ஹிப்போவின் அகஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
== அகுஸ்தீனின் இளமைப் பருவம் ==
[[படிமம்:Sainte Monique.jpg|thumb|right|தம் அன்னை [[ஹிப்போவின் மோனிக்கா|மோனிக்காவோடு]] அகுஸ்தீன். ஓவியர்: ஏரி ஷெஃப்ஃபர். ஆண்டு: 1858]]
கி.பி. 354இல் பிறந்த அகுஸ்தீன் அல்ஜீரியாவில் உள்ளதும், தற்காலத்தில் [[சூக் அஹ்ராஸ்]] என வழங்கப்படுவதுமான அக்காலத்து ''தகாஸ்தே'' என்னும் நகராட்சியில் உரோமை சமயத்தைச் சார்ந்த பத்ரீசியுஸ் என்பவருக்கும் [[ஹிப்போவின் மோனிக்கா|மோனிக்கா]] என்னும் கிறித்தவத் தாயாருக்கும் மகவாகத் தோன்றினார். அகுஸ்தீன் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாசிரியரிடையே ஒத்த கருத்து உள்ளது. அதாவது, வட ஆப்பிரிக்காவின் முக்கிய பிரிவினராகிய பெர்பர் (Berbers) என்னும் இனமும், இலத்தீன் இனமும், பெனீசிய இனமும் கலந்த கலப்பு இனத்தவர் அகுஸ்தீன் என்று தெரிகிறது.
 
அகுஸ்தீனுக்குப் பதினொரு வயதானபோது அவருடைய பெற்றோர் அவரை தகாஸ்தே நகருக்குத் தெற்கே 19 மைல் தொலையில் அமைந்த மதாவ்ருஸ் (இன்றைய "ம்தாவ்ரூக்") என்னுமிடத்தில் கல்விகற்க அனுப்பினார்கள். அங்கு அவர் இலத்தீன் இலக்கியம் கற்றார்; உரோமை சமயத்தின் கொள்கைகள் மற்றும் பழக்கங்களை அறிந்தார். 359-360 ஆண்டுகளில் தம் வீட்டில் அவர் தொடர்ந்து கல்விபயின்றார். அப்போது சிசரோ எழுதிய (தற்போது தொலைந்துபோன) "ஹோர்த்தேன்சியுஸ்" (Hortensius) என்னும் நூலைத் தாம் விரும்பிக் கற்றதாகவும், அது அவருடைய உள்ளத்தில் மெய்யியல் துறை ஆர்வத்தைத் தூண்டி எழுப்பியதாகவும் அகுஸ்தீன் கூறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹிப்போவின்_அகஸ்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது