ஜுனூன் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

ஜுனூன் தமிழ் என்பது தமிழ் இலக்கண விதிகளையும் மரபுகளையும் பின்பற்றாத, பேச்சுத் தமிழின் வழமைகளும் இல்லாத கொச்சையான ஒரு தமிழ் வழக்கு. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கும் போது அம்மொழிகளுக்கு உரித்தான சொற்றொடர் அமைப்பு மாறாமல், சொற்களை மட்டும் மொழிபெயர்ப்பதால் இத்தகு சிதைவு உண்டாகின்றது. “ஜுனூன் தமிழ்” என்ற பெயர் குறைபாடுள்ள தமிழ் மொழிபெயர்ப்புகளை இழிவுபடுத்தவும் கேலி செய்யவும் பயன்படுகிறது.

தோற்றம்தொகு

1990களின் நடுவில் சென்னை நகரில் மட்டும் ஒளிபரப்பான தூர்தர்ஷன் அலைவரிசையான டிடி-மெட்ரோ தொலைக்காட்சியில் "ஜுனூன்" (பிடிவாதம்/பீடிப்பு) என்ற இந்தி மொழி நெடுந்தொடர் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியானது. பல ஆண்டுகள் தொடர்ந்து வெளியான இத்தொடர் சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் வரும் தமிழ் வசன சேர்க்கை, பாத்திரங்களின் இந்தி வசன வாயசைப்புக்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. தமிழ் உரையாடல்களில் சொற்கள் வழக்கமான இடங்களில் இல்லாமல் முன்னும் பின்னும் அமைந்தன. இதனால் அதுவரை கண்டிராத புதிரான ஒரு பேச்சுத் தமிழ் வழக்கு உருவானது.

எழுவாய் மற்றும் பயனிலைகள் தமிழில் வரும் வரிசை அடியோடு மாறியிருந்த இவ்வழக்கு ஜுனூன் நிகழ்ச்சியை நோக்கமற்ற நகைச்சுவையாக (unintentional comedy) மாற்றியது. மேலும் இந்தியில் பயன்படுத்தப்படும் சுட்டுமொழிகளும் அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டன. (எ. கா) இந்தியில் ”சுனியே/சுனோ” (கேளுங்கள்/கேள்), தேக்கியே/தேக்கோ (பாருங்கள்/பார்) என்று சொற்றொடரின் ஆரம்பத்தில் பயன்படுத்துவது வழக்கம். தமிழில் இப்படி வினைச் சொற்கள் அப்படியே பயன்படுத்தபடுவதில்லை, மாறாக “இங்கே பார்/ இங்கே பாருங்க” என்ற பயன்பாடு உள்ளது. ஆனால் இந்தி வாயசைப்புக்கு ஒத்த ஜுனூன் தமிழ் மொழிமாற்றத்தில் “பாருங்க, உங்க பேச்சு சரியில்லை”, “பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க” போன்ற வசனங்கள் பரவலாகக் கையாளப்பட்டன.

இத்தகு மொழிபெயர்ப்பு தமிழைச் சிதைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நடையினைக் கேலி செய்யும் வகையில் பிற தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பாத்திரங்கள் அமைக்கப்பட்டன. ஜுனூனுக்குப் பின்னும் நுக்கத், விக்கிரமாதித்தன், ஸ்வாபிமான், கானூன், இம்திஹான், அலிஃப் லைலா, சந்திரகாந்தா போன்ற இந்தித் தொடர்கள் இதே பாணியில் தமிழில் மொழிமாற்றப்பட்டு சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாயின. காலப்போக்கில் இந்த பாணி குறைந்து விட்டாலும் இன்றளவும் வெளியாகும் மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிகளில் இந்தப் பாணியின் சாயலைக் காணலாம். இந்தி/பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட விளம்பர தொலைக்காட்சித் துண்டுகளிலும் பிறமொழி வாயசைப்புக்கு ஏற்ப தமிழ் ஒலிசேர்ப்பு நிகழ்வதால் இத்தகைய தமிழைக் கேட்கலாம்.

எடுத்துக் காட்டுகள்தொகு

பேச்சுத் தமிழ் ஜுனூன் தமிழ்
நான் நல்லா இருக்கேன் இருக்கேன் நான் நல்லா
நீங்க எப்படி இங்க வந்தீங்க நீங்க வந்தீங்க எப்படி இங்க
நான் சொல்றதக் கேளுங்க பாருங்க, நான் சொல்றதக் கேளுங்க
கல்யாணத்திற்கு பிறகு.....ன்னு அம்மா சொன்னாங்க அம்மா சொன்னாங்க... கல்யாணத்திற்கு பிறகு.....ன்னு..

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுனூன்_தமிழ்&oldid=1465178" இருந்து மீள்விக்கப்பட்டது