சென்னைத் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

சென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை (Madras Tamil, Madras Bashai) என்பது சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். சிறிது தெலுங்கு கலந்த பேசப்படும் இது மற்ற எல்லா இடங்களில் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டது. பிற மாவட்ட மக்களும், மாநில மக்களும் சென்னையில் அதிக அளவில் குடியேறியதால் வடசென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் பெரும்பாலும் வழக்கற்று போய்விட்டது. அர்பன்தமிழ் என்ற இணையத் திட்டத்தின் மூலம் சில சொற்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.[1]

தமிழ் சென்னைத் தமிழ்
அப்புறம் அப்பாலிகா, அப்பாலே[2]
அங்கே அந்தாண்ட
இங்கே இந்தாண்ட
இருக்கிறது கீது
இருக்கிறாய் கீறே
இழுத்துக்கொண்டு இஸ்துகினு
உட்காருங்கள் குந்து
எதற்கும் லாயக்கு இல்லாதவன் ஜோப்டா
நிலையான சிந்தனையின்றி மாற்றிப் பேசுபவன் டங்காமாரி
ஒழுக்கமற்றவன் பொற்டயா
சிக்கல் சிக்கோன்
கிழித்துவிடுவேன் கீசீடுவேன்
கூட்டிக்கொண்டு இட்டுகினு
கோபம் காண்டு
மோசமான அட்டு
பயம் மெர்சு
மிரட்சி மெர்சல்[3]
வேறு பகுதிக்குப் போய் வம்பு செய்வது ஸீன்[3]
மிகவும்சி றப்பானது மிட்டா[3]
நன்றாக இல்லை மொக்க, சப்பை
துர்நாற்றம் கப்பு
தடவ தபா
ஏமாற்றுகிறது டபாய்க்கிறது
கிண்டல் செய்வது கலாய்க்கிறது
அமைதி கம்மு
மகிழ்ச்சி குஜ்ஜால்லு
கால் சட்டை நிஜாரு
விரைவில் விட்டு அபீடு
கஷ்டப்பட்டேன் லோல்பட்டேன்
பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை
சென்னைத் தமிழ் அர்த்தம் மூலம்
டுபாக்கூர் ஏமாற்றுக்காரர் இந்துஸ்தானி வழி ஆங்கிலம்[4]
நைனா அப்பா தெலுங்கு[2]
பேமானி நாணயமற்றவர் இந்துஸ்தானி
விசுகோத்து ஈரட்டி ஆங்கிலம்
குச்சு, குந்து இரு தெலுங்கு
துட்டு, டப்பு பணம் தெலுங்கு[2]
கலீஜு அருவருப்பான தெலுங்கு> கன்னடச் சொல் கலேஜி
கஸ்மாலம் அழுக்கு சமஸ்கிருதம்
யெகிரி பாய் தெலுங்கு[5]
பேஜாறு பிரச்சனை இந்துஸ்தானி
பிகர் அழகான பெண் ஆங்கிலம்
கரெக்ட் பெண்ணை தன் பக்கமாக கவனிக்கச் செய்யுதல் ஆங்கிலம்
ஓ.ஸி இலவசச் செலவு ஆங்கிலம். கிழக்கிந்திய நிறுவன உத்தியோகபூர்வ தொடர்பாடல் "O. C." என ("On Company's service") என முத்திரையிடப்பட்டது. "O. C." எனும் சொல் இலவசமாகக் கொடுக்கப்படுவதற்கு பின்னர் பயன்பட்டது.[2][6]
ஜவாப்தாரி[3] பொறுப்பு[3] இந்தி
ரீஜென்ட்[3] நாகரீகமாக ஆங்கிலம்
நாஸ்தா[3] காலை உணவு உருது
ஜல்தி[3] விரைவாக இந்தி

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://urbantamil.com/. 
  2. 2.0 2.1 2.2 2.3 Pillai, M. Shanmugham. Tamil Dialectology. பக். 34–36. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 ம. சுசித்ரா (26 ஆகத்து 2016). "‘காஜி’க்கு நான் ஜவாப்தாரி இல்லப்பா!". தி இந்து. http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/article9035733.ece?ref=sliderNews. பார்த்த நாள்: 28 ஆகத்து 2016. 
  4. ராண்டார் கை (15 June 2003). "Inspiration from Madras". தி இந்து. Archived from the original on 16 நவம்பர் 2003. https://web.archive.org/web/20031116055918/http://www.hindu.com/thehindu/mag/2003/06/15/stories/2003061500340500.htm. 
  5. ராண்டார் கை (31 August 2010). "Jagathalaprathapan 1944". தி இந்து. Archived from the original on 3 ஜூலை 2014. https://web.archive.org/web/20140703023559/http://www.hindu.com/cp/2010/08/13/stories/2010081350472000.htm. 
  6. "Footprints of the Company". The Hindu. 28 August 2005. Archived from the original on 7 டிசம்பர் 2005. https://web.archive.org/web/20051207212142/http://www.hindu.com/fr/2005/08/26/stories/2005082600210300.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னைத்_தமிழ்&oldid=3577322" இருந்து மீள்விக்கப்பட்டது