ஆலிவர் கிராம்வெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
 
==வரம்புடை மக்களாட்சி==
குரோம்வெல்லுக்குப் பிறகு அவருடைய மூத்த மகன் ரிச்சர்டு குரோம்வெல் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சி நடத்தினார். 1660-ல் இரண்டாம் சார்லசுக்கு மீண்டும் அரச பதவி அளிக்கப்பட்டது. ஆலிவர் குரோம்வெல்லின் சடலம் கல்லறையில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு ஒரு கம்பத்தில் தூக்கிலிடப்பட்டது. இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த நடந்த போராட்டம் படு தோல்வி அடைந்தது. இதை உணர்ந்த இரண்டாம் சார்லஸ் நாடாளுமன்றத்தின் மேலாண்மை உரிமையை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவருக்குப் பின் அரியணை ஏறிய இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மீண்டும் வரம்பற்ற முடியாட்சியை ஏற்படுத்த முயன்ற போஹ்டுபோது 1688-ல் நடந்த 'இரத்தம் சிந்தாப் புரட்சியில்' அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இதன் விளைவாக "வரம்புடை முடியாட்சி" (Constitutional Monarchy) இங்கிலாந்தில் அமைந்தது. இதன் படி அரசர் திட்டவட்டமாக நாடாளுமன்றத்திற்கு கீழமைந்தவரானார். அத்துடன் சமயப் பொறையுடைமைக் கொள்கையும் அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அமைந்தது.
 
==உசாத்துணை==
மைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008
"https://ta.wikipedia.org/wiki/ஆலிவர்_கிராம்வெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது