வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== வரலாறு ==
[[File:Wakamiya.jpg|right|thumb|225px|சப்பானிய கடல்வானூர்தி தாங்கி ''வாகாமியா'']]
[[பலூன்]] தாங்கிகளே ஆளேற்றிய வான் கலங்களை ஏவுவதற்காக அமைக்கப்பட்ட முதல் கப்பல்களாகும். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், இவ்வாறான கப்பல்களில் இருந்து போர்க்களங்களை நோட்டமிட பலூன்கள் ஏவப்பட்டன. 1903 ஆம் ஆண்டில் [[நிலைத்த இறக்கை வானூர்தி]]கள் அறிமுகமான பின்னர், 1910ல் யூ. எசு. எசு. ''பிர்மிங்காம்'' என்ற [[அமெரிக்கக் கடற்படை]]க் கப்பலிலிரு சோதனை முறையில் முதல் வானூர்தி பறந்து சென்றது. அதன் பின்னர் [[கடல் வானூர்தி]] பராமரிப்புக் கப்பல்கள் உருவாக்கப்பட்டன. 1911ல் [[வேந்திய சப்பானியக் கடற்படை]]யின் ''வாகாமியா'' என்ற பராமரிப்பு கப்பல் நான்கு மாரீசு பார்மன் ரக கடல் வானூர்திகளை தனது மேற்பரப்பிலிருந்து [[பாரந்தூக்கி]] மூலம் கடலில் இறக்கியது. அவை பின் கடல் வழியாக மேலெழும்பி தங்கள் இலக்குகளைத் தாக்கின. இந்த நிகழ்வே கடல் தாக்குதலில் ஒரு கப்பல் வானூர்தி தாங்கியாக செயல்பட்ட முதல் நிகழ்வாகும்.
 
தட்டையான மேல் தளத்தைக் கொண்ட கப்பல்களின் வளர்ச்சி பல வானூர்திகளை ஏற்றிச் செல்லவல்ல கப்பல்களை உருவாக்க உதவியது. 1918ல் [[எச். எம். எசு]] ஆர்கசு, மேல் தளத்திலிருந்து வானூர்திகள் மேலெழும்பவும் தரையிறங்கவும் வசதி கொண்ட முதல் வானூர்தி கப்பலானது. 1920களில் தொடர்ந்த வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சி, [[எச். எம். எசு]] ஏர்மசு, ஓசோ, [[லெக்சிங்டன் வகை வானூர்தி தாங்கிக் கப்பல்]]கள் என்பவற்றின் உருவாக்கத்துக்கு வழி கோலியது. ஆரம்பகால வானூர்தி தாங்கிகள் பிற கப்பல் வகைகளில் இருந்து உருமாற்றம் பெற்றவையாகவே இருந்தன. சரக்கு கப்பல்கள், குரூசர்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றின் மேல்தளமும், வடிவமைப்பும் மாற்றப்பட்டு வானூர்தி தாங்கிகள் உருவாக்கபப்ட்டன. 1922ல் கையெழுத்தாகிய [[வாஷிங்க்டன் கடல் உடன்பாடு]] வானூர்தி தாங்கிகளின் வளர்ச்சியை பாதித்தது. இவ்வுடன்பாடு ஒவ்வொரு நாட்டின் கடற்படையும் எவ்வளவு கப்பல்களைக் கொண்டிருக்கலாம், அவற்றின் எடையின் உச்ச வரம்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியது. இதன் [[அமெரிக்கா]] மற்றும் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற ஒரு சில நாடுகளே பெரும் போர்க்கப்பல்களை உருவாக்கும் உரிமை பெற்றிருந்தன. இதனால் இக்காலகட்டத்தில் கடற்படைகள் போர்க்கப்பல்களை கட்டும் போது, பின்னாளில் வானூர்தி தாங்கிகளாக மாற்றத்தக்க வடிவமைப்புகளையே விரும்பித் தேர்ந்தெடுத்தன.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது வானூர்தி தாங்கிக் கப்பல்கள் பெருமளவில் பயன்பட்டதுடன் மேலும் செம்மையுற்றன. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சப்பான் போன்ற நாட்டுக் கடற்படைகளின் முதுகெலும்பாக வானூர்தி தாங்கிகள் செயல்பட்டன. போர்க்கப்பல் வெளிஓடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட வானூர்தி தாங்கிகளைத் தவிர, பல புதிய ரக வடிவமைப்புகளும் உருவாக்கப்பட்டன. காவல் வானூர்தி தாங்கிகள் (''escort carriers''), இலகு ரக வானூர்தி தாங்கிகள் (''light carriers'') போன்ற ரகங்கள் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவற்றுள் ஒரு சில. போர்க்காலத்தில் அவசர பயன்பாட்டுக்காக வர்த்தக சரக்குக் கப்பல்களின் மேல் தளத்தில், ஓடு தளங்கள் பொருத்தப்பட்ட வர்த்தக வானுர்தி தாங்கிகள் (''Merchant carriers'') என்றொரு ரகமும் உருவானது. போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி (''Battle carrier'') என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து). இவை தவிர, வானூர்திகளைத் தாங்கிச் செல்ல வல்ல [[நீர்மூழ்கிக் கப்பல்]]களும் உருவாக்கப்பட்டன.
 
இரண்டாம் உலகப் போருக்குப்பின், அதுவரை கடற்படைகளின் முதன்மைக் கப்பல்களாக இருந்து வந்த போர்க்கப்பல்களுக்கு பதில் வானூர்தி தாங்கிகள் முதன்மைக் கப்பல்களாகின. போர்க்களங்களில் வான்படைகளின் முக்கியத்துவம் அதிகமானதால் கடற்பகுதிகளில் [[வான் ஆளுமை]] பெற வானூர்தி தாங்கிகள் இன்றியமையாதவை ஆகி விட்டன. வானூர்திகளின் ரகங்களும், வலிமையும் கூடக் கூட அவற்றைத் தாங்கிச் செல்லும் தாங்கிகளின் எடையும் அளவும் அதிகரித்தன. தற்கால கடற்படைகளில் 75,000 டன்களுக்கு மேல் எடையுள்ள மீவானூர்தி தாங்கிகள் (''Supercarriers'') இடம் பெற்றுள்ளன. டீசல் அல்லது அணுஉலைப் பொறிகளால் உந்தப்படும் இவை ஒரு கடற்படை தன் நாட்டிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளிலும் செயல்பட உறுதுணையாக உள்ளன. வானூர்தி தாங்கிகளைத் தவிர, உலங்கு வானூர்தி தாங்கிகள் (''Helicopter carriers''), நீர்நில தாக்கு கப்பல்கள் (''amphibious assault ships'') போன்ற புதிய ரகங்களும் உருவாகியுள்ளன.
[[File:USS John C. Stennis (CVN-74) & HMS Illustrious (R 06).jpg|right|thumb|250px|யூ.எசு.எசு. ''சான். சி. இசுட்டெனிசு'' மற்றும் எச்.எம்.எசு ''இல்லுசுடிரியசு'']]
 
போர்க்கப்பல்களைப் போன்று வானூர்தி தாங்கிகளிடம் சுடுதிறன் இருப்பதில்லை. அவற்றில் மிகக் குறைவான அளவிலெயே பீரங்கி குழுமங்கள் பொருத்தப்படுகின்றன. ஒரு வானூர்தி தாங்கியால் தனியே எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் தாக்குதலை சமாளிக்க இயலாது. இதனால் வானூர்தி தாங்கிகள் எப்போதும் தனியே செயல்படுவதில்லை; பிற போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் சூழ ஒரு வானூர்தி தாங்கி குழுமமாகவே (''Carrier group'') செய்லபடுகின்றன. கடல் ஒப்பந்தகளால் வானூர்தி கப்பல்களின் எடையின் உச்சவரம்பு கட்டுப்பாடு இரண்டாம் உலகப் போருக்குப்பின் தளர்ந்ததால், புதிய வானூர்தி தாங்கி ரகங்களின் எடை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமெரிக்கக் கடற்படையின் நிமிட்சு ரகம், ஃபோர்ட் ரகம் போன்றவை ஒரு லட்சம் டன்களுக்கு மேல் எடை கொண்டவையாக உள்ளன.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது