வீரராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 42:
வீரராஜேந்திரனின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் [[கடாரம்|கடாரத்தின்]] மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. இந் நிகழ்ச்சி கி.பி 1068 இல் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
 
===சாளுக்கியருடனான தொடர்பு===
 
முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், கி.பி. 1068 ஆம் ஆண்டில், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
 
===இறப்பு===
 
வீரராஜேந்திரன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானான். இவன் தனது ஆண் மக்களைச் சோழநாட்டின் பகுதிகளில் ஆளுநராக நியமித்திருந்தான். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் [[அதிராஜேந்திர சோழன்|அதிராஜேந்திரன்]] என்னும் பெயருடன் அரசனானான்.
"https://ta.wikipedia.org/wiki/வீரராஜேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது