சிகாகோ பெருந்தீ
சிகாகோ காட்டுத்தீ அக்டோபர் மாதம் 8ஆம் தேதி 1871ஆம் ஆண்டு எரிய ஆரம்பித்து அம்மாதம் பத்தாம் தேதி வரை எரிந்தது. நூற்றுக்கணக்கானவர்களை எரித்து சிகாகோவின் நான்கு சதுர மைல்களில் உள்ள அனைத்தையும் எரித்து நாசப்படுத்தியது இத்தீ. ref name="WhatDoWeKnow">Bales, Richard (2004). "What do we know about the Great Chicago Fire?". பார்க்கப்பட்ட நாள் 2008-11-14.</ref> பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீயான இதனால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டாலும் நகரத்தின் புனரமைப்பு வெகு வேகமாக செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக சிகாகோ உள்ளது.
சிகாகோவின் கொடியில் உள்ள இரண்டாம் நட்சத்திரம் இந்த காட்டுத்தீயை குறிக்கிறது.[1] இன்றைய நாள் வரை இந்த காட்டுத்தீ உருவான காரணத்தை யாரும் அறியவில்லை.
தொடக்கம்
இத்தீ அக்டோபர் 8ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில், 137 டேகோவென் தெருவிலுள்ள ஒரு சின்ன கிடங்கில் ஆரம்பித்தது.< ref>Pierce, Bessie Louise (1957, rep. 2007). A History of Chicago: Volume III: The Rise of a Modern City, 1871–1893. Chicago: University of Chicago Press. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-66842-0. {{cite book}}
: Check date values in: |date=
(help)</ref>
ஒரு செய்தித்தாள் நிருபரான மைகேல் அஹர்ன் என்பவர் இத்தீ ஒரு மாடு எரிவிளக்கை எட்டி உதைத்ததனால் உருவானது என்று கூறினார்.
ஆனால் 1893ஆம் ஆண்டில் தான் சொன்னவை உண்மையில்லை என்று அறிவித்தார்.[2]
இந்த தீ சிகாகோ நகரத்தின் அதிகமான மரக்கட்டை பயன்பாடு மற்றும் தென்மேற்கு காற்றினாலும் அதிகமாக ஏரிந்தது. சீக்கிரமாக தடுக்காதலாலும் முன்னதாக நடந்த தீவிபத்தில் சோர்வடைந்த தீயணைப்பவர்களாலும் தீயின் பரப்பளவு அதிகமானது.[3] இரண்டு நாட்கள் முழுவதும் தீயனைப்பவர்கள் தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பெய்த மழையினால் தீ முற்றிலுமாக அனைக்கப்பட்டுவிட்டது. 300 மக்கள் இறந்ததாகவும், 3 இலட்சம் மக்கள் தெருவிற்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தீ பரவுதல்
நகரத்தின் தீயணைப்புத்துறையினர் காலை சுமார் பத்து மணியளவில் அழைக்கப்பட்டனர். அவர்களின் தவறால் தீ மேலும் பரவியது.
தீயை தாங்கிய கட்டடங்கள்
- தூய மைகேல் சர்ச்
- சிகாகோவின் தண்ணீர்த்தொட்டி
- சிகாகோ அவென்யூ நீரேற்று நிலையம்
குறிப்புகள்
- ↑ "Municipal Flag of Chicago". Chicago Public Library. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-04.
- ↑ "The O'Leary Legend". Chicago History Museum. பார்க்கப்பட்ட நாள் 2007-03-18.
- ↑ "The fire Fiend"". Chicago Daily Tribune: pp. 3. 1871-10-08.