சிறீகந்த்
'சிறீகந்த்( Shrikhand) என்பது இந்திய துணைக்கண்டத்தின் பாரம்பரிய இனிப்பு வகையாகும். இது வடிகட்டிய தயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தாலியுடனோ அல்லது பூரிகளுடன் பரிமாறப்படுகிறது.[1] [2] குசராத்தி மற்றும் மராத்தி உணவு வகைகளில் இது ஒரு பாரம்பரிய இனிப்பு. [1] [3] [4]
பசுங்கொட்டை மற்றும் ஏலக்காய் கலந்த சிறீகத்தி | |
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு-விருந்துக்குப் பின் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | குசராத்து, மகாராட்டிரம் |
முக்கிய சேர்பொருட்கள் | இன் தயிர், சீனி, ஏலக்காய், குங்குமப்பூ |
வரலாறு
தொகுகுசராத்திகள் மற்றும் மராத்தியர்கள் இருவரும் இதனை கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர். [5] [6] ஒரு பிரபலமான புராணத்தின் படி, சிறீகந்த்மேய்ப்பர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் பயணம் செய்யும் போது தயிரை எளிதாக எடுத்துச் செல்ல, அவர்கள் அதன் மோரை வடிகட்டினர். வடிகட்டப்பட்ட தயிர் காலையில் புளிப்பாக மாறியதால், அவர்கள் அதை இன்னும் சுவையாக மாற்ற சர்க்கரையுடன் கலந்து, இந்த இனிப்பை உருவாக்கியதாகத் தெ ரிகிறது[7]
உணவு வரலாற்றாசிரியர் கேடி அச்சயாவின் கூற்றுப்படி, சிறீகந்த் முதன்முதலில் கிமு 500 இல் உருவாக்கப்பட்டது எனத் தெரிகிறது. இன்டியன் புட்: ஏ ஹிஸ்டாரிகள் கம்பேனியன் என்ற அவரது புத்தகத்தில், "தயிரிலிருந்து நீரை நீக்க, அதனை ஒரு மஸ்லின் பையில் சில மணி நேரம் தொங்கவிடப்படுகிறது பின்னர் சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள் கலந்து சிறீகந்த் தயாரிக்கப்படுகிறது" எனக் கூறுகிறார். [8] [9]
11 ஆம் நூற்றாண்டின் கன்னடக் கவிஞர் இரண்டாம் சவுந்தராயர், லோகோபகரா என்ற விவசாயம் பற்றிய தனது புத்தகத்தில் சுவைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் வடிகட்டப்பட்ட தயிரில் தயாரிக்கப்படும் சிகாரினி என்ற சிறீகர்த் செய்முறையை வழங்கினார்.[10] [11] 1508 ஆம் ஆண்டில் சைன மன்னன் மூன்றாம் மங்கராசாவால் எழுதப்பட்ட சூபசாத்திரம் என்ற சமையல் புத்தகமும் சிறீகந்த் பற்றிக் குறிப்பிடுகிறது [3] [12] [11]
புகைப்படங்கள்
தொகு-
பிஸ்தா மற்றும்குங்குமப்பூவுடன் தயாரிக்கப்பட்ட சிறீகந்த்
-
மாம்பழச்- சுவையுடைய சிறீகந்த்
-
குல்கண்ட்(ரோஜா) - சுவையுடைய சிறீகந்த்
-
பூரிகளுடன் சிறீகத்த
-
தாலியுடன் வழங்கப்படும் சிறீகந்த்
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- K. T. Achaya (12 May 1994). Indian Food: A Historical Companion. Oxford University Press, USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563448-8.
வெளி இணைப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Pangat, a Feast: Food and Lore from Marathi Kitchens.
- ↑ "Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog". 29 May 2020.
- ↑ 3.0 3.1 "Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog". 29 May 2020."Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog". 29 May 2020.
- ↑ "Sweet, cold, creamy and comforting - The Hindu". 13 April 2017. https://www.thehindu.com/life-and-style/food/sweet-cold-creamy-and-comforting/article17985230.ece.
- ↑ "Sweet, cold, creamy and comforting - The Hindu". https://www.thehindu.com/life-and-style/food/sweet-cold-creamy-and-comforting/article17985230.ece.Srinivasan, Pankaja (13 April 2017). "Sweet, cold, creamy and comforting - The Hindu". The Hindu.
- ↑ "Shrikhand: The Creamy And Flavourful Gujarati Dessert Is A Must-Have This Summer!".
- ↑ "Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog"."Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog". 29 May 2020.
- ↑ "Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog". 29 May 2020."Shrikhand - My Diverse Kitchen - A Vegetarian Blog". 29 May 2020.
- ↑ "Shrikhand: The Creamy And Flavourful Gujarati Dessert Is A Must-Have This Summer!"."Shrikhand: The Creamy And Flavourful Gujarati Dessert Is A Must-Have This Summer!".
- ↑ The Bloomsbury Handbook of Indian Cuisine. 2023.
- ↑ "Sweet, cold, creamy and comforting - The Hindu". 13 April 2017. https://www.thehindu.com/life-and-style/food/sweet-cold-creamy-and-comforting/article17985230.ece.Srinivasan, Pankaja (13 April 2017). "Sweet, cold, creamy and comforting - The Hindu". The Hindu.