வானியற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "வானியற்பியல்" (using HotCat)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்: NGC_4414_(NASA-med).jpg|right|thumb|280px|'''[[NGC 4414]]''', a typical [[spiralசுருள் அண்டம்|சுருள் galaxyஅண்ட]] inவகையைச் சேர்ந்த the [[constellationகோமா பெரனைசெசு]] [[Coma Berenicesஉடுத்தொகுதி]]யிலுள்ள ஒரு அண்டம், isஇதன் aboutவிட்டம் 56,000 [[light-yearஒளியாண்டு]]s in diameter andகளாகும். approximatelyஇது 60 millionமில்லியன் light-yearsஒளியாண்டு distantதூரத்திலுள்ளது.]]
'''வானியற்பியல்''' (''Astrophysics''), [[வானியல்]] துறையின் ஒரு பிரிவாகும். இது, [[விண்மீன்]]கள், [[நாள்மீன்பேரடை]]கள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான [[ஒளிர்வு]], [[அடர்த்தி]], [[வெப்பநிலை]], [[வேதியியற் சேர்க்கை]] போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் [[இயற்பியல்]] பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், [[விண்மீன்களிடை ஊடகம்]], வான் பொருட்களிடையேயான ஊடுதொடர்புகள்இடைத்தொடர்புகள் என்பவை பற்றி ஆராய்வதும் இத் துறையின் எல்லையுள் அடங்குகிறது. பாரிய அளவுகள் சார்ந்த [[கோட்பாட்டு வானியற்பியல்]] ஆய்வு அண்டவியல் எனப்படுகின்றது.
 
வானியற்பியல் பரந்த ஒரு துறையாக இருப்பதால், வானியற்பியலாளர்கள், [[பொறிமுறை]] (mechanics), [[மின்காந்தவியல்]], [[வெப்ப இயக்கவியல்]], [[புள்ளியியற் பொறிமுறை]], [[ஆற்றற்சொட்டுப் பொறிமுறை]] (quantum mechanics), [[சார்புக் கோட்பாடு]], [[அணுக்கரு இயற்பியல்]], [[துணிக்கை இயற்பியல்]], [[அணு இயற்பியல்]], [[மூலக்கூற்று இயற்பியல்]] போன்ற இயற்பியலின் பல துறைகளையும் வானியற்பியல் ஆய்வுகளில் பயன்படுத்துகிறார்கள். நடைமுறையில், தற்கால வானியல் ஆய்வுகளுடன் பெருமளவு இயற்பியல் தொடர்புபட்டுள்ளது.
 
==வரலாறு==
வானியல் தனக்கென ஒரு பழைமையான வரலாற்றைக் கொண்டிருப்பினும், பெளதிகவியற் கற்கைகளிலிருந்து நீண்டகாலமாக பிரிந்திருந்துள்ளது. அரிஸ்டோட்டலின் கருத்தின்படி விண்பொருட்கள் சீரான கோளவடிவத்தையுடையனவும், வட்ட ஒழுக்குகளைக் கொண்டுள்ளனவுமாகக் கருதப்பட்டன. எனினும் புவிமையக் கோட்பாடு அக்கருத்திலிருந்து விலகியது. இதனால் இவ்விரு கருத்துக்களும் தொடர்பற்றனவாகக் காணப்பட்டன.
 
சமோசின் அரிஸ்டாகஸ் என்பவர், பூமியும் ஏனைய கிரகங்களும் சூரியனைச் சுற்றுகின்றன எனக் கருதுவதன் மூலம் வான் பொருட்களின் இயக்கத்தை விபரிக்க முடியுமெனக் குறிப்பிட்டார். துரதிஷ்டவசமாக, புவிமையக் கோட்பாடு வேருன்றியிருந்த அக்காலகட்டத்தில் சூரியமையக் கோட்பாடு முரண்பட்டதும், கேலிக்குரியதுமாக இருந்தது. கி.பி. 16ம் நூற்றாண்டில் கொப்பர்நிகசின் சூரியமையக் கோட்பாடு உருவாகும் வரை பல நூற்றாண்டு காலத்துக்கு புவிமையக் கோட்பாடு சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரேக்க, ரோம வானியலாளரான தொலமியினது அல்மகெஸ்ட் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட புவிமையக் கோட்பாட்டின் ஆதிக்கமே இதற்குக் காரணமாயமைந்தது.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வானியற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது