மிதவெப்ப ஊசியிலைக் காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[File:Petroglyphs Forest.JPG|thumb|right|upright|ஒன்டார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Petroglyphs Forest.JPG|thumb|right|upright|250px|ஒன்டாரியோவின் [[பெட்ரோகிளிஃப் மாகாண வனம்|பெட்ரோகிளிஃப் மாகாண வனத்தில்]] உள்ள ஒரு மிதவெப்ப ஊசியிலைக் காட்டுச் சூழல்மண்டலம்]]
'''மிதவெப்ப ஊசியிலைக் காடு''' என்பது, மிதமான வெப்பம் கொண்ட [[கோடை]]யையும், குளிரான [[மாரி]]யையும், காடுகள் வளர்வதற்கு உகந்த போதிய அளவு [[மழைவீழ்ச்சி]]யையும் கொண்ட உலகின் மிதவெப்பவலயப் பகுதிகளில் காணப்படும் நிலம் சார்ந்த [[உயிர்ச்சூழல்]] ஆகும். பெரும்பாலான மிதவெப்ப ஊசியிலைக் காடுகளில் பசுமைமாறா ஊசியிலைத் தாவரங்களே முதன்மையாகக் காணப்படுகின்றன. எனினும் இத்தகைய காடுகள் சிலவற்றில், கலப்பு ஊசியிலைத் தாவரங்கள், பசுமைமாறா அகன்ற இலைத் தாவரங்கள் என்பவற்றுடன், இலையுதிர்க்கும் அகன்ற இலைத் தாவரங்களும் காணப்படுகின்றன. மிதமான குளிர் காலத்தையும், பெருமளவு மழைவீழ்ச்சியையும் கொண்ட கடற்கரைப் பகுதிகளிலும்; வரண்ட காலநிலை கொண்ட அல்லது மலைப் பாங்கான உட்புறப் பகுதிகளிலும்; மிதவெப்ப பசுமைமாறாக் காடுகள் பொதுவாகக் காணப்படுகின்றன. ''செடார்'', ''சைப்பிரசு'', ''டக்ளசு ஃபர்'', ''ஃபர்'', ''சுனிப்பர்'', ''பைன்'', ''செம்மரம்'' போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு இன மரங்கள் மிதவெப்ப ஊசியிலைக் காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கீழ்த்தளங்களில் பல வகையான செடிகளும், புல், பூண்டு வகைகளும் இருக்கும்.
|