பூண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
பூண்டுகளில் [[ஓராண்டுத் தாவரம்|ஓராண்டுத் தாவரங்கள்]], [[ஈராண்டுத் தாவரம்|ஈராண்டுத் தாவரங்கள்]], [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுத் தாவரங்கள்]] என்னும் வகைகள் இருக்கின்றன. ஓராண்டுத் தாவர வகையைச் சேர்ந்த பூண்டுகள், ஓராண்டுக்குள் அவற்றின் வளரும் காலம் முடிவடைந்ததும் முற்றாகவே அழிந்து விடுகின்றன. ஈராண்டுத் தாவர வகைப் பூண்டுகளில், முதல் ஆண்டுப் பருவகால முடிவில் இலைகளும், தண்டுகளும் அழிந்தாலும், நிலத்துக்குக் கீழ் [[வேர்]]கள், [[கிழங்கு]]கள் போன்ற பகுதிகள் உயிருடன் இருக்கின்றன. அடுத்த பருவகாலத்தில் அவற்றில் இருந்து தண்டுகளும் இலைகளும் வளர்ந்து பூத்து, [[வித்து]]க்களை உருவாக்கியபின் இறந்துவிடுகின்றன. பல்லாண்டுப் பூண்டுகளில், நிலத்தின் கீழுள்ள சில பகுதிகள் பல ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை. ஒவ்வொரு பருவகாலத்திலும் புதிதாகத் தண்டுகளும், இலைகளும் உருவாகின்றன.
 
==பயன்கள்==
பூண்டுத் தாவரங்கள் பல மிகப் பழைய காலத்திலிருந்தே சமையலில் பயன்பட்டு வருகின்றன. பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் [[ஊட்டச்சத்து]]கள் கொண்ட உணவாக அமையும் அதே வேளை, வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் [[வாசனைப் பொருள்|வாசனைப் பொருட்களாகப்]] பயன்படுகின்றன. பல பூண்டுகளின் பகுதிகள் மருத்துவக் குணம் கொண்டவை. இதனால் பல மருத்துவ முறைகளில் இப்பூண்டுகள் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. பூண்டுத் தாவரங்களிற் பல அழகிய பூக்களையோ, இலைகளையோ அல்லது தோற்றத்தையோ கொண்டிருப்பதனால், அவை [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரங்களாகவும்]] பயன்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பூண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது