வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Reagan and Gorbachev hold discussions.jpg|250px|thumb|பனிப்போர்க் காலத்தில் உலகின் இரண்டு வல்லரசுகளாகத் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரசியா ஆகிய நாடுகளின் தலைவர்களான [[ரொனால்ட் ரீகன்|ரொனால்ட் ரீகனும்]], [[மிகைல் கொர்பச்சேவ்|மிகைல் கொர்பச்சேவும்]]]]
'''வல்லரசு''' என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைக் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு [[நாடு]] ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான [[அலிசு லைமன் மில்லர்]] என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப் பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்.
 
 
1944 ஆன் ஆண்டளவில், [[பிரித்தானியப் பேரரசு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகியதுடன் அவை எல்லாம் இணைந்து [[பிரித்தானியப் பொதுநலவாயம்]] என்னும் அமைப்பை ஏற்படுத்தின. இதன் பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது [[பனிப்போர்]] எனப்பட்டது.
 
[[பகுப்பு:வல்லரசுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது