வானூர்தி தாங்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
 
===புறப்பாடு===
[[File:FRS.1 ski-jump take-off HMS Invincible.JPEG|thumb|left|எச்.எம்.எடு.எசு ''இன்வின்சிபிளின்'' சறுக்குமேடை]]
வானூர்தி தாங்கிகளின் மேற்தளத்திலிருந்து வானூர்திகள் புறப்பட பல வழிகள் பயன்படுகின்றன. சில வானூர்தி தாங்கிகளில் [[நீராவி]] ஆற்றலை பயன்படுத்து கவண் எறி ஒன்று வானூர்திகளை உந்தித் தள்ளுகிறது. இதன் மூலம் மேலெழும்பத் தேவையான குறைந்தபட்ச வேகம் வானூர்திக்கு கிட்டுகிறது. கவண் எறியின் உந்துதலுடன், வானூர்தியின் பொறிவிசையும் சேரும் போது வானூர்தி எளிதாக தளத்திலிருந்து மேலெழும்பி விடுகிறது. வேறு சில வானூர்தி தாங்கிகளில் கவண் எறி நுட்பத்துக்கு பதில் சறுக்குமேடை (''ski-jump ramp'') நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இத்தகு தாங்கிகளில் ஓடுதளத்தில் ஒரு முனை சற்று மேல் நோக்கி எழும்பியிருக்கும். ஓடுதளத்தில் ஓடி சறுக்கு மேடையில் ஏறும் வானூர்திகள் இதனால் மேல் நோக்கியும், முன்னோக்கியும் ஒரே நேரத்தில் உந்தித் தள்ளப்படுகின்றன. செங்குத்தாக புறப்பாடு/தரையிறக்கம் செய்யககூடிய வானூர்திகளுக்கு இது போன்ற நுட்பங்கள் தேவையில்லை
 
[[File:FA-18 Trap.jpg|right|thumb|200px|வால்கொக்கி கம்பியில் சிக்கி வேகம் குறைகிறது]]
 
===தரையிறக்கம்===
வானூர்திகள் தளத்தில் தரையிறங்கும் போது அவற்றின் வேகத்தை மிகக் குறுகிய காலத்தில் குறைக்க ஓடு தளத்தின் குறுக்கே கம்பிகள் விரிக்கப்பட்டிருக்கும். வானூர்தி தரையிறங்கும் போது அதன் வால் பகுதியிலுள்ள கொக்கி அக்கம்பிகளைக் கவ்வும்படி ஓட்டுனர் அதனைக் கையாளுவார். பலமான இக்கம்பிகளால் பிடித்திழுக்கப்படும் வானூர்தியின் வேகம் விரைவாகக் குறைந்து அதன் ஓட்டம் நிற்கும். செங்குத்து புறப்பாடு/தரையிறங்கு திறனுள்ள ஊர்திகளுக்கு இந்த கம்பி நுட்பம் தேவையில்லை.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_தாங்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது