செட்டிநாட்டுத் தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செட்டிநாட்டுத் தமிழ் (chettinattu Tamil) என்பது தமிழ் மொழியின், வட்டார வழக்கு மொழியாகும். இந்த மொழியை தமிழகத்தின், தென்பகுதிகளான சிவகங்கை, காரைக்குடியைச் சுற்றி 96 ஊர்களை உள்ளடக்கிய செட்டிநாட்டுப் பகுதியில் பேசப்படுகிறது. இங்கு பெரும்பாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் வசிக்கின்றனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் வழக்கு மொழியின் சிறப்பு, இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழம்பெரும் வார்த்தைகள் எனலாம். உதாரணம்: சீசா (Bottle), சவுக்காரம் (Soap) போன்றவை ஆகும்.