சிடி பூ சிட் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Bataille de Sidi Bouzid
No edit summary
வரிசை 20:
{{வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் துனிசியப் போர்த்தொடர்}}
'''சிடி பூ சிட் சண்டை''' (''Battle of Sidi Bou Zid'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை|வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில்]] நிகழ்ந்த ஒரு படை முன்னேற்றம். [[துனிசியப் போர்த்தொடர்|துனிசியப் போர்த்தொடரின்]] ஒரு பகுதியான இதில் [[நாசி ஜெர்மனி]]யின் படைகள் [[துனிசியா]]வில் நிறுத்தப்பட்டிருந்த [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகளைத் தோற்கடித்தன.
 
1942 நவம்பரில் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வில் [[டார்ச் நடவடிக்கை]]யின் மூலம் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. [[மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்|மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில்]] தோற்று [[துனிசியா]]வை நோக்கிப் பின்வாங்கிக்கொண்டிருந்த [[அச்சு நாடுகள்|அச்சுப் படைகள்]] [[தூனிஸ்]] நகரை அடைவதற்குள் அந்ந்கரைக் கைப்பற்ற முயன்றன. ஆனால் [[தூனிசை நோக்கி ஓட்டம்|அம்முயற்சி]] தோல்வியடைந்தது. அடுத்த சில மாதங்களுக்கு துனிசியப் போர்முனையில் மந்த நிலை நீடித்தது. இரு தரப்பினரும் அடுத்தகட்ட மோதலுக்கான ஆயத்தங்களைச் செய்தன. துனிசியாவின் பெரும்பகுதி அச்சுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிடி பூ சிட் நகரின் அருகேயுள்ள பகுதிகள் அமெரிக்க 2வது [[கோர் (படைப்பிரிவு)|கோர்]] மற்றும் பிரெஞ்சு 9வது கோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவற்றால் தன் படைநிலைகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஜெர்மானியத் தளபதி [[எர்வின் ரோம்மல்]] அவற்றைத் தாக்கத் திட்டமிட்டார்.
 
பெபரவரி 14, 1943 அன்று ஜெர்மானிய கவச படைப்பிரிவுகள் சிடி பூ சிட்டின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின. சிடி பூ சிட் துனிசியப் போர்முனையின் அமெரிக்கர்களின் முக்கியமான தொலைதொடர்பு மற்றும் தளவாட வழங்கல் மையங்களில் ஒன்று. நான்கு ஜெர்மானிய கவச படைப்பிரிவுகள் அதனைத் தாக்கின. இங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைப்பிரிவுகள் அனுபவமின்மையாலும் போர்த்திறனற்ற தளபதிகளைக் கொண்ட்ருந்தமையாலும் எளிதில் தோற்கடிக்கப்பட்டன. மூன்று நாட்கள் சண்டைக்குப் பின் சிடி பூ சிட்டிலிருந்து பின் வாங்கின. இச்சண்டையிலும் அடுத்து நிகழ்ந்த [[கேசரைன் கணவாய் சண்டை]]யிலும் கிடைத்த எளிதான வெற்றிகளால் ஜெர்மானியர்கள் அமெரிக்கப் படைகளின் போர்த்திறனைக் குறைத்து மதிப்பிட்டனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் எளிதில் அமெரிக்கர்களை வென்று விடலாம் என்று கணக்கிட்டனர். ஆனால் துனிசியப் போர்த்தொடர் நீடிக்க நீடிக்க அமெரிக்கப் படைகளும் தளபதிகளும் அனுபவம் பெற்று விரைவில் தங்கள் திறனை அதிகரித்துக் கொண்டனர்.
 
[[பகுப்பு:1943 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிடி_பூ_சிட்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது