கருதி மாற்றம் தேவை என்பதால் தான். வேறு சில பெயர்கள் தகுந்த காரணங்களோடு விளக்கினால் அதைய்ம் காரணம் கருதி ஏற்றுக்கொள்கிறேன். நுண்ணுழையாள் என்னும் கலைச்சொல் மிகவும் பொருந்தும். ஆராய்க. இன்னும் ஐயமிருப்பின் பெயர்க்காரணத்தை விவரிக்கிறேன். நுண் - நுண்மை, உழையாள் - உழைப்பாளி/உழைக்கும் ஒருவன். இவைகள் பூமியில் உணவு கிடைத்தால் அதற்கான வேலையை இடையிராது நிறைவேற்றும் ஏனைய உயிர்களும் இதைச்செய்கின்றன ஆனால் இது கலையாக்கத்திற்கான் மாற்றம். நான் பெயரை இட்டதற்கு ஆங்கிலத்தைப்போல் வேறு மொழிகளிலிருந்து திருடவில்லை. நமது மொழியில் அழகான ’ழ’ கரத்துடன் எப்போதும் சுவைக்கும் படியாக விவரித்துள்ளேன். தலைப்பை நன்தமிழ் பெயராக மாற்ற உதவிடுங்கள் பாக்டீரியா என்னும் கட்டுரையை முழுமையாக மறுபதிப்பு செய்கிறேன். இது தழுவி எழுதப்பட்ட கட்டுரை. நமது மக்களுக்கு ஏற்ற வகையில் உருமாற்றம் செய்யவிழைகிறேன். மேலும் எல்லா பெயர்களும் உயிர் - உயிர் என்று வருகிறது. இப்படியே தொடர்ந்துகொண்டு போனால் சொல்வளம் குன்றிவிடும். தவறிருப்பின் பொருத்தமான பெயரைப் பரிந்துரை செய்க. ’’’பெயர்க்காரணம் ஆழ உழப்படும் - பலனடையும் வரை’’’ பிறகு மாற்றியமைக்கப்படும். மேலும் ஐயமிருப்பின் விவாதிக்க தவறிருப்பின் மன்னிக்க. ’’’உதவி’’’ - உயிர் என்னும் சொல்லுக்கு இணைசொற்கள் தேவை. தமிழில் பயனற்று பல எழுத்துக்கள் உள்ளன குறிப்பாக “கௌ முதல் னௌ வரை” அது போல் பல உள. இவைகளைக்கொண்டு கலையாக்கம் செய்தால் காலம் கடப்பினும் 247ம் நிலைக்கும். உதவுங்கள். இணைந்து வளர்ப்போம் நம் அன்னைக்கு அணி சேர்ப்போம்.
பயனர் மணியனின் கேள்விக்கு பதில் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். நீங்கள் தெளிவாகவில்லையென்றால் விளக்கவேண்டியது என் கடமை. உங்களுக்கு புரியாமல் சொல்வதில் நான் கற்ற கல்வியே வீண். ஐயமிருப்பின் தயக்கமின்றி தொடுக்க. இது அறிவியலாளர்களுக்கு மட்டுமான கட்டுரையல்ல. இது மாந்தன் அனைவருக்கும் பொது.
நண்பர் சோடாபாட்டில் அவர்களுக்கு, நீங்கள் உரைத்தக்கருத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். இப்போது தான் தமிழில் இதுபோன்று வளர்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஆனால் பெயரில் தேவையிருப்பதால் தான் முன்வைக்கிறேன். பள்ளிபாடத்திட்டங்களிலும் அரசாவணங்களிலும் சில நாட்களுக்குள் அரசாணைகளின் மூலம் மாற்றிவிடலாம். பல ஆயிரமாண்டுகளாய் தமிழில் விரவிவந்த கொம்பெழுத்துக்களை பெரியார் மற்றும் அந்நாள் முதல்வர் அவர்களின் லை, னை, ணை என மாற்றம் கொடுக்கவில்லையா. எதுவுமே சாத்தியம். விவாதிப்போம் தீர்வுகாண்போம். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 07:47, 2 மார்ச் 2011 (UTC)
- சிங்கமுகன், உங்கள் விளக்கங்களுக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி. தமிழ் விக்கியில் பங்களிக்கும் அனைவருமே உங்களைப் போன்ற தமிழார்வம் கொண்டே தமது நேரத்தையும் உழைப்பையும் நல்கி வருகிறார்கள். முன்பு கூறியது போல எனது கருத்து ஓர் பொது கருத்தே. சீர்மை படுத்தப்படாத தமிழ் கலைச்சொல்லாக்கம் மீது எழுந்த எனது ஆதங்கம். ஓர் சமநிலை எய்தும்வரை இதற்கு மாற்றில்லை என்பதை உணர்கிறேன்.
- இக்கட்டுரையைப் பொறுத்தவாறு இதன் தலைப்பிற்கு உங்களைப் போன்ற உயிரியலில் ஆழ்ந்த படித்தவர்கள் கூறுவதை ஏற்பதில் தவறில்லை. இங்குள்ள உரையாடல்களை நோக்கினால் பயனர்:கலை இதற்கு கோலுரு நுண்ணுயிர் எனத் தலைப்பிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதையும் ஆங்கில இணைப்பு Bacteriaவிற்கு செல்வது தவறென்றும் சுட்டிக்காட்டியுள்ளதை நோக்குங்கள். எனவேதான் உயிரியலில் /கலைச்சொல்லாக்கத்தில் உங்களைப் போன்றே ஆழ்ந்த அறிவுள்ள பயனர்கள் செல்வா, பயனர்:கலை, சுந்தர் மற்றும் மகிழ்நன் போன்றோர் கருத்துரை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.--மணியன் 08:06, 2 மார்ச் 2011 (UTC)
மணியன் உங்களுக்கு எனது நன்றிகள். நான் ஆரம்பத்திலிருந்து வருகிறேன். கவனித்து வாசிக்கவும் - இது விளங்கியது என்றால் நான் தேவையில்லை நீங்களே அதன் தேவையை உணர்த்துவீர்கள்.
- பாக்டீரியா - என்பது லத்தீனிய வார்த்தை. இதற்குப் பொருள் ச்டாஃப் அல்லது கேன் என்று பொருளாகும். முதல் வார்த்தை ச்டாஃப் - பணியாள் அல்லது வேலையாள் என்பது பொருள் படும். கேன் - என்பது கோல் அல்லது பிரம்பு என்னும் பொருள்.
- கோலுறு நுண்ணுயிர் - நான் பாக்டீரியா ஒரு நுண்ணுயிர் என்றும் நுண்ணுயிர் எல்லாம் பாக்டீரியாக்கள் அல்ல எனத் தெளிவாக மேலே விளக்கியுள்ளேன். கோலுறு என்பது கோல் அல்லது பிரம்பு என்பது பொருள். கவனிக்க - பாக்டீரியாக்களில் கோலுறு என்பது ஒரு வகை. பாக்டீரியாக்கள் எல்லாமே கோலுருக்கள் இல்லை.
எ.கா. - நாமறிந்த நுண்ணுயிரால் (மைக்ரோப்சு) வரக்கூடிய ஆந்த்ராக்சு என்னும் நோயை உண்டாக்கும் நுண்ணுழையாட்கள் பாசில்லசு ஆந்த்ராசிச் ஒரு கோலுறு நுண்ணுழையாட்களாகும். இதேப் போன்று நாமறிந்த மார்சளி/வளியியம்/நிமோனியா என்னும் வியாதியை உண்டாக்கும் ச்ட்ரெப்டோகாக்கசு நிமோனியே ஒரு கோளவுறு நுண்ணுழையாட்களகும். இவையடுத்து, ஆக்டினோநுண்ணுழையாட்கள் - பூஞ்சைகள் போன்று நாடாவடிவிலான உருவத்தையும்; நீலப்பச்சைப்பாசி/நீலப்பச்சை நுண்ணுழையாட்கள் - பல வடிவுகளிலும், பல வடிவம் வரையறுத்துக்கூறமுடியாத அளவுக்கு உருமாற்றும் ஆற்றல் கொண்ட நுண்ணுழையாட்கள் உள.
---ஆகையால் கோலவுறு நுண்ணுயிரி - என்பது அடிப்படையிலேயே தவறாகிறது.
- வருவோம் நுண்ணுழையாட்களுக்குள்:- நுண்ணுழையாள் - பாக்டீரியம் (ஒருமை); நுண்ணுழையாட்கள் - பாக்டீரியா (பன்மை).
- பெயர்க்காரணம்:- நுண்ணுழையாள்/நுண்ணுழையாட்கள் - நுண்மை என்பது அதன் உருவத்தின் அளவைக்குறிப்பது; உழையாட்கள் - உழைக்கும் ஆட்கள்/பணியாட்கள் - பாக்டீரியா என்னும் லத்தீனிய வார்த்தையின் பொருளை உணர்த்தும். நான் அப்படியே தழுவி ஏன் மாற்றம் கொடுத்தேன் என்றால் இந்நுழையாட்கள் உணவும்/வாழ்விடமும் கிடைத்தாள் உழைக்கத்தொடங்கிவிடும். இவை நம்மால் தான் உழைக்காமல் இருக்குமேத்தவிர அவைகளாய் இருப்பது மிகவும் அரிதே.
போதும் என்று நினைக்கிறேன். மேலும் ஐயமிறுப்பின் தயங்காமல் தெளிவு செய்க. உங்கள் ஐயத்தை போக்குவது என் கடன்.இந்நுண்ணுழையாட்கள் பற்றிய முழுமையானக் கட்டுரையை (யாரையும் தழுவாமல்) எல்லோருக்கும் விளங்கும் வகையில் உள்ளது உள்ள படியேத் தர நான் தயார் - ஆனால் பெயர்த்திருத்தம் கட்டாயம். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 16:26, 2 மார்ச் 2011 (UTC)
- //இங்குள்ள உரையாடல்களை நோக்கினால் பயனர்:கலை இதற்கு கோலுரு நுண்ணுயிர் எனத் தலைப்பிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதையும் ஆங்கில இணைப்பு Bacteriaவிற்கு செல்வது தவறென்றும் சுட்டிக்காட்டியுள்ளதை நோக்குங்கள்.// என்று மணியன் குறிப்பிட்டிருப்பதில் சில தவறான புரிதல் இருக்கக் கூடுமென்பதால் இங்கே விளக்க முயல்கின்றேன்.
- ஆரம்பத்தில் 'கோலுரு நுண்ணுயிர்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பாக்டீரியாவுக்குரிய பொதுவான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. அதற்கான ஆங்கில இணைப்பும் Bacteria கட்டுரைக்கே போனது. எனவே அந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில், 'கோலுரு நுண்ணுயிர்' என்னும் பெயர் சரிதானா? என்ற தலைப்பிட்டு ஒரு உரையாடலை ஆரம்பித்தேன். கோலுரு நுண்ணுயிர் என்பது Bacillus (பசிலசு) வகைப் பாக்டீரியாக்களையே குறிப்பதனால், பொதுவாக பாக்டீரியாக்களை அப்பெயரிட்டு அழைப்பது பொருத்தமில்லை என்றே கூறினேன். அதாவது சிங்கமுகன் கூறிய அதே கருத்தையே நானும் கூறியிருந்தேன். அந்தக் கருத்து அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அங்கிருந்த உள்ளடக்கத்தை பாக்டீரியா என்ற தலைப்பிட்ட கட்டுரைக்கு நகர்த்திவிட்டு, கோலுரு நுண்ணுயிர் என்ற கட்டுரையில் பசிலசு வகை பாக்டீரியாக்களுக்குரிய தகவல் சிலவற்றை இணைத்திருந்தேன். அத்துடன் பாக்டீரியா கட்டுரைக்கு ஆங்கில இணைப்பாக Bacteria கட்டுரையையும், கோலுரு நுண்ணுயிர் கட்டுரைக்கு ஆங்கில இணைப்பாக Bacillus கட்டுரையையும் இணைத்தேன். ஆனால் ஏற்கனவே Bacteria ஆங்கிலக் கட்டுரையில் தமிழ் இணைப்பாக கோலுரு நுண்ணுயிர் கொடுக்கப்பட்டிருந்ததை என்னால் மாற்ற முடியாமல் இருந்தது. அதை மாற்றி விடும்படிதான் இந்த பேச்சுப் பக்கத்தின் ஆரம்பத்தில் கேட்டிருந்தேன். அதனை பின்னர் பயனர்:Kanags மாற்றிக் கொடுத்தார். எனவே அத்துடன் பாக்டீரியா, கோலுரு நுண்ணுயிர் ஆகிய இரு கட்டுரைகளும் சரியான தகவல்களுடன் மாற்றப்பட்டிருந்தன.
- இனி பாக்டீரியாவுக்கான சரியான தமிழ் கலைச்சொல் இடுவது பற்றிய எனது கருத்து. பொதுவாக எல்லாக் கட்டுரைகளிலும் தமிழ் கலைச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதனால் பாக்டீரியாவுக்கும் ஒரு தமிழ் கலைச் சொல்லை இடுவது நல்லதே. சிங்கமுகன் கூறியுள்ளதுபோன்று, நுண்ணுயிர் என்னும்போது அது பாக்டீரியாக்களை மட்டுமல்லாமல் ஏனைய நுண்ணுயிர்களையும் இணைத்தே கருதப்பட முடியுமென்பதால், பாக்டீரியாவை, நுண்ணுயிர் என்று அழைப்பது பொருத்தமில்லை என்றே நினைக்கின்றேன். Microbiology யை நுண்ணுயிரியல் என்கின்றோம். அப்படியானால் Micro organism தானே நுண்ணுயிர் என்றாகின்றது. இதனாலேயே Bacteria வை பாக்டீரியா என்றே அழைக்கலாம் என்று செல்வாவும் குறிப்பிட்டிருந்தார். எனவேதான் பெயர்மாற்றமின்றி அக்கட்டுரை தொடர்ந்தது. அப்படி பெயர் மாற்றம் செய்வதாயின் சிங்கமுகன் கூறியுள்ள நுண்ணுழையாள் என்ற பெயரும் பொருத்தமாகவே தோன்றுகின்றது. புதிய கலைச்சொல்லாக்கத்தில் எனக்கு அவ்வளவு திறமை இல்லை. எனவே சொல்லாக்கத்தை மற்றவர்களிடமே விட்டு விடுகின்றேன். அப்படியே இந்தக் கட்டுரையின் பெயரை நுண்ணுழையாள் என்றோ அல்லது வேறு பெயரிட்டோ மாற்றும்போது பாக்டீரியா கட்டுரையில் வழிமாற்றை விட்டுச் சென்றால் தேடலில் கிடைக்க இலகுவாக இருக்கும். அத்துடன் ஏனைய கட்டுரைகளில் உள்ள பாக்டீரியாவுக்குரிய உள்ளிணைப்புக்களையும் அவ்வப்போது காண்கின்ற போது மாற்றினால், புதிய கலைச்சொல் பழக்கத்திற்கு வரும். அத்துடன் நுண்ணுயிரி என்ற பெயர் பாக்டீரியாவுக்கு பொருத்தமற்றதாக இருப்பதனால் புதிய கலைச் சொல்லை பரவலாகக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் எடுத்தால் நல்லது.
- மேலும் பேச்சு:கோலுரு நுண்ணுயிர் பக்கத்தில், கோலுரு நுண்ணுயிருக்கு, கோலுயிரி என்ற பெயரையும், பாக்டீரியாவுக்கு, குறுவுயிரி என்ற பெயரையும் செல்வா பரிந்துரைத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றேன். --கலை 21:35, 2 மார்ச் 2011 (UTC)
நன்றிகள் மதிப்பிற்குரிய கலை அவர்களே. குறுவுயிரி என்பதும் நுண்ணுயிரி போன்றே பொதுவான வடிவில் உள்ளன. மேலும் விவாதத்தின் முடிவில் எதுவோ அதைத்தொடர்ந்து என் கட்டுரை விரைவில். மீண்டும் நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:42, 3 மார்ச் 2011 (UTC)
- விளக்கங்களுக்கு நன்றி கலை. நீங்கள் வேண்டிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன என அறியாது தவறாக புரிந்து கொண்டேன். சிங்கமுகன் கூறியுள்ள நுண்ணுழையாள் பெயர் எனக்கும் ஏற்புடையதே. செல்வாவையும் கருத்து வழங்க வேண்டியுள்ளேன். அவரது கருத்துக்களுக்குப் பிறகு கட்டுரைத் தலைப்பை நகர்த்தலாம்.--மணியன் 07:59, 3 மார்ச் 2011 (UTC)
வேண்டுமென்றால் ஒரு பொருளைக்குறிக்கும் பல சொல் இருப்பது மொழிக்குச்சிறப்பு. இதுப்போன்று வார்த்தைகள் செய்யுட்கள் இயற்றும் போது ஏதுவாக இருக்கும். இங்கே குறிக்கப்படும் குறுவுயிரி என்னும் சொல் நுண்ணுயிரி என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். மிக்கநன்றிகள் - இதுப்போன்று ஒரு மாற்றுவார்த்தையைத் தான் தேடிகொண்டிருந்தேன். மேலும் இதுப்போல் உயிர்/வாழ் - இப்பொருள் தரும் வேறு பல சொற்களையும் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். குறுவுயிரியல்/நுண்ணுயிரியல் கலையாக்கம் பணி செவ்வனே சீறும்சிறப்புமாய் நடந்தேறும். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 08:28, 3 மார்ச் 2011 (UTC)
- குறுவுயிரி என்பது நுண்ணுயிரிக்கு இணையான சொல் என்றே எனக்கும் தோன்றியது. ஏனையவர்களின் கருத்தையும் கேட்டுவிட்டு பெயர் மாற்றம் செய்யலாம்.--கலை 09:41, 3 மார்ச் 2011 (UTC)
உரையாடல் தொடர்ச்சி
தொகுநண்பர்களே, இந்த உரையாடலை நான் இப்பொழுதுதான் பார்க்கின்றேன். மணியன் சுட்டிக்காட்டிய பிறகே உணர்ந்தேன் இந்த உரையாடலை. மணியனுக்கு நன்றி. பாக்டீரியம், பாக்டீரியா என்பதை நுண்ணுழையாள், நுண்ணுழையாள்கள் என்று கூறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆள் என்னும் பின்னொட்டு சரியானதாக எனக்குப் படவில்லை. நுண்ணுழையி எனலாம். ஆனால் மணியன் கூறியது போல சீர்மை பேணவேண்டிய கட்டாயமும் உள்ளது. சில சொற்களை அப்படியே ஏற்கலாம். நுண்ணுயிரி என்பதை ஆங்கிலத்தில் microorganism என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துகின்றோம். முதலில் பாக்டீரியம் என்பதற்குக் கோலுயிரி என்றே பெயர் இருந்தது. மூலப் பொருள் வழி ஈடான சொல்லே. ஆனால் வழக்கில் பாக்டீரியம் என்பது இன்னும் பொதுமைப் பொருள் கொண்டுவிட்டது. தமிழில் பெயர் வழங்கும்பொழுது சுருக்கமாக இருப்பது நல்லது. இந்த நோக்கில் நுண்ணி என்றே சொல்லலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் பாக்டீரியம், பாக்டீரியா என்றால் தவறில்லை என்பது என் தனிக்கருத்து. நுண்ணி அல்லது பாக்டீரியம் என்று பல இடங்களில் எழுதலாம். நுண்ணி என்பது mites, ticks என்பதை உண்ணி என்பதைப் போன்றதொரு பெயர் என்றும் கருதலாம். நுண்ணியிரில் ஒரு வகை நுண்ணி. கோலுயிரி நுண்ணியில் ஒரு வகை. இங்கு நடந்துள்ள உரையாடல் நெடியது என்றாலும் அது பயனுடையது. இப்படித்தான் பலரும் பலவாறு கலந்து அலசுதல் வேண்டும். --செல்வா 03:09, 4 மார்ச் 2011 (UTC)
திரு செல்வா அவர்களே நீங்கள் கண்டது நுண்ணுழையாளை மட்டும். நீங்கள் பரிந்துரைக்கும் பெயர் பொருந்தும் வேறொன்றிர்க்கு. நான் பெயர்க்காரணம் கொடுத்தும் உணர மறுக்கிறீர்கள். இல்லையா. நீங்கள் கொடுத்தப்பெயருக்கானத் தேவைகள் - தீநுண்மம் இட்டாச்சி. வேறு என்ன நுண்மம் பொருந்தும். நான் எழுதியக்கட்டுரை இராப்பியணிப்பசியைப் படியுங்கள் இது புதிதாகக் கண்டறிந்தப்பாசி. பாசிக்கே இந்த நிலைமை. மேலும் நுண்ணி என்பது பொதுச்சொல் அது சாலப்பொருந்தும் இடத்தில் நானே உங்களுக்குத் தெறிவிக்கிறேன். பெயரை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள். நான் கலைச்சொல்லாக்கத்தில் சொற்களுக்குத் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இட்டதற்கே விவாதம்.
- நான் ஆர்கி பற்றி மேலே கூறியிருப்பே. அதற்கு உங்களின் சார்பாக பழைநுண்ணி என்று செல்வாவின் பெயரை காலம் சொல்லும் வகையில் செய்கிறேன். வாருங்கள் தோழர்களே இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்.
மேலும் நுண்ணி என்பது nano, pico, femto, angstrom இவைகளுக்கு எதை வைப்பது. இவைகளில் நானோவில் உயிர்கள் உள வகைகளும் உள அதற்குப் பெயர்கொடுங்கள். பூர்த்திசெய்யுங்கள். உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். நுண்மை மைக்ரோ மட்டும் போதுமென்றால் நானோக்ளோராப்சிச்ற்கு எதை வைப்பது.
- தேவை அதிகம். நான் ஒரு இலட்சம் கட்டுரை கொடுக்கவேண்டியவன். அதுவும் வெவ்வேறு தலைப்புகளில் தொடர்ச்சியின்றி. உணருங்கள் உங்களது பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறேன். நுண்ணுயிரியல் - பல கோடி, அதில் பிரிவுகள் ஆயிரத்தைக்கடந்து விட்டன. அதில் ஆங்கிலவிக்கிப்பீடியா தொட்டதே சிறு/நுண்ணளவு. உணருங்கள் செல்வா நான் ஒன்றோடு ஒன்று உரசாத வகையில் எக்காலத்திலும் விமர்சிக்காதவகையில் தெளிதமிழில் அமைக்கின்றேன்.
- நுண்ணுழையாள் - உழைப்பு இயந்திரமும் கொடுக்கமுடியும். ஆள் என்பது ஒரு உயிரைக் குறிப்பது. நானோரோபட்ச் வந்துவிட்டது. இதற்கு என்ன பெயரிடுவது. சுருக்கமென்பது அவசியம். ஆனால்........................ நீங்கள் தொடர்ந்துரைக்க அது சுருங்கும். உணருங்கள்.
நான் இவ்வளவுத் தெளிவாய் எழுதுவது நீங்கள் படித்து ஆராய்ந்து பொருள் கூற வேண்டுமென்பத்ற்காக. தயவு செய்து ஆரம்பத்தில் இருந்து படித்து அதற்குப் பிறகு ஐயத்தை உரையுங்கள். ஆர்கி வகை நுண்ணிக்கு - பழைநுண்ணி அலசுக ஆராய்க. கட்டுரை சீக்கிரத்தில் காலம் தாழ்த்த முடியாது. ஆங்கிலத்தில் உள்ள 3 இலட்சத்தை இலட்சியமாக்கத் தோல் கொடுங்கள். என்னால் நேரத்தை விரையம் செய்ய இயலாது. மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் அனைத்திற்கும் பதம் தேவை. உதவுங்கள். இட்டதிற்கே நேரத்தை விரயம் செய்யாதீர்கள். தவறிருப்பின் மன்னியுங்கள் செல்வா உங்கள் உதவி பெரிதும் தேவை. வாழ்வே தமிழாக - --சிங்கமுகன்:09:46, 4 மார்ச் 2011 (UTC)
- பேச்சு:கோலுரு நுண்ணுயிர் என்னும் பக்கத்தையும் பார்க்க வேண்டுகின்றேன். சிங்கமுகன், நீங்கள் சொல்லும் அத்தனைக்கும் நல்ல தமிழ்ச்சொற்கள் எளிதாக ஆக்கி வழங்கலாம். உங்கள் விறுவிறுப்பும் நற்றமிழ் ஊக்கமும் மகிழ்ச்சி ஊட்டுகின்றது. விக்கி என்பது விறுவிறுதான் எனினும், இங்கு சிலவற்றைச் சற்று பொறுமையாக அணுகுவது நல்லது. நானோ, பிக்கோ, பெம்ட்டோ, அட்டோ சீட்டோ போன்ற கீழ்வாய் எண்களை அப்படியே வழங்கலாம் என்பது இங்கு நாம் பின்பற்றுவது. அவற்றுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் ஆக்க முடியாது என்பது அல்ல காரணம். பொதுமை கருதி அப்படிச் செய்கின்றோம். பல அனைத்துல அலகுகளிலும் அவை வருவன. ஆங்குசிட்ராம் அல்லது ஆங்குசிற்றோம் என்பது ஒருவரின் பெயரின் அடிப்படையால் எழுந்தது ( Anders Jonas Ångström). பிரையான் (prion) என்பதை தீப்புரதம், தீப்புரதி, பிறையன் அல்லது தீமடிப்புரதம் (இதில் புரதச் சேர்மம் தவறாக மடிப்புற்று இருப்பதால், கெடுதி ஊட்டும் புரதத்துண்டாக உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் பிரையான் (prion) என்பதை இசுட்டான்லி இபி. புருசினர் (Stanley B. Prusiner) என்பார் 1982 இல் protein + infection என்னும் இரண்டு சொற்களையும் இணைத்து ஆக்கினார்). இதே போல Archaea என்பதை நான் தொல் நுண்ணி (பழையநுண்ணி) என்பது பொருந்துமா என அறிய வேண்டும். ஆர்க்கியா, ஆரிக்கியோபாக்டீரியா என்பன அண்மைக்காலத்தில் பல்வேறு வகைப்பாட்டு வகைகளில் மாறிக்கொண்டிருந்துள்ளன. தொல், பழைய என்பதற்குத் தக்கக் காரணங்கள் உள்ளனவா? கருவிலி ஒற்றை உயிரணு (செல்) வகை என்றாலும் இவற்றின் மரபணுக்களும், உயிரணு இயக்கக் கூறுகளும் நிலைக்கரு உயிரியின் உயிரணுவின் பண்புகள் போல் இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆர்க்கியாவின் தனிச்சிறப்பான பண்பு என்னவென்று அறிந்தால் அதனை ஒட்டி நல்ல தமிழ்ப்பெயரை உடனே ஆக்கி ஆளலாம். ஆனால் தொடர்புடைய அனைத்தையும் ஒருசேர எண்ணிப்பார்த்துப் பெயரிடல் நல்லது. நுண்ணி என்பது பொதுவாக இருந்தாலும், வழக்கால் இது இன்னதைக் குறிக்கும் என்னும் முறைப்பாடு தோன்றிவிடும். அது பற்றி அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டாம். ஆனால் சுருக்கம் மிகவும் வேண்டப்படுவது. இயலாதவிடத்தில் மட்டுமே விரிவு.--செல்வா 17:39, 4 மார்ச் 2011 (UTC)
திரு செல்வா, அவர்களே, ஒன்றை உலகிற்கு உணர்த்த ஆவல்கொள்கிறேன். நுண்ணுயிர்கள் ஓரணு (செல்) உயிர்கள் மட்டும் கிடையாது. அவைகளிலும், ஏன் நுண்ணுழையாட்களிலும் பலணு உயிர்கள் உண்டு. உங்களுக்கான விளக்கத்தை மரு. செந்தில் அவர்களும், எனது வாதத்தின் இருதியிலும் இட்டுள்ளேன். நீங்கள் எந்த ஐயமானாலும் தெளிவாக கேட்கலாம். Coccus என்பதற்கு மணி என அழகாக அமைத்திருக்கிறீர்கள் (மணி நுண்ணுழையாட்கள்), Bacillus என்பதற்கு கோல் என்பது அழகாகப் பொருந்தும் (கோல் நுண்ணுழையாட்கள்) மற்றும் சுருள் என்பது சுருள் நுண்ணுழையாட்கள் என அறிவுடன் பொருந்தும். அழகு என்றால் ஆராய சொல்கிறீர்கள் அதன் அறிவு என்று இட்டேன். குச்சி என்பது சரியே ஆனால் அதை வேறு தெளிவான இடங்களில் இட்டுக்கொள்ளலாம். அங்கே, ஒருத் தவறு இழைத்திருக்கிறீர்கள் Mycoplasma விற்கு பதில் Microplasma என இட்டிருக்கிறீர்கள். இது ஏனைய நுண்ணுழையாட்களினும் சிறிது என்பதால் மட்டுமல்ல, அவைகளுக்கு கலச்சுவர் கிடையாது. அவைகளைச் சுற்றி மெய்க்கருச்சவ்வுயிரிகளைப் போல் முதலுறுமென்சவ்வு (plasma membrane)னால் மூடப்பட்டதால். இவைகள் கலக்கூடிற்கு உறுதியைத் தருவதில்லை. ஆகையால் இவைகள் நுண்ணுழையாட்களின் வடிகட்டியை கடந்து சென்றுவிடும். இதைக்குறித்து பெயர்மாற்றம் செய்தால் மிகவும் அழகாக இருக்கும். இங்கே ’மைகோ’ என்பது கொழவு, வலுவி, நலுவி, ஆகியப்பொருளையுணர்த்தும். இந்த மைக்கோ என்பது பூஞ்சைகளையும் உணர்த்தும்.
அங்கிலத்தில் ப்ளாச்மா என்பதின் முழு அர்த்தத்தையும் இங்கு இட்டுள்ளேன். 1712, "form, shape" (earlier plasm, 1620), from L.L. plasma, from Gk. plasma "something molded or created," from plassein "to mold," originally "to spread thin," from PIE *plath-yein, from base *pele- "flat, to spread" (see plane (1)). Sense of "liquid part of blood" is from 1845; that of "ionized gas" is 1928. அலசி ஆராய்ந்து விடை காணுவோம். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:46, 5 மார்ச் 2011 (UTC)
staff என்பது இங்கு பணியாள் அல்ல!
தொகுஎனது கருத்தின்படி "தற்போதைக்கு" பாக்டீரியா என்று உள்ளதை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தலாம். ஆங்கிலத்திலோ அல்லது வேற்றுமொழியிலோ இருப்பதை அப்படியே மொழிபெயர்க்கவேண்டும் என்பதில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. //பாக்டீரியா என்பதன் பொருள் பணியாள் அல்லது பிரம்பு என்பதாகும்.// இது விக்சனரியில் குறிப்பிடப்பட்டது. இதுபோன்ற சொல் உருவாக்கத்தின்போது, இதன் பொருளானது "பணியாள்" என்று எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவது மற்றையவர் அறிவதற்கு உதவியாக இருக்கும். (பார்க்க:http://dictionary.reference.com/browse/bacteria) நீங்கள் குறிப்பிட்டது "ச்டாஃப் அல்லது கேன்" அதாவது "staff" என்பதையே என்று கருதினால்...ஆங்கிலத்திலும் ஒரு சொல்லுக்குப் பலபொருள் இருப்பதை மறந்துவிடவேண்டாம்.. இங்கு staff எனக்குறிப்பிட்டது "பணியாளை" அல்ல! "ஒரு குறுந்தடியை" என்பதை அறிந்துணர்க. இதன்படி தங்கள் கலைச்சொல்லாக்கம் பொருந்தாதது ஒன்று எனக்கருதுகின்றேன்.. (பார்க்க: http://www.etymonline.com/index.php?term=bacteria)
- Archaea என்பதற்கு The American Heritage® Dictionary இன் பெயராக்க விளக்கம்:
ar·chae·on or Ar·chae·on n. pl. ar·chae·a (-k-) Any of various single-celled prokaryotes genetically distinct from bacteria, often thriving in extreme environmental conditions. [New Latin, from Greek arkhaion, neuter singular of arkhaios, ancient; see archaic.] [Greek arkhaikos, old-fashioned, from arkhaios, ancient, from arkh, beginning, from arkhein, to begin.] இதன்படி "ஆரம்ப" எனும் சொற்பதம் கருத்தில் எடுக்கலாம்.--சி. செந்தி 18:45, 4 மார்ச் 2011 (UTC)
சிங்கமுகன் மறுமொழி
தொகுமரு. செந்தில் அவர்களே, நீங்கள் ஆங்கிலத்தில் புலமைப் பெற்றவர் என்பது நன்கு ஆராய்ந்து அறிந்துகொண்டேன். நான் மறுபடியும் சொல்கிறேன், நான் பெயர் உருவானவிதம், அதன் பொருள், அதன் நிலைக்கும் தன்மை, அதன் உச்சரிப்பில் சிரம், காலத்தின் வலிமை, நாம் இட்டதின் பெயர்க்காரணம், விக்கியைத்தவிர்த்து உண்மைப் பொருளை அடைதல், ஒரே மாதிரி சொல்தொடர்ச்சியை அகற்றி இட்டுவருகின்றேன் என்பதை தெளிவாக உணர்த்துகிறேன். நீங்கள் வேறுத்தமிழ்ப் பெயர்களை இடலாம் என்று சொல்லியிருந்தாலும் அதன் பொருளை நான் அலசியிருப்பேன். நீங்கள் பாக்டீரியா என இடச்சொல்வது நியாயமா. நானும் அதே etymonline வைத்துத்தான் பெயரை உருவாக்கினேன். பெயர்க்காரணம் முன்தலைப்புகளில் தெளிவாக உரைத்திருக்கிறேன். அதில் பணியாளி என்பதற்கு காரணத்தையும் இட்டுள்ளேன். பணிவன்புடண் காண்க.
மேலும், நான் நுண்ணுயிரியல் துறையைச் சார்ந்தவன். At the beginning of I year in B. Sc., during the I class of Bacteria, we have read means Stick. Staff and cane both denotes single sense I know. As your trend I too won't trust English. Though the words are designed by a Scientist I am going to be a future scientist I try to fix what is wright. I never like copying anything as such. We people have to argue our discovery then where we will get recognition. We have to read everything in detail. The result we are giving is question open to world not a single person. Then, how do you think that I will give in such a fashion of imitation. Even you refer wiktionary, some of the words from my field I'll refer some realistic and novel words. Oxygen என்பதன் தமிழாக்கம் சரியா. உயிர்வளி. ஆக்சிசன், உணர்த்தும் காடிக்கள் உருவாகக் காரணம் இவ்வளி என்று. நானும் அப்படியே மாற்ற பரிந்துரைக்கவில்லை. அறிவியல் காரணங்கள் அலசாமல் பெயரிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இங்கே ஆங்கிலேயர்கள் உணர்ந்திருக்கிறார்கள் ஆக்சிசனைத் தவிர்த்து வேறுவாயுக்களை உண்டு வாழ்பவனவும் உண்டு என்று. அவை வேறு வாயுக்களை உண்டு வாழ்வதால் அவைகள் உயிர் இல்லையா. மீண்டும் சொல்கிறேன், நான் இட்டப்பெயரில் பிழை இல்லை.
எனது வாதங்களில் வரும் வார்த்தைகளில் தவறிருப்பின் மன்னிக்க. நீங்கள் ஆழ்ந்து அலசுகிறீர்கள், வாழ்த்துக்கள் மருத்துவரே. நாங்கள் மருத்துவரல்ல முனைவரே. இங்கேத் தொடர்வது ஒரு ஆரோக்கியமான விவாதம். நான் மிகவும் மகிழ்வுடன் வரவேற்கிறேன். என் தமிழில் இத்துணைப்பேர் ஆர்வமா. ஆச்சர்யங்களும் மகிழ்ச்சிகளும்.
மேலும், (Archae) ஆரம்பம் என்பது சரியாணப்பொருளையுணர்த்தும். அதன் பின் தொடர் நுண்ணுழையாட்களை உணர்த்தக்கூடாது. ஏனென்றால், சிமித்தின் 6 அரசுப்பிரிவில் சிக்கல்கள் அதிகம் உள. நான் ஆய்வாளன். இது எங்கள் தொகுதி. ஊசின் 3 பிறிவு சிறந்தவையாக நானும் கருதுகிறேன். ஆகையால் பிற்காலத்தில் பிறிவு ஏற்படினும் ஆயத்தமாக இருப்பதே அறிவின் வளர்ச்சி. என்னுடைய பரிந்துரைகளாக, ஆரம்பநுண்ணி அல்லது தோன்றுநுண்ணி அல்லது நுண்ணியை விளக்கி ஏதாவதொன்று, அல்லது இவைகளின் பண்புகள் இவ்வகைகளில் பெரும்பாலும் உச்சவிரும்பிகளாகவே (Extremophiles) இருக்கின்றன. இப்பண்பை உணர்த்தியும், இவைகள் கருச்சவ்விண்மையைத் தவிர்த்து பெரும்பாலான பண்புகள் மெய்க்கருச்சவ்வுயிர்களைச் சாறும். இங்கேயும் பிரிவையுணர்த்துவது சவ்வு மட்டுமே. உணர்க.
மேலும் ஆரோக்கியமான விவாதங்களை எதிர்ப்பார்க்கிறேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:18, 5 மார்ச் 2011 (UTC)
செந்தி மறுமொழி
தொகு- //எனது கருத்தின்படி "தற்போதைக்கு" பாக்டீரியா என்று உள்ளதை அப்படியே மாற்றாமல் பயன்படுத்தலாம்.//
- தற்போதைக்கு என்று குறிப்பிட்டதைக் கவனிக்க. தங்களின் இப்பணி மிகவும் தேவையானது, எனினும் ஏற்கனவே பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள சொற்களை விட இன்னும் ஆயிரக்கணக்கில் தமிழாக்கம் செய்யவேண்டிய சொற்கள் உள்ளதே எனும் கருத்தில் அவ்வாறு கூறினேன். சில சொற்கள் பெயர் மாற்றாமல் அவ்வாறே இருந்துவிடுவது இயல்பு.
- //பெயர்க்காரணம்:- நுண்ணுழையாள்/நுண்ணுழையாட்கள் - நுண்மை என்பது அதன் உருவத்தின் அளவைக்குறிப்பது; உழையாட்கள் - உழைக்கும் ஆட்கள்/பணியாட்கள் - பாக்டீரியா என்னும் லத்தீனிய வார்த்தையின் பொருளை உணர்த்தும். நான் அப்படியே தழுவி ஏன் மாற்றம் கொடுத்தேன் என்றால் இந்நுழையாட்கள் உணவும்/வாழ்விடமும் கிடைத்தாள் உழைக்கத்தொடங்கிவிடும். இவை நம்மால் தான் உழைக்காமல் இருக்குமேத்தவிர அவைகளாய் இருப்பது மிகவும் அரிதே.//
//during the I class of Bacteria, we have read means Stick. Staff and cane both denotes single sense I know.//
- நீங்கள் ஏற்கனவே “staff” எனும் பதத்தில் இருந்தே மொழிபெயர்ப்பு செய்ததைக் கூறியிருந்தீர்கள், staff என்பது இங்கே “குறுந்தடி” எனும் பொருளில் வருகின்றது என்று நான் கூறியதற்கு தாங்கள் சரியான மறுமொழி இடவில்லை. தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ staff என்பதன் மாற்றுப் பொருளைக் (பணியாள்) கையாண்டு இருக்கின்றீர்கள், ஆனால் அது பிழை என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள். இதனை வேறொரு மொழி நிபுணரிடம் கேட்பதே சிறந்தது, நான் எனதுபாட்டிற்கு இதனைக் கூறவில்லை; இன்னும் இரண்டு உருசிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தபின்னரே தெரிவிக்கின்றேன் என்பதை தயை செய்து நினைவில் கொள்க.
- // உழைக்கும் ஆட்கள்/பணியாட்கள் - பாக்டீரியா என்னும் லத்தீனிய வார்த்தையின் பொருளை உணர்த்தும். //
- !!! பாக்டீரியா என்பதற்கு உழைக்கும் ஆட்கள்/பணியாட்கள் என்று கருத்து இல்லை !!! அப்படிக் கருத்து உண்டு என்றால் இதனைத் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
மேலும் அவ்வாறு இருந்தாலும் கூட தாங்கள் கூறும் பெயர்க்காரணம் இங்கே ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று; “உழைப்பாளி, பணியாள்” எனும் கருத்தில் சமூகத்திற்குக் கேடுவிளைவிக்கும் (ஒரு சில நன்மை விளைவிக்கும் பக்டீரியாவும் உண்டு எனினும்..) ஒரு உயிரினத்திற்கு, அதனைப் பாராட்டி, உழைப்பாளி என்று நாமே பட்டம் சூட்டுவது உகந்தது அல்ல! அது எதற்காக உழைக்கின்றது??
- //என் தமிழில் இத்துணைப்பேர் ஆர்வமா. ஆச்சர்யங்களும் மகிழ்ச்சிகளும்.//
- நம் தமிழில் என்று கூறுங்களேன்.:) தங்கள் ஆர்வம் யாவரையும் மகிழ்விக்கின்றது. தங்கள் பணி மிக்கச் சிறந்தது; உதவி தேவைப்படும்போது தங்களிடம் கோருகின்றேன், அதுபோல ஏதேனும் என்னிடத்தில் தேவை எனின் எனது பேச்சுப்பக்கத்தில் இடலாம். எத்தனையோ சொற்கள் உருவக்கப்படவேண்டியன. ஏற்கனவே உருவாக்கப்பட்ட பல சொற்கள் பிழையான கருத்தையும் தருகின்றன. அவற்றை ஆராய்வோம். அருள் கூர்ந்து செந்தி என்றே அழையுங்கள். --சி. செந்தி 15:58, 5 மார்ச் 2011 (UTC)
மிகச்சிறப்பான விவாதம் என்னால் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எல்லோரும் ஒரு கட்டத்தில் இதையே வைத்துக்கொள் என்று விட்டுவிடுவர். நீங்களே எனக்குத் தேவை. எனது பிழையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அது மட்டுமல்ல. அதற்கு மாற்று பொருள் உள்ளது என்பதும் தெறியும் என்று கூறியதில் பொய்யொன்றுமில்லை. இதுவும் தவறு என்றால் மன்னிக்க. மிக்க மகிழ்ச்சி. உங்களது பணி மிகவும் தேவை ஆழ அலசுகிறீர்கள். அதே மாதிரி மாற்று பொருள் எடுத்தது தவறு என்றாலும் நான் மன்னிப்பு கோருகிறேன். அதற்கான பொருளை எடுத்தால் எனது வாதம் வலிமை இழக்குமே என்று தான் அதை நான் இடவில்லை. இதற்கும் மன்னிப்பு கோருகிறேன். ஏன் அதில் தவறொன்றுமில்லை என்று எனக்குத்தோன்றுகிறது. இந்த உலகத்தில் பெயரும் பொருளும் உரக்கக் கூறுவதில் மனிதருக்கேப் பண்புள்ளது. ஆதலால் அவைகளை பாராட்டுவதில் தப்பில்லை என்று எனக்குத் தோன்றியது. நீங்கள் மருத்துவர் அதன் தீதன்மையைக் கண்டிருப்பீர்கள். நான் அதன் நன் தன்மையில் உழைத்து வருகிறேன். ஆகையால் அதற்கு அப்பெயரைப் பரிந்துரைக்கிறேன்.
என் தமிழ் என்று கூறியது மிகவும் தவறு என்று மிகவும் வருந்துகிறேன். இங்கே (எனது உடன் வேலை செய்பவர்கள் பற்றி) இதையும் மேற்கோளிட வேண்டாம். இங்கே என்னுடன் உரையாடுபவர்கள் தமிழை பிழையுடன் உச்சரிப்பர். அவர்களிடம் என் தமிழை கொலை செய்யாதீர்கள் என்று சொல்லி சொல்லி பழக்கத்தில் அதைக்கூறிவிட்டேன். மெய்யாகவே அதை நான் கவனிக்கவில்லை. மிக்க நன்றி சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திரு. செந்தி அவர்களே. மேலும் இதுப்போன்று தவறு நடவாமல் பார்த்துக்கொள்கிறேன்.
உழைப்பாளியின் பண்புகளை விவரித்தால் அதற்கு விளக்கம் கொடுக்க சிறப்பாக இருக்கும். நான் சிறுவன் என் பிழையை மன்னிக்க வேண்டுகிறேன். நீங்கள் கடைசி வரைக்கும் தமிழ்ப் பெயரை பரிந்துரை செய்ய மறுக்கிறீர்களே. இப்போது இல்லையேல் எப்போது. அதற்கு குச்சி என்ற பதம் பொருந்தாது என்பது என்னுடைய கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மேலும், நீங்கள் ஓய்வு நேரத்திலாவது யோசித்து அல்லது ஆலோசித்து பாக்டீரியாவிற்கு மாற்று கொடுங்கள். இவ்வாங்கில அல்லது வேறு மொழியென்று எடுத்தாலும் சரி எனக்கு வேண்டவே வேண்டாம். தயவு செய்து உதவுங்களேன் விடை காண. யாரும் முன்வரவில்லை என்றால் நான் கட்டுரையில் எல்லா இடத்திலும் பாக்டீரியாவையும் இட முடியாது நுண்ணுழையாட்களையும் இட முடியாது. என் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளுங்கள். வேறு நபர்களும் உதவ முன்வாருங்கள். வேறு எந்தப் பொருளை எடுப்பது என்பதையாவது தெளிவு செய்யுங்கள். உங்கள் நேரத்தை விரயம் செய்ய நான் விரும்பவில்லை. நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:44, 5 மார்ச் 2011 (UTC)
நுண்ணுழையாட்கள் பெயர் பற்றி
தொகுஇவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் இச்சொல் பயன்படுத்தல் நிறுத்தப்பட்டு விடும் என்று நினைத்தேன், ஆனால் பரவலாகப் புதிய கட்டுரைகளில் எல்லாம் இச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இங்கு ஏற்கனவே உரையாடியவர்கள் நான் கருத்துத் தெரிவித்ததன் பின்னர் ஒன்றும் கூறவில்லை, ஒரு இடத்தில் பாக்டீரியா என்று ஒரு சிலர் கையாள வேறு ஒரு இடத்தில் குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் நுண்ணுழையாட்கள் என்று குறிப்பிடுதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மிதவைவாழி என்னும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கட்டுரையில் கூட நுண்ணுழையாட்கள் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. --செந்தி//உரையாடுக// 11:24, 1 மே 2011 (UTC)
- மேலே உள்ள நெடிய உரையாடலை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தேன். நல்ல தமிழ்ப்பெயர்களை நாம் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், உழையாள் என்பது முற்றிலும் தவறாகப்படுகிறது. செந்தி, நாம் இதுபற்றி இறுதியாக ஒரு முடிவு எடுப்போம். தேவைப்பட்டால் பிற இடங்களிலும் மாற்றி விடலாம். இப்போதைக்கு இருவருமே பொறுமை காப்பது நல்லது. -- சுந்தர் \பேச்சு 11:36, 1 மே 2011 (UTC)
- ஒருமித்த கருத்து ஏற்படும் வரை / ஒருமித்த கலைச்சொல் உருவாகும்வரை பாக்டீரியா என்றே இருக்கட்டும். நுண்ணுழையாள் என்று வரும் இடங்களில் “பாக்டீரியா” என்று மாற்றியுள்ளேன். புதிய விடயங்களுக்கு எதிர்ப்பு / மாற்று கருத்து ஏற்பட்டால், பழையபடியே தொடர்பது விக்கி மரபு என்பதால், தைரியாமாக இம்மாற்றத்தைச் செய்துள்ளேன். மற்றபடி, இக்கலைச்சொல் உரையாடலில் எனக்கு எக்கருத்தும் இல்லை (கருத்து சொல்லும் அளவுக்கு துறை அறிவு போதாது :-)) --சோடாபாட்டில்உரையாடுக 12:12, 1 மே 2011 (UTC)
- நீங்கள் செய்தது சரிதான், சோடாபாட்டில். பேச்சு:கோலுரு நுண்ணுயிர் பக்கத்தில் செல்வா பரிந்துரைத்த குறுவுயிரி போன்ற பொருத்தமான தமிழ்ப்பெயர் ஒன்றை அடைப்பில் தரத் தொடங்கலாம். பொதுப்பயன்பாட்டில் பாக்டீரியா பரவலாக இருப்பதால் சில காலம் இரண்டையும் குறிப்பிட்டு வரலாம். நாளடைவில் தமிழ்ப்பெயரை மட்டும் முதன்மைப்படுத்தும் வாய்ப்பு வரும். -- சுந்தர் \பேச்சு 14:31, 1 மே 2011 (UTC)