"நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,424 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (r2.5.1) (தானியங்கிமாற்றல்: sv:Allierades invasion av Sicilien)
 
==சண்டையின் போக்கு==
வடக்கு ஆப்பிரிக்காவில் [[துனிசியப் போர்த்தொடர்]] மே 1943ல் முற்றுப் பெற்றவுடன் நேச நாட்டு மேல்நிலை உத்தி குண்டுவீசி வானூர்திப் படைப்பிரிவுகள் இத்தாலிய இலக்குகள் மீது குண்டு வீசத் தொடங்கின. [[சார்தீனியா]], சிசிலி, தெற்கு இத்தாலியின் வான்படைத் தளங்கள், நகரங்கள், தொழில் மையங்கள், நேப்பொல், மெஸ்சினா, பாலெர்மோ, கால்கியாரி போன்ற துறைமுகங்கள் இடைவிடாது தாக்கப்பட்டன. ஜூலை முதல் வாரத்துக்குள், சிசிலியிலிருந்த வானூர்தி ஓடுதளங்களில் பெரும்பாலானவை செயலிழந்தன. பின்னர் இத்தாலியின் போக்குவரத்து, தொலைதொடர்பு கட்டமைப்புகள் நேச நாட்டு குண்டுவீசிகளுக்கு இலக்காகின. மேலும் பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிசிலி அருகேயுள்ள சில சிறு தீவுகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தி அவை அச்சு வான்படைகளுக்கு பயன்படாதவாறு செய்தன.
 
நேச நாட்டுப் படையெடுப்பு எங்கு நிகழப்போகிறது என்பதை அச்சு தளபதிகள் கணிக்காதவாறு செய்ய, நேச நாட்டு உத்தியாளர்கள் சில திசைதிருப்பு வேலைகளில் ஈடுபட்டனர். குண்டுவீசி வானுர்தித் தாக்குதல்கள், படை தரையிறக்கம் நிகழப்போகும் இடங்களில் மட்டுமல்லாமல் பரவலாக பலவேறு இடங்களில் நிகழுமாறு பார்த்துக் கொண்டனர். மேலும் படையெடுப்பு சிசிலிக்கு பதில் [[கிரீசு]] மற்றும் சார்தீனியாவில் நிகழப்போகிறதென அச்சு தலைவர்களை நம்பவைக்க [[மின்சுமீட் நடவடிக்கை]]யை மேற்கொண்டனர். இதனை உண்மையென நம்பிய ஜெர்மானியத் தளபதிகள், பல படைப்பிரிவுகளை சிசிலியிலுருந்து கிரீசுக்கு நகர்த்தினர்.
 
===தரையிறக்கம்===
===கடற்கரை முகப்புகளிலிருந்து முன்னேற்றம்===
===எட்னா மோதல்கள்===
===அச்சு பின்வாங்கல்===
 
==தாக்கம்==
==குறிப்புகள்==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/751194" இருந்து மீள்விக்கப்பட்டது