சிறீமதி லால்
சிறீமதி பிரியதர்ஷினி லால் (1959-2019) ஒரு இந்திய கலைஞர், கவிஞர், எழுத்தாளர், கலை விமர்சகர், கலை அங்கீகரிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆவார். இவர் சர்வதேச அளவில் இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தினார்.
சிறீமதி லால் | |
---|---|
பிறப்பு | சிறீமதி லால் 1959 |
இறப்பு | 2019 |
அறியப்படுவது | ஓவியக் கலை, கவிதை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | "தி விண்டோ", "ஃபிளவர்ஸ் ஃபார் மை ஃபாதர்" |
பெற்றோர் | புருசோத்தம லால் சியாமா சிறீதேவி |
துணைவர் | பிரான்சிஸ் நியூட்டன் சோசா(1993-2002) |
வாழ்க்கைத் துணை | ஜித் குமார் |
உறவினர்கள் | ஆனந்த லால்(சகோதரர்) காளிதாஸ் நாக்(தாய்வழி தாத்தா) |
வலைத்தளம் | |
srimatilal |
இவர் மூன்று கவிதை புத்தகங்களை எழுதியவர்: வின்டோ (எழுத்தாளர்கள் பட்டறை, 1986), சிக்ஸ் பொயம்ஸ் (ஆறு கவிதைகள்) (லண்டன், 1997) [1] மற்றும் தி வாரியர்ஸ்: ஐ கெரியரி, ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வெளியிடப்பட்டது (லண்டன், 2006). ஸ்ரீமதி லால் எஃப் என். சோசா மற்றும் இந்தியாவில் கலாச்சாரம், சமூகம் மற்றும் மேம்பாட்டுக்கான இந்தியாவின் சமகால கலை இயக்கம் பற்றியும் எழுதினார் (2009). இவரது தந்தை புருஷோத்தம லாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தோ-ஆங்கிலேய எழுத்தாளர்களின் தொகுப்பை ஃபிளவர்ஸ் ஃபார் மை ஃபாதர்: டிரிபியூட் டு பி. லால் என்ற பெயரில் இவர் வெளியிட்டார். (2011).
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசிறீமதி லால் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் எழுத்தாளர்கள் பட்டறை நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற கவிஞரும் மகாபாரதத்தை மொழிபெயர்த்தவருமான புருசோத்தம லால் மற்றும் அவரது மனைவி சியாமாசிறீ தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய மூத்த சகோதரர் ஆனந்த லால் ஆவார்.[2][3]
இவர் லோரெட்டோ ஹவுஸில் படித்தார்.[4] கொல்கத்தா, பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.[5] இங்கு இவர் இஷான் அறிஞராகவும் இருந்தார். மேற்கத்திய மேரிலாந்து கல்லூரியில் ( மெக்டேனியல் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது) 'தி பிலிம் விஷன் ஆஃப் சத்யஜித் ரே' என்ற தலைப்பில் அவரது லிபரல் ஆர்ட்ஸ் பிலிம் படத்திற்கான இவரது ஆய்வுக் கட்டுரை நியூயார்க் பல்கலைக்கழகத்தின் திரைப்பட ஆய்வின் தலைவர் மற்றும் பேராசிரியர் வில்லியம் சிபோல்லாவால் உயர் முதல் நிலை மற்றும் மேக்னா கம் லாட் நிலை வழங்கப்பட்டது.
தொழில்
தொகுசத்யஜித் ரே மற்றும் விக்ரம் சேத் உட்பட பல்வேறு வங்காள கலாச்சார பிரமுகர்களுடன் லால் ஊடக நேர்காணல்களை நடத்தினார்.
இவர் இந்திய சமகாலக் கலையின் அங்கீகாரமாகவும் மற்றும் தகவலளிப்பில் ஒரு உறுதியாளராகவும் இருந்தார். ஒரு கலைஞராக, லால் தனக்கென ஒரு தனிப்பட்ட பாணியை உருவாக்கினார். இது அவரது படைப்பு எழுத்துக்கள் மற்றும் கவிதைகளை இவரது கலையுடன் இணைத்தது. தாகூர், கலீல் ஜிப்ரான், பிளேக், டான்டே கேப்ரியல் ரோசெட்டி மற்றும் சுருள்- படச்சித்திர ஓவியர்கள் மற்றும் இந்தியாவின் பழங்குடி நாட்டுப்புற கலைஞர்கள் ஆகியோர் இவருக்கு உத்வேகம் அளித்தவர்களில் முக்கியமானோர் எனலாம்.
இந்திய உள்நாட்டு கலை, கைவினை மற்றும் வடிவமைப்பு பற்றிய விரிவான காட்சி மற்றும் உரை ஆவணங்களில் லால் ஈடுபட்டிருந்தார். இவர் வங்காளத்தின் ஆசிரமங்களில் கலை மற்றும் கைவினை கற்பித்தார். கையெழுத்துக் கலை நிபுணராக, வடிவமைப்பாளராக, எழுத்தாளர் மற்றும் கெவ்லியன் சியோவின் டிராகன்கள் உட்பட கவிதை மற்றும் புனைகதை புத்தகங்களை விளக்கியவராக பல்வேறு பங்களிப்புகளைச் செய்தார்; தி சாஃப்ரான் கேட், மேஜிக் மேங்கோ ட்ரீ, மகாபாரதம் மற்றும் அவரது தந்தை பி.லால் எழுதிய மூன்று புதிர்கள்; தி விண்டோ மற்றும் தி வாரியர்ஸ் மற்றும் பல வெளியீடுகள் இவரால் வெளியிடப்பட்டவை ஆகும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Siddiqui, Rana (19 December 2003). "Arrival of the disciple...". தி இந்து.
- ↑ Joshi, Ruchir (28 November 2010). "BEYOND THE ORDINARY - The calligrapher of Calcutta-45". The Tribune. https://www.telegraphindia.com/opinion/beyond-the-ordinary-the-calligrapher-of-calcutta-45/cid/467475.
- ↑ Habib, Shahnaz (5 December 2010). "P Lal obituary". தி கார்டியன். https://www.theguardian.com/world/2010/dec/05/p-lal-obituary.
- ↑ Sen, Amreeta (14 June 1998). "Fire & Ice". தி ஸ்டேட்ஸ்மேன்.
- ↑ Sen, Amreeta (April 1997). "Eloquent Colours". தி ஸ்டேட்ஸ்மேன்.