நாலந்த சிலை மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
'''நாலந்த சிலை மண்டபம்''' அல்லது '''நாலந்த கெடிகே''' (''Nalanda Gedige'') என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் A9 நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த சிலை மண்டப அழிபாடு ஆகும். இது மாத்தளைக்கும் தம்புல்லைக்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாழச் சம அளவு தொலைவில் உள்ளது. இது இலகுவாக அணுகத்தக்க வகையில் அமைந்திருந்தும், ஒப்பிடும்போது பெருமளவுக்கு அறியப்படாத ஒரு தொல்லியல் சின்னமாகவே இது உள்ளது. இலங்கையில் இந்தச் சிலை மண்டபத்துக்கு முந்தியதும், பிந்தியதுமான பல சிலை மண்டபங்கள் இருந்தும் இது பல வழிகளில் அவற்றிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. 1970களில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட மகாவலி ஆறு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நினைவுச் சின்னம் முற்றாகவே நீருக்குள் அமிழ்ந்து அழியும் நிலை ஏற்பட்டபோது, இச்சின்னத்தை ஒவ்வொரு கல்லாகக் கழற்றி எடுத்த தொல்லியல் துறையினர் அதனை முன்னைய இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் நிலத்தை மண்போட்டு உயர்த்தி மீளக் கட்டினர்.
 
==சின்னங்கள்==
இந்தத் தொல்லியல் களம் ஒரு சிலை மண்டபத்தையும், ஒரு சிறிய தாது கோபுரத்தையும் உள்ளடக்கியுள்ளது. இவ்விரண்டும், ஒரு சதுர வடிவான மேடையில் கட்டப்பட்டுள்ளன. இம்மேடையைச் சுற்றிலும் செங்கற்களினாலான குட்டைச் சுவர் உள்ளது. இம்மேடையின் கிழக்குச் சுவரோடு ஒட்டி அதன் நடுவில் படிகள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இரண்டு புத்தர் சிலைகளின் மார்பளவு பகுதிகளும், ஒரு கால் பகுதியும், மகாயான போதிசத்வர் அல்லது அவலோகிதேசுவரர் எனக்கருதத்தக்க சிற்பத்தைக் கொண்ட ஒரு கற்பலகையும், ஒரு சிறிய காவற்கல்லும், ஒரு பிள்ளையார் சிலையும் இவ்விடத்தில் அழிபாடுகளிடையே காணப்பட்ட பிற தொல்லியல் சின்னங்கள். இவற்றைவிட சற்றுத் தொலைவில் வயல் பகுதியில் கல்வெட்டுக்களைக் கொண்ட கற்றூணின் பகுதிகளும் காணப்பட்டன.
 
==அமைப்பு==
கட்டிடங்கள் 65 சமீ உயரம் கொண்டதும் பல்வேறு துணை உறுப்புக்களால் ஆனதுமான தாங்குதள மேடை மேல் அமைந்துள்ளன. சிலை மண்டபம் முக மண்டபம், உள் மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளால் ஆனது.
 
இச்சிறிய கட்டிடம் இந்துக் கோயில் போன்று பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே பௌத்த, இந்து சிற்பங்கள் காணப்படுகின்றன. பல்லவ கட்டிட கலையம்சம் கொண்ட இக்கட்டிடமானது தாந்திரிக் எனப்படும் பௌத்த சிற்ப வடிவமைப்பைக் கொண்டு பௌத்த – இந்து அடையாள சின்னமாகக் காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நாலந்த_சிலை_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது