சிறீவதி மாசுமுந்தரி
சிறீவதி மாசுமுந்தரி (1904-2005), பெரும்பாலும் மாசுமுந்தரி என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்தோனேசிய காட்சிக் கலைஞர் ஆவார். இவர் பிறந்த இடமான கிரேசிக்கிலிருந்து டமர் குருங் என்று அழைக்கப்படும் பாரம்பரிய வகையான விளக்கு-ஓவியத்துடன் பணிபுரிந்த ஓர் கலைஞர் ஆவார்.[1][2][3][4] 1987 இல் தனது முதல் பொதுக் கண்காட்சியை நடத்தி, வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர் மிகவும் பிரபலமடைந்தார். 1990களில் இவரது படைப்புகள் கொம்பாசு போன்ற தேசிய இதழ்கள், தேசிய கலைக் கண்காட்சிகள் மற்றும் இந்தோனேசிய சனாதிபதி மாளிகையில் இடம்பெற்றன.[4] சில சமயங்களில் நாட்டுப்புற கலை அல்லது அப்பாவி கலை என விவரிக்கப்படும் இவரது படைப்புகள், கொண்டாட்டங்கள், குடும்பங்கள், வேலை செய்யும் பெண்கள் மற்றும் பல காட்சிகளை அடிக்கடி சித்தரிக்கின்றன.[5]
சுயசரிதை
தொகுசிறீவதி மாசுமுந்தரி 1904 ஆம் ஆண்டு கிழக்கு இந்தியத் தீவுகளில் உள்ள சோரபாஜா மாகாணத்தில் உள்ள கிரெசிக் மாவட்டத்தில் உள்ள டெலோகோ போசோக் கிராமத்தில் (இப்போது கிழக்கு சாவா மாகாணத்தில், இந்தோனேசியாவில் அமைந்துள்ளது) பிறந்தார். இவர் கலைக்குடும்பத்தில் பிறந்த மூன்று உடன்பிறந்தவர்களில் மூத்தவர் ஆவர். அவரது பெற்றோரான சினோம் மற்றும் மாக் இஜா விளக்கு மற்றும் வயாங் கலைஞர்கள் ஆவர். இவர் பத்து வயதில் டமர் குருங் என்று அழைக்கப்படும் பாரம்பரிய வகையான விளக்கு-ஓவியத்தை வரைய கற்றுக் கொண்டார்.
இவர் பல தசாப்தங்களாக ஓவிய கலை வடிவத்தில் பணியாற்றினார், ஆனால் பெரும்பாலும் உள்ளூர் அங்கீகாரத்தை மட்டுமே பெற்றார். இவர் ஆரம்பத்தில் மெழுகு காகிதத்தில் உணவு சாயங்களைக் கொண்டு ஓவியம் வரைதல் போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தினார்; பிந்தைய ஆண்டுகளில் அவர் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மற்றும் நிரந்தர குறிப்பான்கள் மற்றும் தடமறியும் காகிதம் போன்ற நீடித்த பொருட்களை பயன்படுத்தினார். பல தசாப்தங்களாக விளக்குகளை உருவாக்கிய பிறகு, 1980 களில் கிரேசிக்கைச் சேர்ந்த ஒரு உள்ளூர் கலைஞர், ஜகார்த்தாவில் உள்ள ஒரு கலை அங்காடியில் தனது படைப்புகளைக் காண்பிக்கும்படி கூறினார். அந்த முதல் தனிக் கண்காட்சி 1987 இல் நடைபெற்றது. பின்வந்த ஆண்டுகளில் இவரது படைப்புகள் தொடர்ந்து அங்கே காண்பிக்கபடுகின்றன.[2][3][4] 1989 ஆம் ஆண்டு கொம்பாசு இதழ் நாட்காட்டியின் அட்டையில் இவரது சில விளக்கு ஓவியங்களை வெளியிடப்பட்டது.[4] இந்த நேரத்தில் அவர் தொடர்ந்து ஏராளமான விளக்குகளை உருவாக்கினார்; இவை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டன.[3]
இவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டு வரை கலையை உருவாக்கி வெளிப்படுத்தினார்.[3] இவர் தனது பிற்காலங்களில் துணி ஓவியத்தில் பணிபுரிந்து வந்தாலும் ரமலான் மாதத்தில் வருடத்திற்கு சுமார் 30 விளக்குகளை உற்பத்தி செய்தார். [3] இவர் 25 செப்டம்பர் 2005 அன்று இறந்தார். இவர் மரணத்திற்குப் பிறகு இவரது படைப்புகள் கண்காட்சிகளிலும் புத்தகங்களிலும் தொடர்ந்து காட்டப்பட்டன. இது 2007 இல் இந்தோனேசியாவின் தேசிய கேலரியில் பெண்ணியம் மற்றும் இந்தோனேசிய சமகால கலை பற்றிய கண்காட்சியின் ஒரு பகுதியாகவும், அதே ஆண்டில் ஒரு புத்தகத் தொகுப்பிலும் தோன்றியது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ismoerdijahwati Koeshandari, Ika. Damarkurung dari masa ke masa (in இந்தோனேஷியன்). Dewan Kesenian Jawa Timur.
- ↑ 2.0 2.1 Nelson, Roger. Modern art of Southeast Asia : introductions from A to Z. Singapore. p. 50.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Lantern wizard going strong at 100" (in en). Jakarta. 17 June 2003. p. 20.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Sriwati Masmundari". Jogja Bienale 2021 (in ஆங்கிலம்). 26 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 November 2021.
- ↑ The journey of Indonesian painting : the Bentara Budaya collection. Jakarta: Kepustakaan Populer Gramedia. p. 93.
- ↑ Dirgantoro, Wulan (2019). "Interrogating the Feminine in Indonesian Modern and Contemporary Art". Southeast of Now: Directions in Contemporary and Modern Art in Asia 3 (1): 107. doi:10.1353/sen.2019.0005. பன்னாட்டுத் தர தொடர் எண்:2425-0147.