குல்கந்து (Gulkand)(குல்கண்ட் அல்லது குல்கண்டு) என்பது இந்தோ-பெர்சியாவிலிருந்து வந்ததாக நம்பப்படும் உரோசா இதழ்களின் இனிமையைப் பாதுகாக்கும் முறையாகும். இந்த சொல்லானது பாரசீக மற்றும் அரபு வார்த்தையாகும். இது குல் (ரோஜா) மற்றும் காண்ட் (சர்க்கரை அல்லது இனிப்பு) எனப் பொருள்படும்.[1] [2]

குல்கந்து
Gul
மாற்றுப் பெயர்கள்உரோசா இதழ் ஊறல்
பகுதிஇந்திய துணைக்கண்டம்
பரிமாறப்படும் வெப்பநிலைஅறை வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள்உரோசா இதழ்கள், சர்க்கரை

தயாரிப்பு

தொகு

பாரம்பரியமாக, டமாசுக் ரோஜாக்களைப் பயன்படுத்தி குல்கந்து தயாரிக்கப்படுகிறது.[3] சீனா ரோஜா, பிரஞ்சு ரோஜா மற்றும் முட்டைக்கோஸ் ரோஜா ஆகியவை பயன்பாட்டில் உள்ள பிற பொதுவான ரோஜாக்கள் ஆகும்.[4] குல்கந்தானது சிறப்பான இளஞ்சிவப்பு ரோஜா இதழ்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. இந்த இதழ்கள் சர்க்கரையுடன் கலக்கப்படுவதால் குல்கந்து கிடைக்கின்றது.

 
குல்கந்து தயார் செய்தல்

மருத்துவத்தில் பயன்பாடு

தொகு

குல்கந்து யுனானி மருத்துவ முறையில் குளிர்ச்சியூட்டும் ஊட்டமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சோர்வு மற்றும் சோம்பலை எதிர்த்துப் போராடுவது, நினைவாற்றலை மேம்படுத்துதல் மற்றும் இரத்தத்தைச் சுத்திகரிப்பது உள்ளிட்டவற்றிற்குத் தீர்வாகக் குல்கந்து யுனானி மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுகிறது.[5] தேசிய ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் குல்கந்தினை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியல் இட்டு உள்ளது. அமில மிகை மற்றும் மாதவிடாய் வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Nadaf, Nilofar; Patil, Renuka; Zanzurne, Chaitanya (2012). "Effect of addition of gulkand and rose petal powder on chemical composition and organoleptic properties of Shrikhand". Recent Research in Science and Technology 4: 52–55. 
  2. "Gulkand, the Sweet Rose Preserve That's Also an Incredible Summer Coolant". NDTV Food. பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.
  3. Jat, Rajkumar; Mahawer; Bairwa; Meena; Pilania; Singh (2018). "Sensory evaluation and microbial analysis of rose petal jam". Journal of Pharmacognosy and Phytochemistry 7: 617–620. https://www.phytojournal.com/archives/2018/vol7issue5/PartL/7-4-265-609.pdf. 
  4. Ravsaheb, Mhetre Suhas (2019). "Preparation of gulkand flavored milk". Vasantrao Naik Marathwada Krishi Vidyapeeth. https://krishikosh.egranth.ac.in/displaybitstream?handle=1/5810129917. 
  5. Parveen, Rabea; Zahiruddin, Sultan (2020). "Chromatographic Profiling of Rose Petals in Unani Formulations (Gulkand, Arq-e-Gulab, and Rose Sharbat) Using HPTLC and GC–MS". Journal of AOAC International 103 (3): 684–691. doi:10.5740/jaoacint.19-0289. பப்மெட்:31561756. 
  6. Sindhura (28 April 2013). "PRELIMINARY PHYTOCHEMICAL SCREENING AND IN-VITRO ANTIOXIDANT ACTIVITY OF GULKAND". International Research Journal of Pharmaceutical and Applied Sciences 3: 186–189. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்கந்து&oldid=3658981" இலிருந்து மீள்விக்கப்பட்டது