கருவூர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
கருவூர் என்னும் ஊரின் பெயர் இக்காலத்திலும் நாட்டுப்புற மக்களால் கருவூர் எனவே வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் இதனைக் [[கரூர்]] (Karur) என வழங்கியதன் அடிப்படையில் இக்காலத்தில் மருவி வழங்கப்படுகிறது.. இது தமிழ்நாட்டுக் கரூர் மாவட்டத்தின் தலைநகர்.
 
இந்த ஊருக்கு அருகில் பாயும் ஆறு [[அமராவதி ஆறு|அமராவதி]]. இது சங்ககாலத்தில் ஆன்பொருநை என வழங்கப்பட்டது. ஆனிரைகள் (மாடுகள்) பொருந்தி மேயும் ஆறாக விளங்கிய இடம் ஆன்பொருநை. இதன் வழியில் தோன்றியதே கருவூரில் உள்ள ஆனிலையப்பர் கோயில்.
 
இவ்வூர், [[வஞ்சி]], [[வஞ்சி|வஞ்சிமுற்றம்]] என்னும் பெயர்களாலும் சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டது. இதன் வழியில் தோன்றியதே கருவூரிலுள்ள வஞ்சியம்மன் கோயில்.
==சோழனின் கருவூர் முற்றுகை கைவிடப்பட்டது==
:கருவூர் அருகில் தண் ஆன்பொருநைதண்ஆன்பொருநை (அமராவதி இக்கால வழக்கு) ஆறு பாய்ந்தது. அந்த ஆற்று மணலில் அக்காலத்தில் மகளிர் தெற்றி விளையாடுவர். (அண்மைக் காலத்தில் விளையாடப்பட்ட பாண்டி விளையாடுதான் சங்ககாலத் தெற்றி விளையாட்டு). சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை முற்றியிருந்தான். கருவூர் அரசன் சேரன். அவனது காவல்மரம் போந்தை எனப்பட்ட பனை. சோழன் அதனைக் கோடாரியால் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தான். இதனை வெட்டும் ஓசை அவ்வூர் அரசனுக்கு நன்றாகக் கேட்டது. கேட்டும் அதனைப் பொருட்படுத்தாமல் சோழனுக்குப் பயந்து சேரன் கருவூர் கோட்டைக்குள் பதுங்கிக்கொண்டிருந்தான். இப்படி அஞ்சுபவனோடு போரிடுவது நாணத்தக்க செயல் என்று புலவர் [[ஆலத்தூர் கிழார்]] சோழனுக்கு அறிவுரை கூறினார். சோழனும் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினான். <ref>ஆலத்தூர் கிழார் புறநானூறு 36</ref>
 
==சேரன் கருணை==
:சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடம் சென்றான். அவன் தன் மார்பில் புலி உருவம் பொறித்த கவசம் அணிந்திருந்தான். அது அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது. அது சேரர் படையை எதிர்கொண்டதன் அறிகுறி. வெற்றிப் பெருமிதத்தில் சோழன் கருவூருக்குள் நுழைந்தபோது அவனது யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அப்போது புலவர் [[உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] கருவூர் வேண்மாடத்தில் சேர அரசனோடு உலவிக்கொண்டிருந்தார். சேர அரசனிடம் நிலைமையை விளக்கினார். சோழன் துன்பமில்லாமல் தன் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என வாழ்த்தினார். சேரன் வந்திருப்பவன் பகைவன் என்றும் பாராமல் சோழனைக் காப்பாற்றினான். இது சேரனின் கருணை உள்ளமா? புலவர் வாக்கைப் போற்றிய பெருந்தன்மையா? இரண்டுமே. <ref>உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறம் – 13</ref>
 
==சோழன் கருவூரை வென்றது==
:சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை வென்றதைப் புலவர் [[கோவூர் கிழார்]] பாராட்டிப் பாடியுள்ளார். முதலில் தன்னைத் காக்கவந்த பிட்டை(பிட்டன்) என்பவனோடு போரிட்டுக் கொங்கரை விரட்டினான். அடுத்துத் தன் படையுடன் முன்னேறி வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் வெற்றி கண்டான். வெற்றிகண்ட போர்களத்தில் அரசனை வாழ்த்தி புலவர் போர்க்களத்திலேயை யானைகளைச் சோழனிடம் பரிசாகப் பெற்றார். <ref>கோவூர் கிழார் பாடல் புறம் 373</ref>
 
==கோதை ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/கருவூர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது