சொறி மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 10:
'''சொறிமுட்டை''' (''Jellyfish''; [[மலையாளம்]]: കടൽച്ചൊറി, கடல்சொறி) என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன.
 
சொறிமுட்டை நிடேரிய (Cnidaria) உயிரினத்தொகுதியில் உறுப்பினராகவும், இத்தொகுதியிலேயே கடற்பவளங்களும் ([[பவளப் பாறைகள்|பவழப்பாறைகள்]]), கடற்சாட்டைகளும் (Sea whip) மற்றும் [[கடற் சாமந்தி|கடற்சாமந்திகளும்]] வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வுயிர்கள் நிடேரியத் தொகுதியில் காணப்படும் எளிமையான் முதுகெலும்பில்லாதவையும் அதே நேரத்தில் அதன் நகருந் தன்மை பிற உருப்பினர்களில் இருந்து மாறுபட்டும் இருக்கிறது.
 
இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையானத் தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டம் இருக்கின்றன. அவை ஒளி, மணம், அழுத்தம் மற்றும் புறத்தூண்டல்களை உணரும் நரம்பேற்பிகளை/உணர்வேற்பிகளை (nerve receptors) இருந்துவருகிறது. அதற்கு மூளைப் போன்று தனியமைப்புக் காணப்படுவதில்லை. இதன் உடலின் வெளிப்பகுதியாக புறத்தோல் (epidermis), உட்பகுதியாக குடற்தோல் (gastrodermis) என்னும் பகுதி குடற்பகுதிகளை போர்த்தியதுப் போலவும் காணப்படுகின்றன. புறத்தோலுக்கும் குடற்தோலுக்கும் இடைப்பட்டப் பகுதியாக அடர்ந்த, இழுவை வழவழப்புத்தன்மையுள்ள இடைப்பசை (mesoglea) பகுதிக் காணப்படுகிறது. இதன் உணவுமண்டலம் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டதுப்போல் தொண்டைப்பகுதி, இரைப்பை மற்றும் குடற்பகுதிகள் கொண்டதாக உள்ளது. ஒரு துவாரத்தின் முனையில் வாயும், பின்முனையில் குதமும் (anus) இடம் பெற்றுள்ளன. இவற்றுள் வாய்ப்பகுதியில் 4 - 8 வாய்க்கரங்கள்/வாய்நீட்சிகள் (oral arm) உணவை வாயினருகில் கொண்டுவருவதற்கு உணர்கொம்புகளுடன் (Tentacles) இணைந்து உதவுகிறது. இவ்வளவுப் பெற்றிருந்தும் இதன் மொத்த உடற்பகுதியில் 5% மே திடப்பொருளாகும் மீதியணைத்தும் திரவப்பொருளான நீரால் உருவாக்கப்பட்டவையாகும்.
வரிசை 30:
[[படிமம்:Chrysaora quinquecirrha.JPG|thumb|right|200px|]]
 
இதன் உணர்கொம்புகளின் கொத்தும்கொட்டும் தன்மை பெரும்பான்மையாக வேண்டுமென்றே இருப்பதில்லை. அதன் உடலில் காணப்படும் தூரிகைப்போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமுட்டையைத் தூண்டி அதற்கு வினையான அவை கொத்துகின்றன. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். பெரும்பாலான நேரத்தில் மனிதர்களுக்கு இத்தாக்கம் சில ஊறுகளையும், சில வலியையும் உண்டுச்செய்கின்றன. அதிலும் கடற்சாட்டை/கடற்குளவி (Sea wasp) சொறிமுட்டை மனிதர்களுக்கு மூச்சடைப்பு மட்டும் ஏற்படுத்தாமல் இதயத்தையும் செயலிழக்கச் செய்து மரணத்தை விளைவிக்கூடியதாகவும் உள்ளன.
==வரலாறு==
சொறிமுட்டைகள் பல காலங்களிலாக அறிஞர்களால் ஆயப்பட்டு வந்தாலும் இது பெரிதும் அறிவியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது அக்டோபர் 2007 ஆம் ஆண்டே. அப்போதுக் கண்டுபிடிக்கப்பட்ட சொறிமுட்டையின் புதைப்படிமங்கள் அதன் வரலாறை உலகிற்கு உணர்த்தியது. அவை 205 மில்லியன் ஆண்டுகளுக்குப் பழைமையானவை என்பது அறிவியல் உலகில் வியப்பை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் பல அறிய புதிய வகை சொறிமீன்கள் கண்டுப்பிடித்தவன்னம் இருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சொறி_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது