வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
 
1944 ஆம் ஆண்டளவில், [[பிரித்தானியப் பேரரசு]], [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பன வல்லரசுகளாகக் கருதப்பட்டு வந்தன. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரைத்]] தொடர்ந்து பிரித்தானியப் பேரரசின் ஆட்சிப் பகுதிகள் பல விடுதலை பெற்றுத் தனி நாடுகள் ஆகியதுடன் அவை எல்லாம் இணைந்து [[பிரித்தானியப் பொதுநலவாயம்]] என்னும் அமைப்பை ஏற்படுத்தின. இதன்ஆகிய பின்னர் சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் மட்டுமே வல்லரசுகள் என அழைக்கப்பட்டதுடன், தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. இது [[பனிப்போர்]] எனப்பட்டது. பனிப்போருக்குப் பிந்திய காலத்தில் சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிந்து விட்டபடியால், ஐக்கிய அமெரிக்கா மட்டுமே இப்போது வல்லரசு என்னும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்தும் ஒரே நாடாக உள்ளது. எனினும், [[பிரேசில்]], [[சீனா]], [[ஐரோப்பிய ஒன்றியம்]], [[இந்தியா]], உருசியா ஆகிய நாடுகளும் 21 ஆம் நூற்றாண்டில் வல்லரசுகள் ஆவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன எனக் கருதப்படுகிறது.
 
 
பனிப்போருக்குப் பின்னர் வல்லரசு என்று ஒன்று இருப்பதையே பலர்சிலர் ஐயுறுகின்றனர். இன்றைய சிக்கலான உலகச் சந்தையமைப்பில், நாடுகள் ஒன்றின் மீது ஒன்று தங்கி இருக்கவேண்டிய நிலை உள்ளதால் வல்லரசு என்னும் கருத்துரு காலம் கடந்தது என்றும் தற்போதைய உலகம் [[பன்னாட்டு விவகாரங்களில் பல்முனைப்பண்பு|பல்முனைப்பண்பு]] கொண்டது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
 
==சொல்லும் பொருளும்==
வரிசை 14:
 
1944 ஆம் ஆண்டிலேயே ஆற்றல் வாய்ந்த நாடுகளிலும் கூடிய ஆற்றல் வாய்ந்த நாடுகளைக் குறிக்கும் ஒரு சொல்லாக "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் ஆங்கிலச்சொல் பயன்பட்டது. எனினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே பிரித்தானியப் பேரரசு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றைக் குறிப்பாக விளக்கும் ஒரு சொல்லாக வழங்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலக அரசியலில் செல்வக்குச் செலுத்தவல்ல நிலையில் இருந்ததனாலேயே இந்நாடுகளும் வல்லரசு என்னும் வரையறைக்குள் வந்தன. அக் காலத்துக்கு முந்திய பேரரசுகளையும் உள்ளடக்கும் வகையில் [[பண்டைய எகிப்து]], [[பண்டைய கிரீசு]], [[பண்டைய சீனா]], [[பண்டைய இந்தியா]], [[பாரசீகப் பேரரசு]], [[ஓட்டோமான் பேரரசு]], [[மங்கோலியப் பேரரசு]], [[போத்துக்கீசப் பேரரசு]], [[எசுப்பானியப் பேரரசு]], [[பிரான்சு]], [[ஒல்லாந்துக் குடியரசு]] என்பவற்றையும் வல்லரசு என்னும் சொல்லால் குறிக்கச் சிலர் முற்பட்டனர். வரலாற்றில் இவையும் சில தனித்துவமான பெருமைகளைக் கொண்டிருந்ததே வரலாற்றாளர்கள் இவற்றுக்கும் வல்லரசு நிலை கொடுக்க முற்பட்டதற்கான காரணங்கள் எனலாம்.
 
===தோற்றம்===
இன்றைய பொருளில் இச் சொல்லை (ஆங்கிலம்) முதலில் பயன்படுத்தியவர் ஒல்லாந்த-அமெரிக்க புவிசார் அரசியல் தந்திரியான நிக்கோலாசு இசுப்பைக்மான் (Nicholas Spykman) என்பவர் ஆவார். போருக்குப் பிந்திய புதிய உலக ஒழுங்கு எவ்வாறு அமையக் கூடும் என்பது குறித்து 1943 ஆம் ஆண்டில் அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலேயே இச் சொல்லை அவர் பயன்படுத்தினார். இவ்விரிவுரைகள் பின்னர் அவர் எழுதிய ''அமைதியின் புவியியல்'' ''(The Geography of the Peace)'' என்னும் நூலுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக அமைதிக்கும், செழிப்புக்கும் அவசியம் என அவர் கருதிய ஐக்கிய அமெரிக்காவினதும், ஐக்கிய இராச்சியத்தினதும் ஒப்பார் இல்லாத உலகளாவிய கடல்சார் வல்லாண்மை பற்றியே இந்நூல் முதன்மையாகக் குறிப்பிடுகிறது.
 
 
ஓராண்டுக்குப் பின்னர், [[வில்லியம் தோர்ன்டன் ரிக்கெட் ஃபாக்சு|வில்லியம் டி. ஆர். ஃபாக்சு]] என்னும் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைப் பேராசிரியர், தான் எழுதிய ''வல்லரசுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் என்பனவும் அமைதிக்கான அவற்றின் பொறுப்பும்'' ''(The Superpowers: The United States, Britain and the Soviet Union and Their Responsibility for Peace)'' (1944) என்னும் நூலில் நிக்கோலாசு இசுப்பைக்மானின் கருத்துருவை மேலும் விரிவாக்கினார். இந்நூலில், அவர் மிகப்பெரிய அதிகாரம் பெற்ற நாடுகளின் உலகளாவிய அதிகார வீச்சுப் பற்றிப் பேசுகிறார். நிகழ்ந்த போர் எடுத்துக் காட்டியபடி, உலக அளவில் ஒன்றுடன் ஒன்று போரிடக்கூடிய புதிய வகையைச் சேர்ந்த நாடுகளைக் குறிக்கவே "வல்லரசு" என்பதற்கு இணையான "சூப்பர் பவர்" என்னும் சொல்லை ஃபாக்சு பயன்படுத்தினார்.
 
 
ஃபாக்சைப் பொறுத்தவரை, அக்காலத்தில், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய மூன்று வல்லரசுகள் இருந்தன. பிரித்தானொயப் பேரரசே உலக வரலாற்றில் மிகவும் விரிந்த பேரரசு. 1921 ஆம் ஆண்டளவில் இதுவே முன்னணியில் இருந்த பெரும் ஆற்றல் வாய்ந்த நாடாக இருந்தது. இது உலகின் மக்கள்தொகையின் 25% ஐத் தன்னுள் அடக்கியிருந்தது. அத்துடன் புவி நிலப்பரப்பின் 25% ஐயும் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் வலிமை பெற்ற நாடுகள்.
 
[[பகுப்பு:வல்லரசுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது