ஆயர் (கிறித்துவ பட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
சி சேர்க்கை
வரிசை 1:
'''ஆயர்''' (''Bishop'') என்பவர், [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] [[திருச்சபை]] ஒன்றின் அருட்பொழிவு பெற்ற தலைவராக விளங்குபவர் ஆவார். [[கத்தோலிக்க திருச்சபை]]யைப் பொறுத்தவரை, ஒரு [[மறைமாவட்டம்|மறைமாவட்டத்தின்]] தலைவர் '''ஆயர்''' என்று அழைக்கப்படுகிறார். உலகத் திருச்சபையின் தலைவரும், [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]]வின் வழித்தோன்றலுமான [[உரோமை நகரம்|ரோமின்]] ஆயர் [[திருத்தந்தை]] என்று அழைக்கப்படுகிறார்.
 
==சொல் தோற்றம்==
 
"ஆயர்" என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான "Bishop" என்னும் ஆங்கிலச் சொல் ἐπίσκοπος (epískopos) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதற்கு "மேற்பார்வையாளர்", "கண்காணிப்பாளர்" (supervisor, overseer) என்பது நேரடிப் பொருளாகும். கிறித்தவ சபைகளில் மேற்பார்வைப் பொறுப்புக் கொண்டவர்களுக்குப் பொதுவாக "ஆயர்" என்னும் பெயர் பொருந்தும்.
 
"ஆயர்" என்றால் "(ஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள். அது கிறித்தவ சபையின் மக்களை வழிநடத்துபவர் என்று பொருள்தரும்.
 
==கத்தோலிக்க சொற்பயன்பாடு==
 
கத்தோலிக்க சபையின் வழக்கப்படி "ஆயர்" என்னும் பொறுப்பைப் பெறுபவர் திருச்சபையின் உயர்முதல் தலைவராகிய [[திருத்தந்தை|திருத்தந்தையால்]] நியமிக்கப்படுவார். அவருடைய அதிகாரத்தின்படி ஆயர்நிலை அருட்பொழிவு பெறுவார். முன்னாள்களில் "ஆயர்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "மேற்றிராணியார்" என்னும் சொல் வழக்கத்தில் இருந்தது. அச்சொல் "மேல்+திராணி" என்னும் மூலத்திலிருந்து பிறந்து "மேல் பொறுப்பு" கொண்டவர் என்னும் பொருள் தந்தது. கிரேக்க மூலத்துக்கு ஏற்ப "கண்காணிப்பாளர்" என்னும் பொருளும் அதில் அடங்கியிருந்தது.
 
"ஆயர்" என்னும் சொல்லுக்கு நேரிணையான ஆங்கிலச் சொல் "pastor" (shepherd) என்பதும் விவிலியத்தில் வேரூன்றியதாகும். [[இயேசு]] தம்மை "நல்ல ஆயர்" (Good Shepherd) என்று அறிமுகப்படுத்துகிறார். அவரிடத்தில் நம்பிக்கை கொண்டு அவரால் வழிநடத்தப்படும் "ஆடுகளை" அவர் கண்காணித்துக் காக்கிறார். [[யோவான்|யோவான் நற்செய்தியில்]] இயேசு கூறுகிறார்:
{{cquote|நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். ளூகூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் ([[யோவான்|யோவான் 10:11-15]].)}}
 
[[கத்தோலிக்க திருச்சபை]]யைப் பொறுத்தவரை, ஒரு [[மறைமாவட்டம்|மறைமாவட்டத்தின்]] தலைவர் '''ஆயர்''' என்று அழைக்கப்படுகிறார். உலகத் திருச்சபையின் தலைவரும், [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]]வின் வழித்தோன்றலுமான [[உரோமை நகரம்|உரோமை மறைமாவட்டத்தின்]] ஆயர் [[திருத்தந்தை]] என்று அழைக்கப்படுகிறார்.
==தென்னிந்திய திருச்சபை சொற்பயன்பாடு==
 
சீர்திருத்த சபைகளில், குறிப்பாகத் தென்னிந்திய திருச்சபையில் bishop என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக "பேராயர்" என்பது பயன்படுகிறது.
 
கத்தோலிக்க சபையில் "பேராயர்" என்பது archbishop என்னும் சொல்லுக்கு நேரிணையாகக் கொள்ளப்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயர்_(கிறித்துவ_பட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது