பாக் குகைகள்

பாக் குகைகள் அல்லது புலிக் குகைகள் (Bagh Caves), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், விந்திய மலைத்தொடரின் அடிவாரத்தில் தார் மாவட்டத்தின் பாக் என்ற ஊரில் அமைந்த ஒன்பது குடைவரை நினைவுச் சின்னங்கள் ஆகும்.[1][2]

பாக் குகைகள்

குடைவரைக் கட்டிடக் கலையில் அமைந்த இக்குகைகளில் பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் கொண்டுள்ளது.

தற்போது ஐந்து குகைகள் மட்டும் உள்ளது. மணற்கல் பாறைகளில் செதுக்கப்பட்ட இக்குகைச் சுவர்களில் அஜந்தா குகை ஓவியங்கள் போன்ற பௌத்த சமயம் குறித்தான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஐந்து குகைகளில் பிக்குகள் தங்க விகாரங்களும், தியானிக்க சைத்தியங்களும் உள்ளது. குகை எண் 4ன் சுவர்கள் வண்ண வண்ண ஓவியங்கள் கொண்டுள்ளதால் இக்குகையை வண்ண அரண்மனை (ரங்க் மகால்) என அழைக்கிறார்கள்.

இக்குகைகள் சாதவாகன மன்னர்கள் கிபி 5 – 6வது நூற்றாண்டில் வடிவக்கப்பட்டதாகும்.[3]

வட மொழியில் பாக் என்பதற்கு புலி என்று பொருளாகும். பாக் குகைகள், இந்தூர் தொடருந்து நிலையத்திலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ளது.

ஓவியங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Bagh Caves". Archived from the original on 2013-09-09. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  3. Verma, Archana (2007). Cultural and Visual Flux at Early Historical Bagh in Central India, Oxford: Archaeopress, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4073-0151-8, p.19

வெளி இணைப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு

  1. Pande, Anuapa (2002). The Buddhist Cave Paintings of Bagh, New Delhi: Aryan Books International, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7305-218-2, sumit vyas




"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்_குகைகள்&oldid=3562480" இலிருந்து மீள்விக்கப்பட்டது