விக்ரமாதித்திய வரகுணன்

ஆய் நாட்டு அரசன்

விக்ரமாதித்யன் (ஆட்சிக்காலம் கி.பி. 884-911 [1] அல்லது கி.பி. 920 [2] )-இவர் விக்ரமாதித்திய "வரகுணன்" என சிறப்பாக அறியப்படுகிறார். இவர் தென்னிந்தியாவின் ஆய் மரபின் ஒரு மன்னர் ஆவார். இவர் பாண்டிய மன்னனான இரண்டாம் வரகுணனனிடம் (கி.பி. 862—885) பணியாற்றியவராகவோ அல்லது குறுநில மன்னராகவோ இருந்தவர் என்பதை இவரது குடும்பப்பெயர் குறிக்கிறது. இவர் பாண்டிய மன்னரான சீவல்லபனின் (கி.பி. 815—862) [3] பணியாளரான கருணாந்தடக்கன் "ஸ்ரீவல்லபனின்" (கி.பி. 856 / 57—884 [4] ) என்பவரின் வாரிசு ஆவார்.

விக்ரமாதித்திய வரகுணன்
ஆய் நாட்டு மன்னன்
பாளையம் செப்பேடுகள் (898 AD)
ஆட்சிக்காலம்ஆட்சிக்காலம் கி.பி. 884―911/20
முன்னையவர்கருணாந்தடக்கன் ஸ்ரீவல்லபன் (c. 856/57―884 AD)
மரபுஆய் நாடு
மதம்இந்து

விக்ரமாதித்யன் நடு கேரளத்தில் ஒரு பௌத்த விகாரைக்கு பெரிய நிலக்கொடை ஒன்றை அளித்ததில் பெயர் பெற்றவர் (பாளையம் செப்பேடு) . [5] இந்த நன்கொடை செயலானது சேரநாட்டின் சேர / பெருமாள் மன்னர்களிடம் (கி.பி 885 இல் திருப்புறம்பியம் போரில் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு) நட்புரீதியான அணுகுமுறையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

விக்கிரமாதித்திய வரகுணனின் ஆவணங்கள் தொகு

  • திருபரப்பு செப்பேடு [6]
  • திருநந்திக்கரை செப்பேடு
  • பாளையம் செப்பேடு


குறிப்புகள் தொகு

  1. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 97, 109. 337-39, 474-75.
  2. Gurukkal, Rajan. The Agrarian System and Socio-Political Organisation Under the Early Pandyas c. AD 600-1000. Doctoral Thesis. Jawaharlal Nehru University, 1984. 29-30.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-19. பார்க்கப்பட்ட நாள் 2020-11-13.
  4. Gurukkal, Rajan. The Agrarian System and Socio-Political Organisation Under the Early Pandyas c. AD 600-1000. Doctoral Thesis. Jawaharlal Nehru University, 1984. 29-30.
  5. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 97.
  6. Gurukkal, Rajan. The Agrarian System and Socio-Political Organisation Under the Early Pandyas c. AD 600-1000. Doctoral Thesis. Jawaharlal Nehru University, 1984. 29-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரமாதித்திய_வரகுணன்&oldid=3571533" இலிருந்து மீள்விக்கப்பட்டது