கூடங்குளம் அணு ஆலைக்கு எதிரான போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
வரிசை 10:
* சுற்றுச்சூழல் பாதிப்படையும்.
* கடற்கரைக்கு அருகில் இருப்பதால் சுனாமியால் தாக்கப்படலாம். தீவரவாதிகள் தாக்கலாம்.
 
==போராட்டக் குழுவின் வாதங்கள்==
* இது கூடங்குளம், இடிந்தகரை மக்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை இல்லை. கன்னியாகுமரி மாவட்டும் தாண்டி கேரளத்துக் கொல்லம் வரை இதன் பாதிப்புகள் இருக்கும் என்பதால் கேரளத்து மக்களே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்துப் போராடுகிறார்கள்.
* வெறும் 450 மெகாவாட் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படியானால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குளம் அணுவுலை இயக்கப்பட்டால் அதிகமான கதிர்வீச்சு ஏற்படும்.
* இயங்கும் நிஐயிலேயே இப்படி என்றால் விபத்து நேர்ந்து உலை வெடித்து சிதறினால் என்ன ஆகும்? ஹிரோசிமா, நாகாசாகி, மற்றும் செர்னோபில், ஃபுக்குஷிமா வரிசையில் கூடங்குளம் விபத்து ஏற்பட்டால் தமிழகமே சாம்பல் மேடாகும், பச்சைப் பசுஞ்சோலையான குமரி மாவட்டமும், அதன் நான்கு தினை வளங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களும் நிரந்தரமாக பட்டுப் போக வாய்ப்பிருக்கிறது.
* விபத்து எதுவும் ஏற்படாமல் 40 ஆண்டுகள் ஓடி முடித்து விட்டாலும் எஞ்சியுள்ள அணுக்கழிவுகளை 40 ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக பெருத்த பொருட்செலவில் பாதுகாக்க வேண்டும். மட்கா கழிவுகளான நெகிழிகளே வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அணுக்கழிவுகளை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்.
* இந்தியாவில் 97 சதவிகிதம் அணுவுலை தவிர்த்த மின்உற்பத்தி முறையிலேயே உருவாக்கப்படுகின்றது.
*மின்சார பற்றாக்குறையால் தமிழகம் இருக்கும் போது கடலுக்கடியில் மனிஇழை போட்டு இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் அவசியம் என்ன?
* 1974 ல் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய போது தாராப்பூர் அணு உலைக்கான எரிபொருள் தருவதை அமெரிக்கா நிறுத்தியது.மின்சாரம் தேவை என்று மக்களிடம் கூறி அணு ஆயுதத்திற்கான மூலப்பொருட்களை பெறுதல் என்பதே அணுவுலையின் உள்நோக்கம்.
* விபத்தே நடக்காது என்றால் அணு விபத்து இழப்பீடு சட்டம் எதற்காக? அணு விபத்து பாதுகாப்பு ஒத்திகை எதற்காக? அணு உலையை ஒட்டியக் கடல்பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு மீன்பிடிக்க கூடாது என்று சொல்வது ஏன்? உலக நாடுகள் அணுவுலைகளை மூடிவருவது ஏன்?
* இத்தாலி போன்ற நாடுகள் அணு உலைகள் வேண்டாம் என்று பொது வாக்கெடுப்பில் தீர்மானித்துள்ளன.
* செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டே கூடங்குளம் அணு உலைத்திட்டத்திற்கு கையெழுத்து இட்டது ரசியா. 1993ம் ஆண்டுக்கு பின் அமெரிக்கா அணு வுலைகள் எதுவும் அமைக்க வில்லை.
* ஜப்பான், ஃபுக்குசிமா அணு உலைகள் வெடித்து சிதறிய பின்னர் சுவிட்சர்லாந்து 2020க்குள்ளும், செர்மனி 2022க்குள்ளும் எல்லா அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாக அறிவித்துள்ளன.
* இந்திய அரசு போபால் இரசாயண ஆலை பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தப்பிறகும் அங்கு விபத்து நடந்து 20 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்.
* செர்னோபில், ஃபுக்குசிமா அணுவுலைகளும் அமைக்கும் போதும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டது.
* 1988ம் ஆண்டு முதலே கூடங்குளம் பகுதியில் அணு வுலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
*1988 ல் மக்கள் எதிர்ப்பினால் தான் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் பயணத்தை ரத்து செய்தார். 1989ல் அணுவுலைக்கு எதிராக போராடியவர்களை துப்பாக்கி சூடு நடத்தி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கியது.
* இப்போதைய எழுச்சி ஃபுக்குசிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வும், சோதனை ஓட்டத்தில் எழும்பிய புகையும், ஓசையும், விபத்து நேர பாதுகாப்பு ஒத்திகையும் காரணமாகும்.
 
==அரசுத்தரப்பு வாதங்கள்==