சிறீமான் பிரபுல்லா கோசுவாமி
சிறீமான் பிரபுல்லா கோசுவாமி (Sriman Prafulla Goswami) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய மாநிலமான அசாமைச் சேர்ந்த இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[1] 1952-57, 1957-62 மற்றும் 1962-67 ஆண்டுகளில் அசாம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [2]
மாநிலங்களவையில், இவர் 1967-72 மற்றும் 1974-80 காலத்தில் அசாம் மாநிலத்தை மநிலங்களவை உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3]
1972 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.. 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று கவுகாத்தியில் தனது 96 ஆவது வயதில் காலமானார். இவருக்கு உஷா என்ற மனைவியும் ஆறு குழந்தைகளும் இருந்தனர்: இவர்களில் நான்கு பேர் மகன்கள் மற்றும் இரண்டு பே மகள்கள் ஆவர்.. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ The Indian And Pakistan Year Book And Who's Who 1950. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
- ↑ "Assam Assembly Election 1962". Archived from the original on 27 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "Rajya Sabha Members Biographical Sketcheds 1952–2003" (PDF). Rajya Sabha Secretariat New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
- ↑ "Sriman Prafulla Foswami No More". Archived from the original on 27 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.