ஜொகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
 
அதற்கு முன்னர் மூவார் ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப்பகுதியை 'உஜோங் தானா' என்று அழைத்தனர். உஜோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். ஜொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசிய கண்ட நிலப்பகுதியின் ஆகத் தென் முனை ஜொகூரில் தான் உள்ளது.<ref>[http://www.nst.com.my/Current_News/JohorBuzz/Monday/MyJohor/2480438/Article/index_html/ Ancient names of Johor, 2 March 2009, JohorBuzz, New Straits Times]</ref>
 
==வரலாறு==
===அலாவுதீன் ரியாட் ஷா===
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா. இவர் மலாக்கா
சுலதான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.
 
மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகமும் ஒன்றாகும். பேராக் சுல்தானகம் மற்றொரு வாரிசு அரசாகும்.
 
===முஷபர் ஷா===
 
பேராக் சுல்தானகத்தைச் சுல்தான் முகமட் ஷாவின் மற்றொரு புதல்வரான முஷபர் ஷா உருவாக்கினார். அலாவுதீன் ரியாட் ஷா உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், போர்த்துகீசியர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன.<ref>[http://www.tourismjohor.com/about/ During its peak, the whole of Pahang and the present day Indonesian territories of Riau Archipelago and part of Sumatra Island were under Johor's rule.]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜொகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது