வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Reagan and Gorbachev hold discussions.jpg|250px|thumb|பனிப்போர்க் காலத்தில் உலகின் இரண்டு வல்லரசுகளாகத் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரசியாஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்களான [[ரொனால்ட் ரீகன்|ரொனால்ட் ரீகனும்]], [[மிகைல் கொர்பச்சேவ்|மிகைல் கொர்பச்சேவும்]]]]
'''வல்லரசு''' என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைக் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு [[நாடு]] ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான [[அலிசு லைமன் மில்லர்]] என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப் பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்.
 
 
1944 ஆன் ஆண்டளவில், [[பிரித்தானியப் பேரரசு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகியதுடன் அவை எல்லாம் இணைந்து [[பிரித்தானியப் பொதுநலவாயம்]] என்னும் அமைப்பை ஏற்படுத்தின. இதன் பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது [[பனிப்போர்]] எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது. எனினும், [[பிரேசில்]], [[சீனா]], [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[இந்தியா]], உருசியா ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.
 
 
பனிப்போருக்குப் பின்னர் வல்லரசு என்று ஒன்று இருப்பதையே பலர் ஐயுறுகின்றனர். இன்றைய சிக்கலான உலகச் சந்தையமைப்பில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளதால் வல்லரசு என்னும் கருத்துரு காலம் கடந்தது என்றும் தற்போதைய உலகம் [[பன்னாட்டு விவகாரங்களில் பல்முனைப்பண்பு|பல்முனைப்பண்பு]] கொண்டது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
 
[[பகுப்பு:வல்லரசுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது