இலங்கை மத்திய வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இலங்கை பொருளாதாரம் நீக்கப்பட்டது using HotCat
வரிசை 29:
மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு முன்னர் மத்திய வங்கித்தொழிலுடன் தொடர்பான தொழிற்பாடுகள் [[1884]]-ஆம் ஆண்டின் தாள் நாணய கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பணச்சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
 
அரசியல் சுதந்திரம் அடையப்பட்ட பின்னர், அபிவிருத்தியடைந்து வருகின்றதும் சுதந்திரமானதுமான நாடொன்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பணச்சபை முறைமை போதுமானதற்றது மட்டுமன்றி பொருத்தமற்றதுமென கருதப்பட்டது. எனவே. [[1948]] யூலையில் இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கு [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் கோரிக்கை விடுத்தது. இதன் பெறுபேறாக ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் றிசேர்வ் போர்டிலிருந்து பொருளியலாளரான ஜோன் எக்ஸ்ரர் என்பவர் இப்பணியினை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டார்.
 
மத்திய வங்கிக்கான கோட்பாடு மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பு என்பன மீதான எக்ஸ்ரரின் அறிக்கை [[1949]] நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது இதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. இலங்கை மத்திய வங்கி 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயச் சட்ட விதியின் மூலம் நிறுவப்பட்டதுடன் [[1950]] [[ஓகத்து 28]]-ஆம் நாளன்று தொழிற்படத் தொடங்கியது. இது [[1985]]-இல் ‘சென்ட்ரல் பாங்க் ஒவ் சிறிலங்கா’ (''Central Bank of Sri lanka'') என ஆங்கிலத்தில் மீளப் பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மத்திய_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது