முதலாம் ஜான் பால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
 
==சிறப்பு அம்சங்கள்==
[[திருத்தந்தை]] முதலாம் ஜான் பால் தன் எளிமையான நடவடிக்கைகளாலும், புன்னகையாலும், அனைவரையும் கை நீட்டி வரவேற்கும் பண்பாலும் உலகையே கவர்ந்தார். எளிமையின் அடையாளமாக திருத்தந்தையாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மும்முடி அணிதலைத் தவிர்த்தார். உலகின் ஒவ்வொரு கத்தோலிக்க ஆலயத்தின் வருமானத்திலும் ஒரு விழுக்காடு மூன்றாம் உலக நாடுகளின் ஏழைத் திருச்சபைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்ற விதியைத் துவக்கியவர் இவரே.
 
எதைக் கூறினாலும் திருச்சபையின் சார்பாக பேசுவதாக 'நாம்' என்ற பதத்தையே அனைத்துத் திருத்தந்தையர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்க, அதனை 'நான்' என்று முதன் முதலில் மாற்றி பயன்படுத்தியவர் இவரே. திருத்தந்தையர்களின் பெயரில் முதலில் இரட்டைப் பெயரைப் பயன்படுத்தியவர் இவரே. பல்வேறு சீர்திருத்தங்களை திருச்சபையில் கொணர்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் இந்த எளிமையான திருத்தந்தை.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_ஜான்_பால்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது