வினைல் ஆல்ககால்


வினைல் ஆல்ககால் (Vinyl alcohol) என்பது CH2CHOH, என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தினால் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. குடிப்பதற்குப் பயன்படுவது எத்தனால் என்பது கவனிக்கத்தக்கது, வினைல் ஆல்ககால், அசிட்டால்டிகைடு மற்றும் எத்திலீன் ஆக்சைடு ஆகிய சேர்மங்களின் மாற்றியன் ஆகும்.

வினைல் ஆல்ககால்
Vinyl alcohol
Displayed formula of ethenol
Displayed formula of ethenol
Ball-and-stick model of ethenol
Ball-and-stick model of ethenol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தினால்
வேறு பெயர்கள்
ஐதராக்சியெத்தின்
ஐதராக்சியெத்திலீன்
இனங்காட்டிகள்
557-75-5 Y
ChEMBL ChEMBL76101 Y
ChemSpider 10726 Y
InChI
  • InChI=1S/C2H4O/c1-2-3/h2-3H,1H2 Y
    Key: IMROMDMJAWUWLK-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C2H4O/c1-2-3/h2-3H,1H2
  • InChI=1S/C2H4O/c1-2-3/h2-3H,1H2
    Key: IMROMDMJAWUWLK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11199
SMILES
  • OC=C
பண்புகள்
C2H4O
வாய்ப்பாட்டு எடை 44.053 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அசிட்டால்டிகைடிலிருந்து வினைல் ஆல்ககால் தொகு

சாதாரண சூழ்நிலைகளில் வினைல் ஆல்ககால் அசிட்டால்டிகைடாக இயங்குச்சமநிலை மாற்றமடைகிறது.

 

அசிட்டால்டிகைடு (H3CC(O)H), அறை வெப்பநிலையில் வினைல் ஆல்ககாலை விட அதிக நிலைப்புத்தன்மையுடன் (42.7கியூ/மோல்) :[1] காணப்படுகிறது.

H2C=CHOH → H3CC(O)H, ΔH298,g = −42.7 கியூ/மோல்

இந்த கீட்டோ-ஈனோல் இயங்குச் சமநிலை மாற்றங்கள் ஒர் உயர் தடையாக உள்ள காரணத்தால் அறை வெப்பநிலைக்கு அருகில் மாற்றம் ஏற்படுவது இல்லை. ஒளிவேதியியல் செயல்முறையின் வினையூக்கத்தால் இயங்குச் சமநிலை மாற்றத்தை உண்டாக்க முடியும்.

வளிமண்டலத்திலும் படை மண்டலத்திலும் வினைல் ஆல்ககாலைப் பயன்படுத்தி கரிம அமிலங்கள் தயாரிப்பதற்கு, கீட்டோ ஈனோல் இயங்கு சமநிலை மாற்றமே பொருத்தமான வழியாக இருக்குமென்று இந்தக் கண்டுபிடிப்புகள் பரிந்துரைக்கின்றன [2][3].

பாலிவினைல் ஆல்ககாலுடன் உள்ள தொடர்பு தொகு

வினைல் ஆல்ககால் நிலைப்புத்தன்மை அற்றது என்பதால், மறைமுகமாக வெப்பநெகிழி பாலிவினைல் ஆல்ககால் உருவாக்கப்படுகிறது. வினைல் அசிட்டேட்ட்டின் எசுதர் பிணைப்புகளை நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி தொடர்ந்து பலபடியாதல் வினையை நிகழ்த்துவதன் மூலம் மேற்கண்ட மாற்றத்தை ஏற்படுத்த முடியும். (Ac = அசிட்டைல், HOAc = அசிட்டிக் அமிலம்): nCH2=CHOAc → (CH2−CHOAc)n (CH2−CHOAc)n + nH2O → (CH2−CHOH)n + nHOAc

ஒர் ஈதல் தொகுதியாக தொகு

பல்வேறு உலோகக் கலப்புத் தொகுதிகள் வினைல் ஆல்ககாலை ஈதல் தொகுதியாகப் பெற்றுள்ளன என்பது அறியப்பட்டுள்ளது. Pt(acac)(η2-C2H3OH)Cl ஒர் உதாரணம் ஆகும் [4]. (acac = அசிட்டைலசிட்டோனேட்டு)

விண்மீனிடை ஊடகத்தில் தொகு

தனுசு விண்மீன் குழாம் பி இன் மூலக்கூற்று மேகத்தில் வினைல் ஆல்ககால் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிட் பீக் தேதிய வானாய்வகம், 12 மீட்டர் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி மூலம் இதைக் கண்டுபிடித்துள்ளது [5]. இவ்வினைல் ஆல்ககால் நீர்த்த விண்மீனிடை ஊடகத்தில் நிலைப்புத்தன்மையுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தன்மை, இயங்குச் சமநிலை மாற்ற்றமென்பது ஒற்றை மூலக்கூறு சார்ந்ததல்ல என்பதைக் காட்டுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. R.D. Johnson III. "CCCBDB NIST Standard Reference Database". பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
  2. Heazlewood, B. R.; Maccarone, A. T.; Andrews, D. U.; Osborn, D. L.; Harding, L. B.; Klippenstein, S. J.; Jordan, M. J. T.; Kable, S. H. "Near-threshold H/D exchange in CD3CHO photodissociation." Nat. Chem. 2011, 3, 443−448. எஆசு:10.1038/nchem.1052
  3. Andrews, D. U.; Heazlewood, B. R.; Maccarone, A. T.; Conroy, T.; Payne, R. J.; Jordan, M. J. T.; Kable, S. H. "Photo-tautomerization of acetaldehyde to vinyl alcohol: A potential route to tropospheric acids." Science 2012, 337, 1203−1206. எஆசு:10.1126/science.1220712
  4. F. A. Cotton, J. N. Francis, B. A. Frenz, M. Tsutsui "Structure of a dihapto(vinyl alcohol) complex of platinum(II)" Journal of the American Chemical Society, 1973, volume 95, p. 2483-6. எஆசு:10.1021/ja00789a011
  5. "Scientists Toast the Discovery of Vinyl Alcohol in Interstellar Space". National Radio Astronomy Observatory. 2001-10-01. http://www.nrao.edu/pr/2001/vinylalco/. பார்த்த நாள்: 2006-12-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைல்_ஆல்ககால்&oldid=3679440" இலிருந்து மீள்விக்கப்பட்டது