ஜுனூன் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
[[எழுவாய்]] மற்றும் [[பயனிலை]]கள் தமிழில் வரும் வரிசை அடியோடு மாறியிருந்த இவ்வழக்கு ஜுனூன் நிகழ்ச்சியை நோக்கமற்ற நகைச்சுவையாக (unintentional comedy) மாற்றியது. மெலும் இந்தியில் பயன்படுத்தப்படும் சுட்டுமொழிகளும் அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டன. (எ. கா) இந்தியில் ”சுனியே/சுனோ” (கேளுங்கள்/கேள்), தேக்கியே/தேக்கோ (பாருங்கள்/பார்) என்று சொற்றொடரின் ஆரம்பத்தில் பயன்படுத்துவது வழக்கம். தமிழில் இப்படி வினைச் சொற்கள் அப்படியே பயன்படுத்தபடுவதில்லை, மாறாக “இங்கே பார்/ இங்கே பாருங்க” என்ற பயன்பாடு உள்ளது. ஆனால் இந்தி வாயசைப்புக்கு ஒத்த ஜுனூன் தமிழ் மொழிமாற்றத்தில் “பாருங்க, உங்க பேச்சு சரியில்லை”, “பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க” போன்ற வசனங்கள் பரவலாகக் கையாளப்பட்டன.
 
இத்தகு மொழிபெயர்ப்பு தமிழைச் சிதைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நடையினைக் கேலி செய்யும் வகையில் பிற தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பாத்திரங்கள் அமைக்கப்பட்டன. ஜுனூனுக்குப் பின்னும் நுக்கத், விக்கிரமாதித்தன், ஸ்வாபிமான், கானூன், இம்திஹான், அலிஃப் லைலா, சந்திரகாந்தா போன்ற இந்தித் தொடர்கள் இதே பாணியில் தமிழில் மொழிமாற்றப்பட்டு சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின. காலப்போக்கில் இந்த பாணி குறைந்து விட்டாலும் இன்றளவும் வெளியாகும் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளில் இந்தப் பாணியின் சாயலைக் காணலாம்.
 
இந்தி/பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட விளம்பர தொலைக்காட்சித் துண்டுகளிலும் பிறமொழி வாயசைப்பிற்கேற்ப தமிழ் ஒலிசேர்ப்பு நிகழ்வதால் இத்தகைய தமிழைக் கேட்கலாம். விளம்பரங்கள் சிறுவர்களிடம் விரைவாகச் சேர்வதினால் வருங்காலச் சிறார்களின் தமிழ், குறிப்பாக தமிழை முறையாகக் கற்காத சிறுவர்களின் தமிழ் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
 
==எடுத்துக் காட்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜுனூன்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது