விக்ரம் சேத்
விக்ரம் சேத் (பஞ்சாபி: ਵਿਕਰਮ ਸੇਠ, ஆங்கிலம்: Vikram Seth) (பிறப்பு ஜீன் 20, 1952) இந்தியாவைச் சேர்ந்த கவிஞர், நாவலாசிரியர், வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் குழந்தைகள் நூலாசிரியர். பத்ம ஸ்ரீ, பிரவாசி பாரதிய சம்மான், WH ஸ்மித் இலக்கிய விருது மற்றும் வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
விக்ரம் சேத் | |
---|---|
விக்ரம் சேத் (2012 இல்) | |
பிறப்பு | 20 சூன் 1952 கொல்கத்தா, இந்தியா |
தொழில் | எழுத்தாளர், கவிஞர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | தூன் பள்ளி, தேராதூன்
கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரி, ஆக்ஸ்போர்டு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் |
வகை | புதினங்கள், கவிதைகள், பயணக் கட்டுரை நூல்கள், குழந்தைகளுக்கான இலக்கியம், தன்வரலாறு |
கல்கத்தாவில் இருந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த விக்ரம் சேத் தன் இளமைப் பருவத்தில் பாட்டா நகர், தானாப்பூர், இலண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வாழும் நிலை ஏற்பட்டது. ஆரம்பக் கல்வியை தேராடூனில் பயின்ற விக்ரம் மேல் படிப்பை இங்கிலாந்தில் கற்றார். ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற விக்ரமிற்கு ஆங்கில இலக்கியம் மற்றும் சீன மொழியில் ஆர்வம் எற்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சில காலம் படித்த விக்ரம் அதன் பிறகு சீனாவில் உள்ள நான் ஜிங்க் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் பயின்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஜூன் 20, 1952 இல் கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) பிறந்தவர் விக்ரம் சேத். இவரது பெற்றோர் லீலா சேத் மற்றும் பிரேம் சேத் ஆவர். இவர்கள் பாட்னாவில் பணிபுரிந்ததால் சிறுவயதில் அங்குள்ள புனித சேவியர் பள்ளியில் கல்வி பயின்றார்.
சிலகாலம் லண்டனில் வாழ்ந்த சேத், 1957 இல் இந்தியாவிற்குத் திரும்பினார். வெல்காம் ஆண்கள் பள்ளியிலும் அதன்பின் தூன் பள்ளியிலும் கல்வி பயின்றார். தூன் பள்ளியில் பயின்றபோது அப்பள்ளி வார இதழின் முதன்மை-ஆசிரியராக இருந்தார்.[1] தூன் பள்ளியில் கல்வியை முடித்தபின் இங்கிலாந்தின் டோன்பிரிட்ஜ் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.[2][3][4] அங்கு பயிலும்போதுதான் அவருக்குக் கவிதை மீது ஆர்வம் தோன்றியது. அங்கு சீன மொழியும் பயின்றார். ஆக்ஸ்போர்டில் படிப்பு முடிந்த பின் கலிபோர்னியா சென்று பொருளாதாரப் படிப்பிற்காக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஸ்டான்போர்டில் படைப்பிலக்கியமும் சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் கற்றார்.
இங்கிலாந்தின் சாலிஸ்பரி என்ற இடத்திலுள்ள ஏஞ்ஜெலிக்கன் கவிஞர் ஜார்ஜ் ஹெர்பட்டின் வீட்டை 1996 ஆம் ஆண்டில் வாங்கிப் புனரமைத்து தனது வசிப்பிடமாகக் கொண்டுள்ள[5] இவர் இந்தியாவில் தன் பெற்றோருடன் வசிக்கும் வீடு புது தில்லியில் உள்ளது.
சேத் தன்னை ஒரு ஈரராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குரியக் குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவுக்கு எதிரான பிரச்சாரத்தின் தலைவரானார். [6] இவரது தாய் லீலா சேத், தனது நினைவுக் குறிப்பில் சேத்தின் பாலின நிலை குறித்தும் தான் அதுபற்றி அறியவந்த விவரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.[7]
இவர் எழுதிய சில நூல்கள்
தொகுபுதினங்கள்
தொகு- தி கோல்டன் கேட் (The Golden Gate) (1986)[8]
- எ சூட்டபில் பாய் (A Suitable Boy) (1993)
- அன் ஈக்குவல் மியூசிக் (An Equal Music) (1999)[9]
- எ சூட்டபில் கேர்ல் (A Suitable Girl) (2013)
கவிதை
தொகு- மேப்பிங்ஸ் (Mappings) (1980)
- தி ஹம்பில் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் கார்டன் (The Humble Administrator's Garden) (1985)
- ஆல் யூ ஹூ ஸ்லீப் டுனைட் (All You Who Sleep Tonight) (1990)
- பீஸ்ட்லி டேல்ஸ் (Beastly Tales) (1991)
- திரீ சைனீஸ் போயட்ஸ் (Three Chinese Poets) (1992)
- தி ஃப்ராக் அண்ட் தி நைட்டிங்கேல் (The Frog and the Nightingale) (1994)
குழந்தைகளுக்கான புத்தகம்
தொகு- பீஸ்ட்லி டேல்ஸ் (Beastly Tales) (1991)
மற்றவை
தொகு- ஃபிரம் ஹெவன் லேக்: டிராவல்ஸ் த்ரு சிங்கியாங் அண்ட் திபெத் (From Heaven Lake: Travels Through Sinkiang and Tibet) (1983)
- டூ லைவ்ஸ் (Two Lives)
- தி ரிவர்டு எர்த் (The Rivered Earth)[10]
விருதுகள்
தொகு- 1983 – தாமஸ் குக் பயண நூல் விருது (ஃபிரம் ஹெவன் லேக்: டிராவல்ஸ் த்ரு சிங்கியாங் அண்ட் திபெத்)
- 1985 – காமன்வெல்த் கவிதை விருது (ஆசியா) தி ஹம்பில் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் கார்டன்
- 1988 -சாகித்திய அகாதமி விருது (ஆங்கிலம்) (தி கோல்டன் கேட்)[11]
- 1993 – ஐரிஷ் டைம்ஸ் இண்டர்நேஷனல் ஃபிக்ஷன் பரிசு எ சூட்டபில் பாய்
- 1994 – காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு எ சூட்டபில் பாய்
- 1994 – டபிள்யூ ஹெச் ஸ்மித் இலக்கிய விருது எ சூட்டபில் பாய் [12]
- 1999 – வோடோபோன் கிராஸ்வேர்டு புத்தக விருது அன் ஈக்குவல் மியூசிக் [13]
- 2001 – எம்மா (EMMA) அன் ஈக்குவல் மியூசிக் [14][15]
- 2005 – பிரவாசி பாரதிய சம்மான்[16][17]
- 2007 – பத்ம ஸ்ரீ (இலக்கியம் & கல்வி)[18]
- 2013 - இந்தியாவின் சிறந்த 25 நபர்கள்[19][20]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vikram Seth's Founder's Day Address, The Doon School, Penguin Books of Modern Speeches (2009) p.34 "...edited the Weekly and did other things"
- ↑ "Vikram s Christi College, Oxford".
- ↑ Vikram Seth's Art: An Appraisal - Roopali Gupta - Google Books
- ↑ Vikram Seth's A Suitable Boy: A Reader's Guide - Angela Atkins - Google Books
- ↑ "Listening to God's melodies", தி டைம்ஸ், London, 29 July 2006, பார்க்கப்பட்ட நாள் 2007-09-05
- ↑ "It Took Me Long To Come To Terms With Myself. Those Were Painful Years.", Outlook India, 2 October 2006, பார்க்கப்பட்ட நாள் 2007-09-05
- ↑ http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2149010/Delhi-High-Court-Chief-Justice-Leila-Seth-reveals-mothers-trial-leap-faith.html
- ↑ "Vikram Seth", DoonOnline: Features & Spotlights, archived from the original on 2006-05-16, பார்க்கப்பட்ட நாள் 2007-09-05.
- ↑ Albertazzi, Silvia (2005-01-20), "An equal music, an alien world: postcolonial literature and the representation of European culture", European Review, Cambridge University Press, vol. 13, pp. 103–113, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S1062798705000104.
- ↑ "Times of India by Shobha John, TNN: 27 Nov 2011, 05.13 am IST : 'I got drunk to write, says Vikram Seth'", The Times Of India, India, 27 November 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-17. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
- ↑ http://www.goodreads.com/award/show/480-wh-smith-literary-award
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-22. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
- ↑ http://www.dailymail.co.uk/tvshowbiz/article-41570/Attenborough-collects-lifetime-achievement-award.html
- ↑ http://film.theguardian.com/News_Story/Exclusive/0,4029,479559,00.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-01-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
- ↑ http://www.outlookindia.com/article.aspx?233715
- ↑ http://www.ndtv.com/ndtv-at25/event
- ↑ http://www.bestmediainfo.com/2013/12/ndtv-honours-25-greatest-global-living-indian-legends-as-it-turns-25/
புற இணைப்புகள்
தொகு- The Telegraph ("Love split delayed Suitable Boy sequel") பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம்
- British Council Bio
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Vikram Seth
- "Poetic License" by Cynthia Haven, "Stanford Magazine," May/June 1999
- Selected poems of Vikram Seth from Poemist
- BOMB Magazine interview with Vikram Seth by Ameena Meer
- The Doon School Founder's Day speech, 1992